முத்திரைகள் மீதுள்ள Jeffersonville, Indiana, USA 63-0324M 1(ஒரு சகோதரன் அன்னிய பாஷையில் பேசுகிறார். அதற்கு வேறொரு சகோதரன் வியாக்கியானம் செய்கிறார். சபையார் சத்தமாக ஜெபிக்கின்றனர்-ஆசி) எங்கள் பரமபிதாவே, தேவனுடைய சமூகத்தில் மீண்டுமாக தேவனுடைய வார்த்தையின்மீது நாங்கள் ஐக்கியம் கொள்ளும் இந்த நேரத்திற்காக உண்மையிலேயே நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். இந்தக் காலையிலே எங்களுக்கு உதவிசெய்யவும், எங்களை ஆசீர்வதிக்கவும், நீர் எங்களுடன் இருப்பதற்காக நாங்கள் அதிக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். எங்களுடைய விளக்குகள் எண்ணெயினால் நிரப்பப்பட்டதாகவும், திரி வெட்டப்பட்டு எரிகிறதாய் இருக்கவும், உம்முடைய மகத்தான நாமம் கனமடைய நீர் எங்களை இப்பொழுது உபயோகப்படுத்தும். எங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுகிறோம். தேவனுடைய நேசகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக் கொள்ளுகிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 2செய்தி போய்க்கொண்டிருக்கும்போது, நான் உள்ளே வந்துக் கொண்டிருந்தேன். ஆகவே நான்... நம்முடைய விளக்குகள் நிரப்பப்பட்டதாய் வைத்திருக்கவேண்டியது அவசியமாய் இருக்கிறது என்பது உண்மையாகும். இப்பொழுது செய்துக்கொண்டிருப்பது போலவே நீங்கள் செல்ல முடியாது; கவனியுங்கள். ஏனென்றால் எண்ணெய் எரியும்போது திரியில் கரி உண்டாகிறது. ஆகவேதான் திரி வெட்டப் படவேண்டும். திரியின் முனையில் உள்ள கரியின் நிமித்தம் உங்கள் விளக்கின் திரி வெட்டப்பட்டதாய் இருக்கட்டும். என்னுடைய வயதுள்ள அநேக மக்கள், நிலக்கரியின் எண்ணெய் விளக்குகளை நாங்கள் உபயோகப்படுத்தியிருக்கிறோம். அது-அது-அது - எரியும்போது திரியின் முனையில் கரி உண்டாகும். அப்பொழுது அது வெளிச்சத்தை பாதிக்கிறதாய் இருக்கும், ஆகவே, ''கிறிஸ்துவுக் குள்ளிருக்கும் உன்னத அழைப்பின் இலக்கை நோக்கி முன்னேற,'' திரியின் முனையில் உள்ள கரியைத் துண்டித்தவர்களாக இருக்க வேண்டும். இப்பொழுது, ஈஸ்டர் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் உள்ளும், புறமும் இப்பொழுது இது ஒரு வெகு அருமையான காலை நேரமாக இருக்கிறது. 3ஆகவே, கர்த்தருக்குச் சித்தமானால் இன்றிரவு கடைசி முத்திரைக்கு வருவோம். அது ஒரு மிக, மிக இரகசியமான முத்திரையாய் இருக்கிறது... ஏனென்றால், அதை அறிந்துக்கொள்ளத்தக்கதாக வேதத்தில் எந்த இடத்திலும் அடையாளங்களினாலுங்கூட கூறப் படவில்லை. அது பரலோகத்திலிருந்து நேரடியாக வரவேண்டும். இது எனக்கு ஒரு கடினமான வேளையாக இருக்கிறது. இது ஒரு வாரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நான் என்று. நான் ஒரு அறையிலேயே அடைந்திருப்பது இன்றைக்கு எட்டாவது நாள். இங்கே அநேக வேண்டுதல்கள் இருப்பதைக் காண்கிறேன். இவர்களில் அநேகர் நேரில் சந்தித்துப் பேச விரும்புகிறார்கள். நானும் அதை விரும்புகிறேன். நான் அவ்வித சந்திப்பை அளிக்க விரும்புகிறேன். ஆனால், இப்பொழுதே உடனடியாக அதை செய்யமுடியாது. அது ஏன் என்பதை நீங்கள் புரிந்துக்கொண்டிருப்பீர்கள். இப்பொழுது கர்த்தருடைய சித்தத்தின் வெளிப்படுத்தலை அறிந்துக்கொள்ள நாம் முயற்சி செய்துக்கொண்டிருக்கிறோம், நீங்கள் பாருங்கள். இப்பொழுது, நேரில் சந்திக்கும் சந்திப்பை வைத்துக் கொள்ளுவோமானால் நம்மை அது வேறு திசைக்குக் கொண்டு சென்று விடும். பாருங்கள்! வியாதியஸ்தர்களுக்காக ஜெபத்தில் இருப்பது முற்றிலும் வேறொரு காரியமாயிருக்கிறது; நீங்கள்... தரிசனங்களையும், அதற்குரிய காரியங்களையும் போதிப்பது வேறொரு காரியமாக இருக்கிறது. அப்பொழுது நீங்கள் வேறுவிதமாக அபிஷேகிக் கப்படுகிறீர்கள். ''நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம்' என்று வேதம் கூறுகிறது. ''நீர்க்கால்கள்'' - பாருங்கள்! ஒரே தண்ணீர் இந்த வழியாக, இந்த வழியாக, இந்த வழியாக வெவ்வேறு வாய்க்கால்களின் வழியாக செல்லுகிறது. தண்ணீரை எந்த வாய்க்காலின் வழியாக பெறுகிறோம் என்பதின் மேல் சார்ந்திருக்கிறது - எல்லாம் ஒரே ஆவிதான். 4பவுல், 1 கொரிந்தியர் 12-ல், ''வரங்கள் அநேகம், ஆனால் ஆவியோ ஒன்று என்று கூறியுள்ளார்.'' ஆகவே, நீங்கள் ஒரு காரியத்தில் ஈடுபட்டிருந்துவிட்டு, மற்றொரு காரியத்திற்கு வரும்போது ஆவியின் வித்தியாசமான நடத்துதலைப் பார்க்கிறோம், நான் என்ன கூற நினைக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் வார்த்தையை போதிக்கும்போது, மக்கள் அதைப் புரிந்துக் கொள்ளும்படி செய்கிறீர்கள். இப்பொழுது அவர்களுடைய இருதயமெல்லாம் 'முத்திரைகள் என்றால் என்ன?'' என்பதில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இரவின்பின் இரவாக நான் இங்கு வரும்போதெல்லாம் ஒரே இறுக்கமாக (Tension) இருப்பதால், ஒரு அமைதியான சூழ்நிலை வரும் வரை நான் ஏதோ ஒன்றை பேசவேண்டியதாய் இருக்கிறது. அதன் பிறகு பரிசுத்த ஆவியானவர் முத்திரையை உடைக்கிறார். ஆகவே அப்பொழுது அப்பொழுது நான், ஒவ்வொரு இரவும் அதைப் போன்றிருக்க வேண்டியதாயுள்ளேன். இவ்விதமாக மக்களின் இருதயம் ஒரு காரியத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும்போது, அவர்களை திடீரென்று வேறொரு காரியத்திற்கு திருப்புவது கடினமாக இருக்கிறது. 5அப்பொழுதுகூட உங்கள் மத்தியிலேயே நடந்துக் கொண்டிருக்கும் காரியங்களை உங்களால் காணமுடிவதில்லை என்பதை நான் அறிவேன். நீங்கள் அதை அறிந்துக் கொள்ளவில்லை என்பதை நான் நிச்சயம் அறிவேன். பாருங்கள்? ''சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் அவ்விதம் கூறுவது ஒரு கடினமான காரியம்“ என்று நீங்கள் கூறலாம். அது அவ்விதம்தான் என்பதை நான் அறிவேன். ஆனால் பாருங்கள். இப்பொழுது நான் இதை மாத்திரம் உங்களுக்குக் கூறட்டும். இந்த ஒலி நாடாக்கள் நமக்கு மாத்திரம் என்று நினைக்கிறேன். ஆனால் நான் அதைக் கூறட்டும். பாருங்கள் நீங்கள் அதை... நீங்கள் இதை புரிந்துக் கொள்ள முடியாது என்று நான் கூறுகிறேன். ஆகவே எதற்கும் உங்கள் சொந்த வியாக்கியானத்தைக் கொடுக்கவேண்டாம். பாருங்கள்? அவ்விதமாகச் செய்யும்போது நீங்கள் சத்தியத்தை விட்டு தூரமாகப் போய்விடுவீர்கள். உங்கள் கண்களில் தேவன் எனக்கு தயவு கிடைக்கும்படி செய்திருந்தால், இப்பொழுது நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களென்றால் என்னுடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுங்கள். 6நீங்கள் அந்த வெளிப்படுத்தல்களையும், மற்ற காரியங்களையும் நான் நீண்ட காலமாக இங்கே உங்களோடு இருந்து வருகிறேன். இந்த வெளிப்படுத்தல்கள் எப்பொழுதுமே உண்மை யானவைகளாக இருந்திருக்கிறது என்பதை அறிவீர்கள். இப்பொழுது இந்த வெளிப்படுத்தல்கள் வார்த்தையோடு பொருந்துவதால் இரட்டிப்பாக நிரூபிக்கப்படுகிறது. பாருங்கள்? ஆகவே இது 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்பதாக அமைந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது சரி. பாருங்கள்? அது உங்களுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது என்னை உங்கள் சகோதரனாக பாவித்து என்னுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள். எதற்கும் உங்கள் சொந்த வியாக்கியானத்தைக் கூறவேண்டாம். ஒரு நல்ல கிறிஸ்தவ ஜீவியம் செய்ய முயலுங்கள். ஏனென்றால் நீங்கள் அப்படி வியாக்கியானம் செய்யும் போது உண்மையான காரியத்தைவிட்டு விலகிப்போய்விடுவீர்கள். பாருங்கள்? நீங்கள் அப்படிச் செய்யும் போது உண்மையான காரியத்தைவிட்டு மறுபடியும் விலகிப் போய் விடுவீர்கள். 7ஆகவே, நீங்கள் எல்லோரும் சுயஉணர்வு உள்ளவர்களாக இருந்து, ஏதோ ஒரு இரகசியமான காரியம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்கள். அது நடந்து கொண்டிருக்கிறது, அது என்ன என்பதை நான் அறிந்திருக்கிறேன். இப்பொழுது, நான் அதை கூறப்போவதில்லை. அது என்ன என்பதை நான் அறிந்துக்கொள்ளச் செய்ததே தேவனுடைய கிருபையாகும். அது ஏதோ ஒரு மிகப்பெரியதாக இருக்கிறது. அது இப்பொழுதே நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அதை கண்டுக் கொள்வதற்கு உலகத்திலே ஒரு வழியும் இல்லை. அது... நான்... அது என்னவென்பதை நான் அறிவேன் என்று வேதத்தை என் கையில் பிடித்தவனாகக் கூறுகிறேன். இது முன்னமே உங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, எந்த வியாக்கியானமும் கொடுக்காமல் என்னை உங்கள் சகோதரனாக விசுவாசியுங்கள். பாருங்கள்? நாம் ஒரு மகத்தான நேரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் வசிக்கும் இக்காலத்தில்..... நல்லது, நாம்... இப்பொழுது, நீங்கள் உண்மையாக தாழ்மையுள்ளவராகவும், ஒரு கிறிஸ்தவனாகவும், தேவனுக்காக ஜீவிக்கவும், உங்களுடைய உடன் வாழும் மக்களுடன் உண்மையுள்ளவராகவும், உங்களை நேசிக்காதவர்களை, நீங்கள் நேசிக்கிறவர்களாகவும் வாழ முயற்சிக்கவும்; நீங்கள் அதைச் செய்ய... நீங்கள் பாருங்கள், நீங்கள் ஏதாவது ஒன்றைச் செய்ய முற்பட்டால், நீங்கள் மர்மமான ஒன்றைச் செய்ய முற்படுகிறீர்கள். அதனால் தேவனுடைய உண்மையான திட்டத்தைக் குழப்பிவிடுகிறீர்கள். பாருங்கள்? 8நேற்று பிற்பகல் என்னுடைய அறையில் ஏதோ ஒன்று சம்பவித்தது. என்னால் - என்னால் அதிலிருந்து விலகவே முடியவில்லை. நீங்கள் பாருங்கள் இரண்டு வாரத்திற்கு முன் ஏதோ ஒன்று நடந்தது. நான் இந்த உலகத்தில் ஜீவிக்கும் வரைக்கும் நான் - என்னால் அந்த அனுபவத்திலிருந்து விலகவே முடியாது. இங்கிருக்கும் சபையானது இவைகளை அறிந்துகொள்ள வேண்டியதில்லை. ஆகவே எதைக் குறித்தும் வியாக்கியானம் கூற வேண்டாம். பாருங்கள்? உங்களுக்கு என்ன அறிவிக்கப்பட்டதோ அதை நினைத்துக்கொண்டு ஒரு கிறிஸ்தவ ஜீவியம் செய்து முன்னேறுங்கள். உங்கள் சபைக்குச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கே ஒரு உண்மையான ஒளியாக இருங்கள். கிறிஸ்துவுக்காக வாஞ்சையுள்ள வர்களாய் இருந்து, நீங்கள் எவ்வளவாய் அவரை நேசிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குக் கூறுங்கள். எப்பொழுதும் உங்கள் சாட்சியை அன்புடன் மக்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பாருங்கள்? மாற்றி கூறுவீர் களானால், நீங்கள் பாதையை விட்டு விலகினவர்களாய் இருப்பீர்கள். பாருங்கள்? ஒவ்வொரு முறையும் நீங்கள் அதைச் செய்ய முயற்சித்த போது வழிவிலகினீர்கள். பாருங்கள்? ஆகவே, வியாக்கியானம் செய்ய முயலவேண்டாம். முக்கியமாக இன்றிரவு, அந்த முத்திரை உங்கள் முன்பாக திறக் கப்படும்போது, பாருங்கள், அதை வியாக்கியானிக்க முயற்சி செய்ய வேண்டாம். பாருங்கள்? தாழ்மையாக இருந்து எளிமையான செய்தியுடன் முன்னேறுங்கள். ''சகோதரன் பிரான்ஹாமே, நாங்கள் ஜீவனுள்ள தேவனுடைய சபையாக அவ்விதம் செய்யக்கூடாதா?'' என்று நீங்கள் கூறலாம். இல்லை. இப்பொழுது, வேண்டாம். 9நான் உங்கள் நன்மைக்காகவே இதைக் கூறுகிறேன் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். பாருங்கள்? நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் கூறுகிறேன். இப்பொழுது நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களானால், நான் சொல்வதற்குச் செவிசாயுங்கள். பாருங்கள்? பாருங்கள்? இப்பொழுது இங்கே, ஒலி அலைகளை இழுக்கும் ரேடியோவின் கம்பம் ஒன்று இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம். அதை, உங்கள் கரத்தில் இருக்கும் ஒரு பட்டயத்தை சரியான முறையில் உபயோகிக்க வேண்டியதுபோல் உபயோகிக்க வேண்டியதாய் இருக்கிறது. அது செய்தியையோ அல்லது தீமையான காரியங்களையோ இழுத்துக் கொடுக்கக்கூடும். இப்பொழுது, உதாரணமாக, சாதாரண மக்கள் மத்தியில் ஆவி சற்று ஊற்றப்படும்போது அவர்கள் மதப்பாகுபாடுகளை உண்டாக்கிக் கொண்டு, தங்களுக்கென்று சிறு அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள். பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் அவ்விதம் செய்ய வேண்டாம். பாருங்கள்? இப்பொழுது நீங்கள் இருக்கிறவண்ணமாகவே இருக்க நினைவிருக்கட்டும். 10“நல்லது, கர்த்தர் காண்பிக்கிறது...'' என்று நீங்கள் கூறுவீர்கள். இல்லை, இப்பொழுது ஜாக்கிரதையாய் இருங்கள். பாருங்கள்? இப்பொழுது கவனியுங்கள். ஏதோவொன்றை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். பாருங்கள் இதே நேரத்தில் இந்த அறையில் பத்தாயிரக்கணக்கான ஓசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) மக்களின் உண்மையான ஓசைகள் மின் அலைகளாக வந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் ஏன் அவைகளை கேட்க முடிவதில்லை? அவைகள் ஓசைகள். அது சரிதானே? (“ஆமென்''). இதே நேரத்தில் அவைகள் இங்கே அலைகளாக மிதந்துக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த அறையில் மனித உருவங்கள் அசைந்து கொண்டிருக்கின்றன. அது சரிதானே? (ஆமென்). அப்படியென்றால் நீங்கள் ஏன் அவைகளைப் பார்க்க முடியவில்லை? பாருங்கள்? என்னுடைய சத்தத்தைப் போலவே அவைகளும் உண்மையான சத்தங்கள். நல்லது, அப்படியென்றால் நீங்கள் ஏன் அவ்வோசைகளைக் கேட்க முடியவில்லை? பாருங்கள்? அவைகள் வெளிப்படுவதற்கு முன்பு அவ்வொலியின் அலைகள் ஏதோ-ஒன்றின் மீது படவேண்டியதாய் இருக்கிறது. பாருங்கள்? இப்பொழுது உங்களுக்குப் புரிகிறதா? (''ஆமென்'') 11இப்பொழுது ஒன்றுக்கும் வியாக்கியானம் கூறவேண்டாம். நீங்கள் எதையாகிலும் அறிந்து கொள்ளவேண்டும் என்று தேவன் விரும்புவாரானால் அதை உங்களுக்கு அனுப்புவார். பாருங்கள்? ஆகவே, இப்பொழுது உண்மையாகவே அமைதியாயிருங்கள். ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. இப்பொழுது நீங்கள் உண்மையாக... நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? (சபையார் 'ஆமென்'' என்கின்றனர்-ஆசி) நீ ஒரு கிறிஸ்தவனாக இருக்க உன்னை ஒரு வித்தியாசமானவனாக்கிக் கொள்ள முயலாதே. ஏனென்றால், உன்னையே நீ தேவனை விட்டு புறம்பாகக் கொண்டு போய்விடுவாய். ஆகவே, நீங்கள் - நீங்கள் - நீங்கள்... நீங்கள் புரிந்துகொள்ளக் கூடுமானால், இதுதான் மூன்றாவது இழுப்பு. பாருங்கள்? நீங்கள் - நீங்கள் இதை அந்நாளிலேயே கண்டு பிடித்திருக்க வேண்டும். பாருங்கள்? மற்ற இரண்டு இழுப்புகளினால் போலியான காரியங்கள் உண்டானதுபோல் இதில் இருக்காது என்பதை நினைவுகூருங்கள். பாருங்கள்! அதுதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது. இந்த அறையிலே இப்பொழுது ஏதோ ஒன்று நடந்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது நினைவிருக்கட்டும். இந்த அறையில் ஏதோ ஒன்றுள்ளது. இந்த அறையில் உண்மையிலேயே தேவதூதர்களும், தேவனுடைய சத்தமும் இருக்கின்றன. பாருங்கள்? ஆனால் நீங்கள் எப்படி... உங்களால் முடியாது... இயற்கையான சத்தத்தை ஒரு கருவியின் மூலமாக அனுப்பினாலன்றி அதை நீங்கள் கேட்க முடியாமலிருக்க, ஆவிக்குரிய சத்தத்தை எப்படிக் கேட்க முடியும்? 12இங்கில்லாத யாரோ ஒருவர் பாடுகிற இந்த குறிப்பிட்ட பாட்டின் ஓசைகள் இப்பொழுது இங்கிருப்பதை நீங்கள் நம்பத்தக்கதாக நிரூபிக்கக்கூடும். பாருங்கள்? அலைகளை இழுக்கக்கூடிய கருவியின் மேல் அவ்வலைகள் படும்போது, அது உண்மையான வியாக்கியானத்தை அளிக்கும். உருவங்கள் திரையின் மீது காணப்படுவது இதை உறுதிப்படுத்துகிறது, நான் என்ன கூற விரும்புகிறேன் என்பதை அறிந்து கொண்டீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்- ஆசி). இப்பொழுது, தேவ ஆவியானவர் உண்மையான வார்த்தையின் மூலமாக பேசும்போது, அது சரியென்று தன்னைக் காண்பிக்க தன்னைத் தானே நிரூபிக்கின்றது. இப்பொழுது புரிந்துக் கொண்டீர்களா? (சபையார் 'ஆமென்“ என்கின்றனர் - ஆசி) அது சரிதான். இப்பொழுது மீண்டுமாக ஜெபிப்போம். 13பரம பிதாவே, எங்களுக்கு ஆவிக்குரிய பரிமாணத்தை திறந்திருப்பதற்கு எடுத்துக்காட்டாக நாங்கள் இப்பொழுது இயற்கையான காரியமாக இந்த புத்தகத்தை திறக்கப் போகிறோம். தேவனே, இந்த கேள்விகளுக்கு சரியான விடையளிப்பதனால் அது மக்களுக்கு பிரயோஜனமாக இருந்தது என கூறத்தக்கதாக இப்பொழுது எனக்கு உதவிசெய்யும். இவைகளை அவர்கள் புரிந்துகொள்ளுவதற்கு ஏதுவாக இருக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக தேவனுக்கு கனமும் மகிமையுமாக நாங்கள் ஒருமித்து வாழ்வதற்கு மக்கள் அறிந்துகொள்ள, நான் அதை புரிந்துகொண்டு, பிறகு மக்களுக்கு அதை அளிக்க அருள் செய்தருளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! ஆமென்! 14இப்பொழுது, நான் அதை மாத்திரம் கூறிட விரும்பினேன். இங்கிருக்கும் இக்கருவி ஒலிப்பதிவு செய்வதைக் கட்டுப்படுத்துகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இங்கிருக்கும் இது சாய்வு மேஜையின் விளக்காய் உள்ளது. ஒலிப்பதிவு செய்வதைக் கட்டுப் படுத்தும் கருவி இங்கிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஒலிப்பதிவு செய்வதை எப்பொழுது நிறுத்தவேண்டும், எப்பொழுது நிறுத்தக்கூடாது என்பதை ஒலிப்பதிவு செய்யும் அறையில் உள்ள சகோதரர்களுக்கு நான் சைகைக் காட்டவேண்டும் என்று எனக்கு அறிவிக்கப் பட்டிருக்கிறது. பாருங்கள், ஒலி நாடாக்கள் உலகம் முழுவதும் செல்லும் ஒரு ஊழியமாக இருக்கிறது. இது எல்லாவிதமான மொழிகளிலும் எல்லா விடங்களுக்கும் செல்லுகிறது. இங்கு சொல்லப்படும் சில காரியங்கள் மற்ற இடங்களில் சொல்ல முடியாது. ஆகவேதான் ஒலிப்பதிவை சிறிது நேரம் நிறுத்த வேண்டியதாய் இருக்கும். 15இப்பொழுது கேள்விகளுக்கு விடையளிப்பது ஒரு முக்கியமான காரியமாய் இருக்கிறது. ஆகவே, நான்.. நான்... இப்பொழுது.... சில கேள்விகள் செய்தியோடே - முத்திரைகளோடே சம்பந்தமற்றவைகளாய் இருக்கின்றன. நான் அவைகளுக்கு பதிலளிக்க முயற்சிப்பேன். அவர்களுக்கு கூறப்பட்டபடியே இக்கேள்விகளுக்கெல்லாம் நான் அவர்களுக்கு பதில் அளிக்கக் கொடுத்திருக்கிறார்கள். அநேக விண்ணப்பங்கள் வியாதியஸ்தர்களுக்காகவும், மற்ற காரியங்களுக்காகவும் ஜெபிக்கும்படி கேட்கும் வேண்டுதல்களாக இருப்பதால், அவைகள் பதில் அளிப்பதற்குரிய கேள்விகளாக இல்லையென்று எனக்கு அறிவிக்கப்பட்டது. இன்னும் சில விண்ணப்பங்கள் மற்ற வேதவார்த்தைகளைக் குறித்த கேள்விகளாக இருக்கின்றன. நேரமிருந்தால் எவ்வளவு சிறந்த முறையில் அவைகளுக்குப் பதில் அளிக்க முடியுமோ, அவ்வளவாகச் செய்யலாம். இப்பொழுது நான் ஒரு தவறு செய்வேனென்றால் தவறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்வதில்லை. ஆகவே, எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) ஆமென். கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் உன்னதங்களைக் குறித்துப் பேசும்போது அவ்விதமாகத்தான் இருக்கும்! என்னே! அற்புதமான இடம். என்னே! அற்புதமான நேரம். 16இக்கூடாரத்தின் பிரசங்க பீடத்தின் பின்னாக நான் நின்று செய்தி கொடுத்த எல்லா காலத்திலும், இப்பொழுது இருக்கும் சூழ்நிலைகளாகிய தேவனுடைய பரிமாணங்களுக்குள்ளும், ஆவிக்குரிய பரிமாணத்திலும் இருப்பதுபோல் இதற்கு முன்னதாக எப்பொழுதுமே என்னுடைய ஊழியத்தில் இருந்ததே கிடையாது. என்னுடைய ஊழியத்தில், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எப்பொழுதாவது நிகழ்ந்த எல்லாவற்றைக் காட்டிலும் இது அதிக மேலானதாக இருக்கிறது. மற்றக் காரியங்கள் எல்லாம் சுகமளித்தலுக்குரியவைகள். ஆனால், இவைகள் அதே ஆவியானவரால், தேவ இரகசியங்களை வெளிப் படுத்துவதாகும். ஆகவே நான்-நான் ஒரு இடத்தில் தங்கி இருக்கிறேன்; சாப்பிடுவதற்கு வேறொரு இடத்திற்கு செல்லுகிறேன். நான் தனிமையாகவே இருக்கிறேன். ஆகவே, இது ஒரு மகத்தான நேரமாகவே இருக்கிறது. ஆகவே இப்பொழுது, நான் இன்று காலையிலோ அல்லது அடுத்த நாள் காலையிலோ நான்.... இக்கேள்விகளுக்கு விடை அளிப்பது அதிக நேரம் நீடிக்காவிடில், இப்பொழுதே இக்காலையில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பேன். 17ஆதலால் சிறிது நேரம் நான் - நான் இக்காரியங்களிலிருந்து சற்று விலகியிருக்க வேண்டியதாயிருக்கிறது. பாருங்கள்? மனித சிந்தை இவ்வளவுதான் தாங்கக்கூடும். பாருங்கள்? அக்கினிஸ்தம்பம் உனக்கு முன்பாக நின்றுக் கொண்டிருக்கும்போது ஒருமணி நேரம் தேவனுடைய பிரசன்னத்தில் அமர்ந்திருப்பது ஒரு எளிதான காரியமல்ல. நீங்கள் பாருங்கள்? அவ்விதமான சூழ்நிலையில் அதிகமான நேரம் இருக்க முடியாது என்பதை அறிவீர்களா? மனிதன் அதைத் தாங்க முடியாது. ஆகவே இப்பொழுது, இங்கிருக்கும் இக்கேள்விகள் உண்மையிலேயே அருமையானவைகள். மக்களுக்கு இதைக் குறித்து இருக்கும் ஞானத்தை நான் பாராட்டுகிறேன். இப்பொழுது முதலாவது கேள்வி... அக்கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சிக்கிறேன். நான் அதைச் சரியாக அளிக்காவிட்டால் என்னை மன்னிப்பீர்களா? 18வேறு வியாக்கியானம் உங்களுக்கு இருந்து அது சரியென்று விசுவாசிப்பீர்களானால், நல்லது, அவ்வண்ணமாக முன் செல்லுங்கள். அது பாதிக்காது. இரட்சிப்புக்குரிய காரியங்களில் ஒன்றோ அல்லது இரண்டோ ஒத்துச்செல்லக்கூடும். அநேகக் கேள்விகள் சபை எடுக்கப்படுதலைக் குறித்தவைகளாக இருக்கின்றன. இனி வரும் காலங்களில் நடக்கப்போகும் காரியங்களைக் குறித்தும் கேள்விகள் உள்ளன. ஏனெனில் இந்த புஸ்தகத்தில் உள்ள உள்ள நம்முடைய போதகங்களில் நாம் இப்பொழுது சபைக் காலத்திற்கு அப்பால் கடந்து வந்தவர்களாயுள்ளோம். 1,44,000 பேர்கள் அழைக்கப்படும் காலத்தையும் கடந்தவர்களாக இருக்கிறோம். இப்பொழுது முதலாவதாக: மத்தேயு 25-ல் கூறப்பட்டிருக்கும் ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் மணவாட்டிக்கு ஊழியம் செய்பவர்களா? அல்லது அவர்கள் மணவாட்டியா? இவர்கள் மணவாட்டிக்கு பணிபுரிகிறவர்கள் என்றால், மணவாட்டி எங்கே இருக்கிறாள்? 19பாருங்கள், இப்பொழுது, நான் சிறந்த முறையில் புரிந்து கொண்டபடி இந்த ஐந்து கன்னிகைகள்... பத்து கன்னிகைகள் புறப்பட்டு சென்றார்கள் என்று நீங்கள் அறிவீர்கள். பாருங்கள். இது ஒரு அடையாளமாகவோ அல்லது உவமையாகவோ கூறப்பட்டுள்ளது என்று கூறிடவே நான் விரும்புகிறேன். பாருங்கள், அவர்கள் பத்துபேர் இருந்தனர். பத்து பேருக்கும் அதிகமாக இருந்திருப்பார்கள். ஆனால் இங்கே ஒரு எண்ணிக்கையாக அது கூறப்பட்டுள்ளது. புத்தியுள்ள கன்னிகைகள் தங்கள் தீவட்டியிலே எண்ணெய் வைத்திருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டியிலே எண்ணெய் இல்லாதவர்களாக இருந்தார்கள். மத்தேயுவில் பத்து பேரில் ஐந்து பேர் மாத்திரமே உள்ளே சென்றதுபோல், ஐந்துபேர் மாத்திரமே எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லுவார்களா என்பதுதான் அந்த நபர் கேட்ட கேள்வியாகும். இல்லை, அது அவ்வண்ணமல்ல. தங்கள் தீவட்டியில் எண்ணையுடன் சென்றவர்கள் மணவாட்டியின் அங்கத்தினர்களுக்கு இவர்கள் எடுத்துக்காட்டாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் பாருங்கள்? அவர்கள் மணவாட்டியின் ஒரு பாகமாக இருக்கிறார்கள். என்னுடைய புரிந்து கொள்ளு தலின்படி... இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், இவர்கள்தான் கடைசி ஜாமத்தின் கன்னிகைகள். ஏழு ஜாமங்கள் இருக்கின்றன. நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் ஏழாம் ஜாமமாகிய நடு இரவிலே இந்தக் கன்னிகைகள் எழுந்து தங்கள் தீவட்டிகளை ஆயத்தம் செய்துக் கொண்டு உள்ளே பிரவேசித்தார்கள். ஆனால் உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகைகளோ... இப்பொழுது இங்கே ஐந்து கன்னிகைகளைக் குறித்து பொருள் என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஏழாயிரம் பேரைக் குறித்தும் அநேகக் கேள்விகள் இங்கே கேட்கப்பட்டுள்ளன. அது உண்மையானவைகளின் ஒரு அடையாளமாக மாத்திரம் உள்ளன. இந்தக் கடைசிக் காலமாகிய ஏழாம் ஜாமத்திலே ஐந்து பேர்தான் உறக்கத்தினின்று விழித்துக்கொண்டு மறுரூபமாக்கப்பட்டு மணவாளனுடன் சென்றார்கள்? இப்பொழுது அவர்கள்... 20எடுத்துக் கொள்ளப்படப் போகிறவர்கள் ஐந்து பேர் மாத்திரம் என்பது அதன் அர்த்தமல்ல. ஏனென்றால், இந்த வாரம் நாம் பார்த்த வண்ணம் அவர்கள், சபையின் காலங்களிலெல்லாம் நித்திரை செய்துக் கொண்டிருக் கிறார்கள். எபேசு சபையின் தூதனாகிய பவுலின் நாட்களில், பவுல் அந்த சபையின் செய்தியாளனாக இருந்ததினால், அந்தச் சபையை ஏற்படுத்தினான். பவுல் எபேசு சபையை ஏற்படுத்தினதினால், அந்தச் சபைக்குச் செய்தியாளன் ஆனான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அக்காலத்தில் இருந்த ஆவி சிங்கத்தின் ஆவியாக இருந்தது. சிங்கமென்று சொல்லும்போது அது யூதா கோத்திரத்து சிங்கமாகிய கிறிஸ்துவையே குறிக்கிறது. கிறிஸ்துவே அந்த வார்த்தை. பவுல் அக்காலத்திற்குரிய வார்த்தையுடன் வந்தான். அந்த யுகத்திலே ஆயிரமாயிரமானவர்கள் நித்திரை யடைந்தார்கள். அது சரிதானே? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி). 21அதற்குப் பிறகு அடுத்த யுகம் வந்தது. இருண்ட யுகத்திற்குள் சபை சென்றபோது காளையின் ஆவி புறப்பட்டுச் சென்றது. காளையானது உழைப்புக்கும், பலிக்கும் உரிய மிருகமாக இருப்பதுபோல, ஆயிரமாயிரமான பேர்கள் இரத்த சாட்சிகளாக மரித்தார்கள், நித்திரையடைந்தார்கள். அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவீர்கள். அடுத்தபடியாக சீர்திருத்த யுகமாகிய லூத்தரின் யுகம் வந்தது. அப்பொழுது சாமர்த்தியமுள்ள, மனித ஞானமுள்ள ஆவி சென்றது. நீங்கள் கவனிப்பீர்களானால், அவன் அதனுடன், தன்னுடைய ஞானத்தையும் சேர்த்து, மற்றொரு பங்கினுடன் (ஸ்தாபனத்துடன் - தமிழாக்கியோன்) விவாகம் செய்துக் கொண்டான், பாருங்கள். பாருங்கள்? இந்த யுகத்திலே மனிதன் தன் ஞானத்துடன் சென்றான். சீர்திருத்தம், தேவஞானத்தோடே மக்களை பிரித்துக் கொண்டு வருவதுடன் இருந்து விட்டிருந்தால் நலமாயிருந்திருக்கக்கூடும். ஆனால் அவன் என்ன செய்தான்? செய்தியைக் கொண்டு வந்த மனிதனாகிய லூத்தரின் மரணத்திற்குப் பிறகு, அவர்கள் லூத்தரன் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டார்கள். 22வெஸ்லியின் மரணத்திற்குப் பிறகு மெத்தோடிஸ்ட் ஸ்தாபனத்தை உருவாக்கிக் கொண்டார்கள் என்பதை அறிவீர்கள். பாருங்கள்? இவ்விதமாக சென்று கொண்டேயிருந்தனர். அது... அதுதான் அதைச் செய்கின்றது. இப்பொழுது, நீங்கள் இதைக் கவனிக்கவேண்டும் என விரும்புகிறேன். மூன்றாவது யுகமாகிய பெந்தெகொஸ்தே யுகத்தைக் குறித்து சிலர் கேட்கலாம். நீங்கள் பாருங்கள், ஒவ்வொரு யுகத்திலும் பரிசுத்த ஆவிக்குள் ஒரு மூழ்குதலை பெற்றார்கள். நீதிமானாக்கப்படுதல் பரிசுத்த ஆவியின் ஒரு கிரியையாகும். பரிசுத்தமாக்கப்படுதல் பரிசுத்த ஆவியின் ஒரு கிரியையாகும். ஆனால் ஞானஸ்நானம் என்பது பரிசுத்த ஆவியியாய் இருக்கிறது. ஆகவேதான் ஒரு முன்னுணர்ந்துரைக்கிற (prophetic) ஒரு தீர்க்கதரிசி (Prophet) வரவேண்டியதாக இருந்தது. செய்தியாளன் அல்ல. பரிசுத்த ஆவியானவரே, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் மூலமாக தாமே தம் முழுமையில் வந்தார். 23ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் செய்தியாளன் அனுப்பப்பட்டு குழப்பங்களை அகற்றி ஒழுங்குபடுத்தி சபையை அதன் நிலையில் நிறுத்தினான். கடைசியாக சபைக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் வருகிறது. சூரியன் அந்தகாரப்பட்டு, சந்திரன் இரத்தம் போலாவது.... போன்ற காரியங்களை மக்கள் புரிந்துக் கொள்ளாமல் சபையின் காலங்களில் இவைகளை இணைத்திருக்கிறார்கள். நம்முடைய கர்த்தரை, அவருடைய சீஷர்கள் மூன்று கேள்விகளை கேட்டபோது, அவர் தந்த பதில்களை மக்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். இப்பொழுது கடந்த இரவு எந்த கேள்வியும் கேட்கவில்லையென்று நினைக்கிறேன். எல்லாக் கேள்விகளையும் எடுத்து முத்திரைகளின் கீழ் வைத்திருக்கிறோம். முத்திரைகள் ஒரு முழு புஸ்தகமாக இருக்கிறது. டாக்டர், நீர் அதை விசுவாசிக்கிறீரா? (ஒரு சகோதரன் “ஆம்” என்கிறார் - ஆசி) 24பாருங்கள், எல்லாம் ஒன்றாக இணைக் கப்பட்டிருக்கிறது. இயேசு இங்கே என்ன கூறினாரோ, அதை நாம் பார்த்தோம். இயேசுவினிடத்தில் மூன்று கேள்விகளை அவர்கள் கேட்டார்கள்! ''இது எப்போது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கு அடையாளம் என்ன? உலகத்தின் முடிவிற்கு அடையாளம் என்ன?'' அவர் கொடுத்த விடைகளில், ... நாம் அதன் கீழாக எல்லாவற்றையும் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தோம், ஆனால் ஒன்றைத் தவிர, அது என்ன? ஏழாம் முத்திரை. அது என்னவென்று இன்னும் தெரியவில்லை. அதுவேதான். எல்லாம் சரியாக பொருந்தினது. அவைகளை முன்னும், பின்னுமாக ஜோடியாக இணைத்துக் காட்டினேன். ஆகவே, நான் திரும்பவும் சென்று என்னுடைய பழைய குறிப்புகளை எடுத்து பார்த்தபோது அவைகளை அதனதன் இடத்தில் சரியாகப் பொருத்தாமல், ஒரு காரியத்தை மற்றொரு இடத்திலும், மற்றொன்றை வேறோரு இடத்திலும் தவறாகப் பொருத்தியிருந்தேன். இவ்விதமாகத்தான் செய்திருந் தேன். நீங்கள் இதை கிரகித்துக் கொண்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அதைக் கிரகித்துக் கொண்டீர்களா? பாருங்கள்? 25நான் எங்கே குறிப்பை எழுத வேண்டுமென்றிருந்தேனோ, அதை இந்தப் பக்கத்தில் எழுதி வைத்துவிட்டேன். அவைகள் இரண்டையும் 9, 11 அல்லது 9,6 அல்லது 6-ம் 11-ம், 9-ம் 11-ம் என்று எழுதி வைத்து விட்டேன். அது அவ்விதம் அல்ல. அந்தக் குறிப்பு மாற்றி எழுதி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது அடுத்து வசனத்தில் இருந்தது. பாருங்கள்? அதனுடைய பதில் பஞ்சங்களுக்கும் யுத்தத்திற்கும் இடையில் இருந்தது. (சகோதரன் பிரான்ஹாம் தான் அங்கே மத்தேயு 24, வெளி. 6ல் நான்காவது முத்திரையை ஒப்பிட்டுக் காட்டியதைக் குறிப்பிடுகிறார். ஆறாவது முத்திரை, 166 முதல் 174 பத்திகளைக் கவனிக்கவும் - தமிழாக்கியோன்.) ஆகவே, நான் மிகவும் மகிழ்ச்சியாயிருந்தேன். வெளிப்படுத்தலினால் வரும் புத்துணர்வை ரசித்துக் கொண்டேயிருந்தேன். அங்கே உட்கார்ந்து கொண்டு பென்சிலையோ அல்லது பேனாவையோ வைத்துக் கொண்டு இரண்டு பக்கங்களிலும் 11 என்று குறிப்பெழுதினேன். அது அவ்விதம் அல்ல. அது 11க்குப் பதிலாக 9 என்று இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கொள்ளைநோய், யுத்தங்கள் போன்ற காரியங்களை எடுத்து அவைகளை எப்படிப் பொருத்துவது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுதோ, எல்லாம் ஒழுங்காக ஜோடியாக அமைந்திருப்பதை நீங்கள் கண்டீர்களா? இப்பொழுது ஆறாம் முத்திரைவரை ஒழுங்காக பொருத்தப்பட்டு நின்றுவிட்டதை நீங்கள் மறந்து விட வேண்டாம். ஆறாவது முத்திரைவரை முத்திரைகள் திறக்கப்பட்டு, இப்பொழுது “பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதலில் நின்றிருக்கிறது.'' ”அரைமணி நேரம் அமைதல்'' என்று மாத்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது. 26இப்பொழுது பாருங்கள், நான்... இக்கேள்விகளுக்கு நான் துரிதமாக பதில் அளிக்க வேண்டியவனாக இருக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு பதிலும் நான்கு வாரத்தில் கொடுக்கும் செய்தியின் நீளத்திற்கு உள்ளது. நான் அவ்விதம் செய்யாமல் ஒவ்வொருவரின் கேள்விக்கும் என்னால் முடிந்தவரை பதில் அளிக்க விரும்புகிறேன். இந்த கன்னிகைகள், பாருங்கள், அவர்கள். அந்த காலத்தில் அவர்கள் ஒரு பாகமாயிருந்தனர். பாருங்கள்? ஒவ்வொரு காலமும் கன்னிகைகளைக் கொண்டிருந்தன. பாருங்கள்? ஒரு - ஒரு முத்திரை... தூதன் சபைக்கு வருகிறான்: “எபேசு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்னவெனில்'' என்று கூறுவதை கவனிக்கவும். 27எபேசு சபைக்கு எழுதப்பட்டிருப்பதை வாசித்த பிறகு (மீண்டும் அதை ஒப்பிட்டுப் பார்க்கவும்) ஒரு முத்திரை திறக்கப்படுகிறது. கர்த்தருக்குச் சித்தமாயிருப்பின், இவ்விதமாகத்தான் எல்லாம் உங்களுக்கு அளிக்க நாங்கள் முயற்சிக்கிறோம். நான் என்ன கருதுகிறேன் என்பதை அறிந்து கொண்டீர்களா? முதலில் நாம் எதைப் பெற்றோம்? சபையின் காலங்கள். அது சரி தானே? அதற்குப் பிறகு, சபையின் காலங்களுக்குரிய செய்திகள். இப்பொழுது இது எல்லோருக்கும் தெளிவாக இருக்கிறதா? பாருங்கள்? 28முதலில் சபையின் காலங்களும், சரித்திரமும் நமக்கு கொடுக்கப்பட்டது. நிசாயா ஆலோசனை சங்கம், நிசாயா ஆலோசனை சங்கத்துக்கு முந்தின காலங்கள், மற்றும் இவை போன்ற காரியங்களை சரித்திரத்தில் நாம் கண்டுபிடிக்க முடிந்தவைகள். அதன் பிறகு, வார்த்தையின் உண்மையான வியாக்கியானம் சரித்திரத்தோடு இணைந்து செல்லுகிறதைக் கண்டோம். இவ்விதமாக லவோதிக்கேயா காலமாகிய இக்கால மட்டும் கொண்டு வரப்பட்டோம். இக்காலத்திற்குரிய சரித்திரம் நமக்கு கொடுக்கப்படவில்லை. இதுதான் சரித்திரம் எழுதப்படுவதாகும் என்பதை கவனிக்கவும். பாருங்கள், இதோ இருக்கின்றது. இக்காலத்தில், காரியங்கள் எப்படியிருக்கும் என்பதுதான் காட்டப்பட்டுள்ளது. 29நாம் இப்பொழுது முத்திரைகளுக்கு வந்து அந்த முத்திரையைத் திறக்கின்றோம். தேவன் நமக்கு அந்த முத்திரையைத் திறக்கிறார். அது என்ன? முதலில் ஒரு சபையின் செய்தியாளன். சபையின் காலம், அதற்குப் பிறகு ஏழு முத்திரைகள். இப்பொழுது, ஏழாம் சபையின் காலத்தில் வரும் சீர்கேட்டை கவனிப்போம்... ஆனால் ஏழாம் முத்திரையில் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவிக்கவில்லை என்பதை அறியவும். பாருங்கள், ஏனென்றால், இந்தச் சபையின் காலத்தின் முடிவில் இவைகளை வெளிப்படுத்த ஒரு தீர்க்கதரிசன வரம் வரவேண்டும். பாருங்கள்? நீங்கள் இதை புரிந்து கொண்டீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) அது சரி. முத்திரைகள் ஒவ்வொன்றும். எவ்வாறு... 30அதன்பின் நான் இவ்விடம் வந்து... முத்திரைகள் ஒவ்வொன்றும், இயேசு கிறிஸ்துவிடம் கேட்ட மூன்று கேள்விகளின் விடைகளோடு பொருந்துவதை கண்டோம். ''இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி எப்பொழுது இடிக்கப்படும்? உலகத்தின் மதத்திற்கு மையமான இடமாக வேறொரு இடம் எப்பொழுது ஸ்தாபிக்கப்படும்? பாருங்கள்? அந்திக்கிறிஸ்து எப்பொழுது வருவான்? பாருங்கள்? அவனை எதிர்க்க என்ன சென்றது? - வார்த்தை. வார்த்தைக்கு எதிராக வார்த்தை. 31அதன் பிறகு அது அரசியலுக்குள்ளும் மற்ற எல்லாக் காரியங் களிலும் விழுந்தது. அப்பொழுது காளை புறப்பட்டு சென்றது. பாருங்கள்? அதுதான் இரண்டாவது முத்திரை. இயேசு, மத்தேயு 24ல் அவ்விதமே கூறியுள்ளார், பாருங்கள். அதன் பிறகு அதிலிருந்து சீர்திருத்தக்காரரின் ஞானத்திற்கு வருகிறோம். அப்பொழுது மனித முகம் கொண்ட ஜீவன் புறப்பட்டுச் சென்றது. அதுதான் நடந்தேறியது. அதற்குப் பிறகு நான்காவது முத்திரைக்கு வரும்போது, மற்ற மூன்று முத்திரைகளின் காலத்தில் கிரியை செய்த அந்திக்கிறிஸ்துவின் வல்லமைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும்போது, அவனுக்கு “மரணம்” என்னும் பெயர் கொடுக்கப்படுகிறது. இப்பொழுது இயேசு என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: “அவளை அக்கினியில் எரித்து அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்.'' இது தான் மரணம் சவாரி செய்வதாகும். பிராடெஸ்டண்டாரும், கத்தோலிக்கரும் - அவர்கள் ஒவ்வொருவரின் மீதும் மரணத்தின் அடையாளம் காணப்படுகிறது - பாருங்கள்? ''அவளும் அவளுடைய பிள்ளைகளும் அழிக்கப்படுவார்கள்.'' ஆகவே, நீங்கள் உங்கள் ஸ்தாபனத்தின் மீது சார்ந்திருப்பீர்களானால், இப்பொழுதே அதை விட்டு வெளியே வாருங்கள். 32ஆகவே பிறகு ஏழாம் முத்திரைக்கு வரும்போது இயேசு அங்கே நிறுத்திவிட்டார். ''சந்திரன் இரத்தமாகும், அந்தகாரம், மற்றும் நடக்கப் போகும் காரியங்களை'' அறிவிப்பதினால் அவர் ஆறாம் முத்திரையைத் திறந்தார். நாம் இங்கே வந்து ஆறாம் முத்திரையைத் திறந்தோம். ஆறாம் முத்திரையைத் திறந்தபோது, அதே காரியத்தைக் காண்பிக்கிறது. வேதத்தில் மூன்று வெவ்வேறான இடங்களில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள், வெளிப்படுத்தலுடன் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்தீர்களா? கவனியுங்கள். வேதத்தில் இயேசு அவ்விதம் கூறின இடம், உலகத் தோற்றமுதல் மறைக்கப்பட்டிருந்ததை அவர் புஸ்தகத்தை திறந்து காட்டிய இடம், மற்றும் இந்த நாளுக்குரிய வெளிப்படுத்தல் ஆகிய இம்மூன்றும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மூன்று சாட்சிகள் ஒருமித்துக் கூறும்போது அது உண்மையாக இருக்கிறது. அது முற்றிலும் உண்மையாக இருக்கிறது. 33இப்பொழுது, இந்த நித்திரை அடைந்த கன்னிகைகள்தான் எல்லாம் ஒன்றாக சேர்ந்து முழுசரீரமாக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் புத்தியுள்ள கன்னிகைகள். புத்தியில்லாத கன்னிகைகள், அந்திக் கிறிஸ்து, புத்தியுள்ள கன்னிகைகள் தொடங்கினபோதே தொடங்கினார்கள். எண்ணெய் வாங்க முயற்சித்தவர்கள் இவர்களே. 34இப்பொழுது இங்கே கவனியுங்கள். எல்லாம் ஒழுங்காக பொருந்துவதைக் கவனியுங்கள். அந்த அறையில் வெளிப்படுத்தப் பட்டவைகளை இங்கே நின்று கூறுவேனானால் உங்களுக்கு தலையே சுற்றிவிடும். அப்படியானால் எல்லாவற்றையும் கூறும்போது என்ன செய்யப்போகிறீர்கள்? ஆகவே, அதன் பிறகு, மக்களை விட்டு பிரிந்து போகும்போது தேவ இரகசியங்கள் திறக்கப்படுகிறது. மக்களுக்குக்கூட அறிவிக்கப்பட முடியாத காரியங்கள் வெளிப்படுகிறது. ஏனென்றால் நீங்கள் பாருங்கள், அவர்கள் சிறு உபதேசங்களை உருவாக்கிக் கொள்ளுவார்கள். சுகமளிக்கக்கூடிய இச்சிறு வரத்தை கவனியுங்கள். அது எவ்வளவாக சபையைக் குழப்பத்துக்குள்ளாக்கிவிட்டது. மக்கள் இதைக் கண்ட போது, ஒவ்வொருவரும் ஒருவித உணர்வு பெற்று ஒவ்வொருவரும் இதைச் செய்ய ஆரம்பித் துவிட்டார்கள். அது தவறு என்று என்னுடைய இருதயத்தில் அறிவேன். இது உண்மையென்று தேவன் அறிவார். ஏனென்றால் தேவன் என்னிடம் அவ்விதம் கூறினார். பாருங்கள்? இது வெறும் போலியான காரியங்கள். இது மக்களை சிதறடிப்பதாகும். இப்பொழுது அது சரிதான். இப்பொழுது அக்காரியங்களை கூற முடியாது. அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது. 35மூன்றாவது இழுப்பைக் குறித்து யாருக்கும் சொல்லவேண்டாம்'' என்று அறிவிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். அது என்னவென்று கூறினேன்? அது எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளது? நிச்சயமாக. அந்த தரிசனத்திலே நின்று கொண்டு அந்த சிறிய பாதரட்சை (Shoe)க்கு லேஸ் போட முயற்சித்துக் கொண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ''நீ பெந்தெகொஸ்தே பிள்ளைகளுக்கு இயற்கைக்கு மேலான காரியங்களைக் கற்றுக்கொடுக்க முடியாது'' என்று அவர் கூறினார். இது மூன்றாவது இழுப்பாக இருக்கும். இதை அறியமுடியாது. ஆகவே தேவனுடைய கிருபையால் எனக்கு உதவி செய்யும் என்று கேட்டேன். நாம் இப்பொழுதே கடைசி நேரத்தில் இருக்கிறோம். கிருபாசனம் நியாயாசனமாக மாறுவதற்கு அதிக நேரமாகாது. இப்பொழுது ஏற்கெனவே நீங்கள் உன்னதங்களில் கூட்டி சேர்க்கப்படாதிருந்தால், இக்காரியங்கள் நிகழ்வதையும், இந்த மக்கள் உள்ளே வருவதையும் காணும்போதே, நீங்களும் உள்ளே வருவது மேலானதாக இருக்கும். பாருங்கள்? 36இப்பொழுது, 'உன்னதங்களில் கூட்டிச் சேர்க்கப் படுதல்' என்பது, இது வெறும் மகிழ்வதைக் காட்டிலும் மேலானதாக இருக்கிறது. நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளே உன்னதங்களிலே உண்மையாக கூட்டப்பட்டிருப் பீர்களானால் இது ஒரு பயத்திற்குரிய காரியமாகும். கர்த்தருடைய தூதனானவருக்கு பக்கத்தில் நின்று கொண்டு ஆனந்த சத்தமிட்டு துதித்துக் கொண்டிருக் கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அது அவ்வண்ணமல்ல. அது அநேகமாக மரணத்துக்குள்ளாக் கும் பயமான ஒரு காரியமாகும். பாருங்கள்? ஆகவே, உள்ளம் பொங்க மனமகிழ்ச்சியினால் நடனம் ஆடுவது சரிதான். ஆனால் இதற்கும் உண்மையான காரியத்திற்குள் வருவதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும். பாருங்கள்? பாருங்கள்? பயம் என்பதே அங்குதான் உள்ளது. இது ஒரு பயத்திற்குரிய காரியமாகும். நீங்கள் இழந்து போனதாக கருதும் பயம் அல்ல. ஆனால் அங்கே நின்று கொண்டிருக்கும் தேவதூதனுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முன்பாக உண்மையிலேயே நின்றுகொண்டிருப்பதுதான் பயத்துக்குரியதாக இருக்கிறது. 37இப்பொழுது, அது (கன்னிகைகள்- தமிழாக்கியோன்) மணவாட்டியின் ஒரு பாகமாக இருக்கும். நித்திரை செய்துக் கொண்டிருப்பவர்களுடன் இவர்களும் சேர்க்கப்படுவார்கள். நம்மால் அதை முற்றிலுமாக... (ஒலிநாடாக்கள் பதிவு செய்யும் முறையில் கோளாறு ஏற்படுகிறது. ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி)... இங்கே உள்ளே கைகுட்டைகளின் மூலம் இந்த ஜனங்களுக்கு சுகமளிக்கும்படி இப்பொழுது ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென். இப்பொழுது, அது சரியாகிவிட்டதா? (ஒரு சகோதரர் 'ஆமென்' என்று கூறுகின்றார் -ஆசி) உங்களுக்கு நன்றி. யாராவது ஒருவர் எதின் மீதாகிலும் மிதித்தார்களா? (ஒரு சகோதரன், 'இங்கு அநேக ஒலிப்பதிவு செய்யும் கருவிகள் உள்ளன,' என்று கூறுகிறார்) அநேக ஒலிப்பதிவு கருவிகள் இருப்பதால், அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பாருங்கள்? சரி, அது அதைத் தாக்குகிறது. இப்பொழுது அடுத்த கேள்வியைக் கவனிப்போம். 38சுவிசேஷகர்கள் வயலில் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டுமா? “இந்த வேளையில்” என்று சொல்ல கருதுகிறார்கள். நிச்சயமாக எந்த விதத்திலும் அவர்கள் தொடர்ந்து ஊழியம் செய்யவேண்டும். ஒரு காரியத்தையும் மாற்றவேண்டாம். இக்காலையில் இயேசு வருவதாக இருந்தாலும், இன்றையிலிருந்து பத்து வருடங்களுக்குப் பிறகு அது இருப்பது போல பிரசங்கம் பண்ணு. ஆனால் இந்த மணிவேளையில் இருப்பது போல ஜீவி. இப்பொழுது குழப்பமாக்கிக்கொள்ள வேண்டாம். அதைக் குறித்துதான் உங்களை எச்சரிக்க முயற்சிக்கிறேன். விசித்திரமாக இருக்க வேண்டாம். எதையும் மாற்ற வேண்டாம். ஆனால் நீங்கள் ஏதாகிலும் தவறோ அல்லது தீமையோ செய்துக் கொண்டிருப்பீர்களானால், மனந்திரும்புங்கள். தேவனிடம் திரும்புங்கள். நீங்கள் எப்பொழுதும் செய்தது போல சுவிசேஷ ஊழியத்தை தொடர்ந்து செய்யுங்கள். 39நீங்கள் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தால், தொடர்ந்து செய்யுங்கள். இயேசு நாளை வருவாரென்றால் உங்கள் கடமையில் உண்மையுள்ளவர்களாகச் காணப்படத்தக்கதாக இருங்கள். நீங்கள் உங்கள் சபையைக் கட்டிக் கொண்டிருந்தால் அதைத் தொடர்ந்து செய் யுங்கள். என்னுடைய பாக்கெட்டில் பணம் வைத்திருப்பதைப் பார்க்கிலும் அவ்விதமான வேலைக்கு செலவழிப்பதையே நான் தெரிந்துக் கொள்ளுவேன். பாருங்கள்? ஆகவே, நீங்கள் இருக்கிறவண்ணமாகவே தொடர்ந்து முன் னேறுங்கள். இப்பொழுது ஒவ்வொருவரும் புரிந்து கொண்டீர்களா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) சரியானதை தொடர்ந்து செய்யுங்கள். நீங்கள் இருக்கிறவண்ணமாகவே செல்லுங் கள். இப்பொழுது எதையும் நிறுத்தவேண்டாம். கர்த்தருக்கு ஊழியம் செய்துக் கொண்டிருப்பது போலவே தொடர்ந்து செய்யுங்கள். இப்பொழுது உதாரணமாக, நீங்கள் ஒரு மனிதனிடத்தில் வேலை செய்வீர்களானால், எல்லாம் முடிந்து போவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கும்போது, ''நல்லது இன்னும் பதினைந்து நிமிடங்கள் தான் இருக்கிறது. ஆகவே நான் அங்குச் சென்று உட்கார்ந்துகொள்ளுவேன்'' என்று கூறுவாயானால், அந்த பதினைந்து நிமிஷத்திற்கு உன்னுடைய கூலி குறைக்கப்படும். நீங்கள் கோதுமையைப் பயிரிட்டுக் கொண்டிருந்தால் கோதுமையைப் பயிரிடுங்கள். நீங்கள் உருளைக்கிழங்குகளை தோண்டிக் கொண்டிருந்தால், அவைகளைத் தோண்டிக் கொண்டிருங்கள். ''அவைகளை தின்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்'' என்று கூறி எந்தவித வித்தியாசத்தையும் உண்டாக்கவேண்டாம். எப்படியாகிலும் தோண்டிக்கொண்டே இருங்கள். பாருங்கள்? ஆம். நீங்கள் இருக்கிறவண்ணமாகவே தொடர்ந்து இருங்கள். 40அன்றொரு நாள் யாரோ ஒருவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவர்களுக்கு யாரோ ஒருவர் இவ்விதம் கூறியிருக்கிறார்: ''நல்லது காலம் சமீபமாக இருக்கிறது, பண்ணையை விற்றுவிடுங்கள். ஆயிரவருட அரசாட்சி ஆரம்பிக்கப்போவதால் உங்களுக்கு பண்ணையிலிருந்து வரும் உணவு தேவைப்படாது; ஆகவே அதை விற்றுவிடுங்கள். உம்முடைய பிள்ளைகள் இரட்சிக்கப்படாதவர்களாய் இருப்பதால் உபத்திரவ காலத்தில் அவர்கள் இருக்கும் பண்ணையின் பலனை புசிக்கட்டும். நீங்களோ, உங்கள் பண்ணையை விற்றுவிடுங்கள்.'' இவ்விதமாக ஏதோ ஒன்றைக் கூறினர். ஓ, அவர்கள்... நான் “ஓ, என்னே!'' என்றேன் 'அவர் நாளை வருவார் என்று எனக்கு தெரிந்திருக்கிறதென்றாலும் நான் ஒரு விவசாயியாக இருந்தால், இன்றைக்கு என்னுடைய பயிரை நான் நடுவேன். நிச்சயமாக. அவர் என்னை ஒரு விவசாயியாக உண்டாக்கி இருந்தால், என்னுடைய வேலையிலேயே நான் இருப்பேன். அது உண்மை . நான் ஒரு 'மெக்கானிக்காக இருந்தால் அவ்வண்ணமே இருப்பேன்' 41அன்றொரு நாள் யாரோ ஒருவர் வந்து இவ்விதம் கூறியதாக என்னிடம் கூறினார். ''நான் ஒரு புதிய காரை வாங்கி இருக்கிறேன். அதற்குரிய இன்னொரு சாவிக்கொத்தை உங்களிடம் கொடுக்கப் போகிறேன். ஏனென்றால் எடுத்துக் கொள்ளப்படுதல் வரப்போகிறது. ஆகவே அது எனக்கு தேவைப்படாது'' என்று தன்னுடைய மேய்ப் பரிடம் கூறினாராம். “இன்னொரு சாவிக் கொத்தை உங்களிடம் கொடுத்து விடுகிறேன், ஏனெனில் எடுத்துக் கொள்ளப்படுதல் வருகின்றது, இனிமேல் எனக்கு அது தேவைப்படாது'' என்றார். அவருடைய மேய்ப்பர் எடுத்துக்கொள்ளப்படுதலை இழந்துவிடப் போகிறார். ஓ, அதுதான் ஆயத்தமாவதாகும். இல்லையா? சரி. அது அவ்விதமாகத்தான் இருக்கும். நாம் அவ்விதம் இருக்க வேண்டியதில்லை. நாம் விசுவாசத்தில் உறுதியாயிருந்து, தெளிந்த சிந்தையுள்ள கிறிஸ்தவனாக இருக்கவேண்டும். பாருங்கள்? கடைசி நிமிடம் வரை ஊழியம் செய்வதற்காக நான் இங்கே நியமிக்கப்பட்டிருக்கிறேன். நான் செய்யவேண்டிய ஒரு வேலை உண்டு, நான் என்னுடைய கடமையில் உண்மையுள்ளவனாக காணப்படுவதையே விரும்புகிறேன். அவர் இந்தக் காலை வருவாரென்றால், நான் இந்த பிரசங்க பீடத்தருகினில் நின்றுக்கொண்டிருக்க விரும்புகிறேன். 42நீங்கள் இவ்விதம் கூறலாம்; ''சகோதரன் பிரான்ஹாமே, அவர் இக்காலை வருவாரென்றால் நீங்கள் அங்கே வெளிய இருக்கவேண்டுமல்லவா?'' இல்லை, ஐயா. இதுதான் என்னுடைய கடமையை நிறை வேற்றக்கூடிய இடம். அவர் வரும்போது, இங்கே நின்றுக்கொண்டு, நான் பிரசங்கித்துக் கொண்டிருப் பவைகளையே பிரசங்கித்துக் கொண்டிருப்பேன். அப்பொழுது அவர் வரும்போது அவருடனே சென்று விடுவேன். பாருங்கள்? உருளைக்கிழங்கு தோட்டத்தில் களையை பிடுங்கிக் கொண்டிருந்தால், என்னால் எவ்வளவாய் பிரயாசப்பட முடியுமோ அவ்வளவாய் பிரயாசத்தோடே களை பிடுங்கிக் கொண்டிருப்பேன். அவர் வரும்போது, களை பிடுங்க உபயோகிக்கும் மண்வெட்டியை போட்டுவிட்டு எடுத்துக் கொள்ளப்படுவேன். யூபிலி வருஷத்திலேயே களை பிடுங்குகிறவர்கள் களைகளை பிடுங்கிக்கொண்டே இருக்க வேண்டும். யூபிலி வருஷத்திற்கு இன்னும் பத்து நிமிஷம் இருந்தாலும், யூபிலி வருஷத்தில் எக்காளம் தொனிக்கும் என்பதை அறிந்திருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து வைக்கோலை பொறுக்கியெடுத்துக் கொண்டோ அல்லது வேறெந்த வேலையையோ செய்துக்கொண்டேயிருந்தார்கள். எக்காளம் தொனிக்கும்போது வேலை செய்துக்கொண்டிருக்கிறவர்கள் தங்கள் கவைக் கொம்புகளை எறிந்து விட்டு விடுதலையாகி சென்று விடுவார்கள். பாருங்கள். எக்காளம் தொனிக்கும் வரை உங்கள் வேலைகளை செய்துக் கொண்டிருங்கள். சரி. (அருகிலிருந்து ஒரு சத்தம் கேட்கப்படுன்றது-ஆசி) கேள்வி, “அது திறந்ததின்படி...'' ஏதாவது சம்பவித்ததா? ஊம்? அது இங்கே சத்தத்தை உண்டாக்கியது. கேள்வி. 43ஐந்தாம் முத்திரையின் வெளிப் படுத்தலின்படி மோசேயும், எலியாவும் மரிக்கவேண்டும்; அப்படியானால் ஏனோக்கை குறித்து என்ன? எனக்கு தெரியாது. பாருங்கள்? நான்- நான்... எனக்கு தெரியவில்லையென்றால் எனக்கு தெரியாது என்று சொல்லப்போகிறேன். பாருங்கள்? எனக்கு எல்லா விடைகளும் தெரியாது. மக்களே, எனக்கு தெரியவில்லையென்றால் எனக்குத் தெரியாது என்று சொல்லுவேன். எனக்குத் தெரியும்வரை அதைச் சொல்லமாட்டேன். பாருங்கள். ஆனால் எனக்குத் தெரியாது. 44அடிக்கடி நானே அதைக்குறித்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அங்கே ஏனோக்கு இருந்தான்... மோசேயும், எலியாவும் திரும்பவும் வந்து கொலை செய்யப்படுவார்கள் என்பதை நான் கண்டேன். பாருங்கள் ஆனால் ஏனோக்கு காலத்திற்கு முன்னமே எடுத்துக்கொள்ளப்பட்டான். “நல்லது'' அடிக்கடி நான் அதைக் குறித்து நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ”அதைக் குறித்து என்ன?'' என்றார். ஆனால் இங்கே ஆறுதலாக ஒரே ஒரு காரியத்தை சொல்லுவேன். இப்பொழுது கவனியுங்கள் மோசே தேவனுக்கு நாற்பது வருஷம் மாத்திரம் சேவை செய்தான். பாருங்கள்? அவன் நூற்றிருபது வருஷம் இருந்தான். ஆனால் இருபது வருடங்கள்... முதல் நாற்பது வருஷம் அவன் கல்வியைக் கற்றான். அது சரியா? இரண்டாம் நாற்பது வருஷம் தேவன் அதை அவனிடத்திலிருந்து எடுத்துப் போட்டார். மூன்றாம் நாற்பது வருஷம் அவன் தேவனுக்குச் சேவை செய்தான். பாருங்கள்? அது சரிதான். ஆனால், ஏனோக்கு தேவனோடு ஐந்நூறு வருஷம் சஞ்சரித்து குற்றமில்லாதவனாகக் காணப்பட்டான். பாருங்கள்? பாருங்கள்? ஆகவே மோசேயும், எலியாவும் இன்னும் சிறிதுநேரம் ஊழியம் செய்யத் திரும்ப வருவார்கள். இப்பொழுது இதுதான் சரி என்று நான் கூறவில்லை. பாருங்கள், இதை தியானிப்பதற்காக உங்களுக்குத் தருகிறேன். பாருங்கள், அங்கே என்ன நடந்தது என்றோ, அல்லது தேவன் என்ன செய்யப்போகிறார் என்றே நான் சொல்ல முடியாது. 45வெளிப்படுத்தல் 3:12ல் உள்ள மக்களுக்கு என்ன நாமம் கொடுக்கப்படும்? எனக்கு - எனக்குத் தெரியாது. ஆம் அவர்களுக்கு ஒரு புதிய நாமம் கொடுக்கப்படுவதாக அவர் கூறினார். அது என்னவென்று எனக்கு எனக்கு எனக்குத் தெரியவில்லை. பாருங்கள். ஒரு வேளை நாம் அங்கு செல்லும்போது அது அறிவிக்கப்படும். ஆனால் அது என்னவென்று இப்பொழுது எனக்குத் தெரியவில்லை. பாருங்கள். அவர் அதைச் செய்யப் போகிறார். பாருங்கள்? பெறுகிறவர்கள் மாத்திரமே அதை அறிந்துக் கொள்ளத்தக்கதான ஒரு புதிய நாமத்தை அவர் கொடுப்பார். பாருங்கள்? 46சகோதரன் பிரான்ஹாமே, விவாகரத்துக்குப் பிறகு திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்க ஏதாகிலும் வேத வாக்கியம் உண்டா? இது அதிக முக்கியமானதாகும். இது “முக்கியமானதென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லது... ஆகவேதான் இது முத்திரைகளோடு சம்பந்தப்பட்டதல்ல. என்னுடைய சகோதரனோ, சகோதரியோ, இதை எழுதியவர் யாராயிருந்தாலும், எனக்கு தெரிந்தவரை உன்னுடைய கணவனோ அல்லது மனைவியோ மரிக்கும்வரை நீங்கள் மறுபடியும் திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கும் வசனம் எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் கட்டப்பட்டு இருக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது. பாருங்கள்? ஏதாகிலும் வேதவாக்கியம் உண்டா என்றுதான் கேட்கப்பட்டுள்ளது. பாருங்கள்? நான் அறிந்தவரை எதுவும் இல்லை. திருமணமானவர்களில், ஒருவர் மரிக்கும்போதுதான் மற்றவர் கர்த்தருக்குள் இருக்கும் வேறு யாரையாகிலும் மணந்துக்கொள்ளலாம் என்று பவுல் கூறியுள்ளார். ''மரணம் நம்மை பிரிக்கும் வரை'' என்றுள்ளது. அதுவேதான். இவ்வண்ணமாகத்தான் நீங்கள் வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் பாருங்கள்? ஆகவே இதை அனுமதிக்க எந்த வசனமும் இல்லை. இதற்கேற்ற வார்த்தையை நீங்கள் கண்டிருந்தால் நல்லதுதான். ஆனால் என்னை பொறுத்தவரை எனக்கு ஒன்றும் தெரியாது. 47வெளிப்படுத்தல் 6:6ல் எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே'' என்பது எதைக் குறிக்கின்றது? அது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. பாருங்கள்? ஏற்கெனவே அதைக் குறித்து பார்த்திருக்கிறோம். சிலசமயங்களில் யாராவது செய்திக்குச் சற்று தாமதமாக வரும்போது இங்கு சொல்லப்படும் காரியத்தை இழந்துவிடுகிறார்கள்... ''எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே“' எண்ணெயும் திராட்சரசமும் எதைக் குறிக்கிறது? எண்ணெய், பரிசுத்த ஆவிக்கு அறிகுறியாக உள்ளது என்பதை நாம் அறிவோம். பாருங்கள்? வேதாகமத்தில் ஆராதனைக்குரிய காரியங்களில், திராட்சரசமும் எண்ணெயும் ஒன்றாக இணைக்கப் பட்டுள்ளன. பாருங்கள்? திராட்சரசம் எழுப்புதலை உண்டாக்குகிறது என்னும் எண்ணம் எனக்கு உண்டாயிற்று. திராட்சரசம் எழுப்புதலை உண்டாக்குகிறது. வெளிப்படுத்தலினால் வரும் எழுப்புதலுக்கு இயற்கையான திராட்சரசம் மாதிரியாக வைக்கப்பட்டிருக்கிறது. 48சபையை எது எழுப்புதலடையச் செய்கிறது என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்? - எழுப்புதல். பாருங்கள்? ஆகவே, திராட்சரசம், புதிய திராட்சரசம்... இப்பொழுது கவனியுங்கள். பலியிடுவதிலும், சபையின் ஆராதனையிலும் எண்ணெயும், திராட்சரசமும் ஒன்றாக இணைந்திருப்பதை கவனிக்கவும். இப்பொழுது கவனியுங்கள். அவைகள் இரண்டும் இணைந்துள்ளன, தொடர்பு கொண்டுள்ளன. க்ருடன்ஸ் ஒத்துவாக்கிய புத்தகத்திலோ (Cruden's Concordance) அல்லது வேறெந்த ஒத்துவாக்கிய புத்தகத்திலோ பார்ப்பீர்களானால், திராட்சரசமும் எண்ணெயும் ஆராதனை முறைமைகளில் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இப்பொழுது இதைக்குறித்து கவனியுங்கள். எண்ணெய் எப்பொழுதும் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. எசேக்கியலிலும் மற்றும் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டின் முழுமையிலும் இதைக் காண்கிறோம். 49வியாதியஸ்தரை ஏன் எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுகிறோம்? அவர்கள் மீது ஊற்றப்படும் பரிசுத்த ஆவியை அறிகுறியாக எடுத்துக்காட்டுவதற்காகத்தான் வியாதியஸ்தரை எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுகிறோம் என்பதைக் கவனியுங்கள். பாருங்கள்? புத்தியுள்ள கன்னிகைகள் எண்ணெயை பெற்றிருந்தார்கள், புத்தியில்லாதவர்கள் எண்ணெயை பெறவில்லை. ஆவி, அதுதான் எண்ணெய். எண்ணெய் தேவனைக் குறிக்கிறதென்றால், தேவன் ஆவியாய் இருக்கிறார். தெரியுமா? தேவன் வார்த்தையாய் இருக்கிறார். “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை மாம்சமானார். அதுதான் தேவன்”. இப்பொழுது, வார்த்தை இயற்கையான உருவத்தில் அமர்ந்திருக்கிறதென்றால்... விசுவாசியை எழுப்புதலடைய செய்யும் வார்த்தையின் வியாக்கியானத்தை வெளிப்படுத்தும் வெளிப்படுத்தல் போல, திராட்சரசம் தண்ணீரைக் குறிக்கிறது. என்னே! “இதற்கு முன்பு நான் இவ்விதம் காணவே இல்லை! என்னே! மகிமை!'' அது என்ன? - பாருங்கள்? வெளிப்படுத்தலினால் வரும் எழுப்புதல். அன்று நான் உட்கார்ந்துக் கொண்டிருக்கும்போது பெற்ற வெளிப்படுத்தலுக்கு முன்பு நான் அதை அறியவில்லை. பாருங்கள்? இப்பொழுது, “எண்ணெயும் திராட்சரசமும் எதைக் குறிக்கிறது... ”அது தான், நீ அதை சேதப்படுத்தாதே,'' மூன்றாம் சபையின் காலமாகிய இருண்ட யுகத்தில் கறுப்புக் குதிரையின் மீது அவன் சவாரி செய்தான். கவனிக்கவும். அதில் சிறிதுதான் விடப்பட்டிருக்கிறது. சிறிது மட்டுமே விடப் பட்டுள்ளது. அதைச் சேதப்படுத்தாதே. அதைச் சேதப்படுத்தாதே என்று சொல்லப்பட்டதைக் குறித்த சரியான விளக்கம் விடப்பட்டிருக்கிறது. மூன்றாம் முத்திரையின் ஒலி நாடாவை வாங்கி கேட்பீர்களானால் நாம் அதில் தெளிவாக விளக்கியிருப்பதைக் காண்பீர்கள். 50சகோதரன் பிரான்ஹாமே, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகமும்; ஜீவ புஸ்தகமும் ஒரே புத்தகமா? நிச்சயமாக. இந்தப் புஸ்தகத்தில்தான் மீட்புக்குரிய எல்லா காரியங்களும் எழுதப்பட்டிருக்கிறது. பாருங்கள்? அவர்கள் பெயர்கள் யாவும் அதில் உள்ளன. “நல்லது, சகோதரன் பிரான்ஹாமே, நம்முடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது, அன்றொரு இரவு என்னுடைய பெயர் அதில் எழுதப்பட்டது''. இல்லை, உன்னுடைய பெயர் இப்பொழுது எழுதப்படவில்லை. அந்த இரவுதான் உன்னுடைய பெயர் அதில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டாய். ஏனென்றால் உலகத்தோற்றத்திற்கு முன்பே பெயர்கள் அதில் எழுதப்பட்டிருக்கிறது. பாருங்கள்? எல்லாம் ஒரே புஸ்தகம் என்பதை அறிந்து கொள்ளவும். பாருங்கள். 51சகோதரன் பிரான்ஹாமே, கிறிஸ்து வந்த பிறகு பிறந்த ஒவ்வொரு யூதனும் இரட்சிக்கிப்படுவான் என்பது உண்மையா? 1,44,000 பேர் யார்? பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்படுவதற்காக முன் குறிக்கப்பட்டவர்கள் இவர்களா? அவர்களுடைய ஊழியம் என்ன? இங்கே, ஒரே கேள்வியில் மூன்று கேள்விகள் உள்ளன. முதல் கேள்வியானது: கிறிஸ்து வந்த பிறகு பிறந்த ஒவ்வொரு யூதனும் இரட்சிக்கப்படுவானா? இல்லை, யூதனோ, அல்லது புறஜாதியானோ, உலகத்தோற்றத்திற்கு முன் யாருடைய பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப் பட்டிருக்கிறதோ, அவர்கள் மாத்திரமே இரட்சிக் கப்படுவார்கள். பாருங்கள்? அவ்வளவுதான். மற்றவர்கள் இரட்சிக்கப்படுவதில்லை. அந்தப் புஸ்தகத்தில்தான் தேவரகசியம் அடங்கியிருக்கிறது. அந்தப் புஸ்தகம் திறக்கப்பட்டு இப்பொழுது, இரகசியம் வெளிப்படுவதினால், ஒவ்வொருவருடைய பெயரும் வெளிப்படுவதில்லை. ஆனால் அவர்களுடைய பெயர்கள் அழைக்கப்படுகிறது. அதை இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? பாருங்கள்? 52'லீ வேயில், அல்லது ஓர்மன் நெவில் அல்லது யாராகிலும் ஒருவர் இந்தச் சபையின் காலத்தில் இரட்சிக்கப்பட வேண்டும்'' என்று அந்தப் புஸ்தகம் கூறுவதில்லை. அவ்விதம் அது கூறுவதில்லை. என்ன இரகசியம் என்பதை அது வெளிப்படுத்துகிறது. ஆனால் நாமோ, அவைகளை வெளிப்படுத்தலினால் விசுவாசிக் கிறோம். இதைத்தான் நான் அன்றிரவு கூறினேன். “ஜெபர்சன்வில்லில் ஒருவர்தான் இரட்சிக்கப் படுவார் என்று சகோதரன் பிரான்ஹாம் கூறினார். ஆகவே நான் முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்று ஒருவர் சொன்னார். பாருங்கள்? இப்பொழுது அது ஒரு உவமையைக் காண்பிக்கிறது. அது -அது-அதுவல்ல, அதுஅதுவல்ல. ஆயிரம் பேர் இரட்சிக்கப்படலாம். எனக்குத் தெரியாது. ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படலாம். ஆனால் அது எனக்குத் தெரியாது. ஆனால் “அந்த ஒருவன் நான்தான்” என்று இவ்விதமாகத்தான் நான் விசுவாசிக்க விரும்புகிறேன். நீங்களும் அவ்விதமே விசுவாசியுங்கள். நீங்கள் அவ்விதம் விசுவாசிக்கவில்லையென்றால் உங்கள் விசுவாசத்தில் ஏதோ ஒரு தவறு உண்டு. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதைக் குறித்து நீங்கள் நிச்சயமற்றவர்களாய் இருக்கிறீர்கள். 53நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களோ, அல்லது இல்லையோ என்பதை நிச்சயமாக நீங்கள் அறியாதிருக்கும்போது எப்படி நீங்கள் மரணத்தை சந்திக்கச் செல்லுவீர்கள்? பாருங்கள்? கால்களை மடக்கிக் கொண்டிருக்கும் ஒரு குருடனான முடவனிடம் சென்று அவனைப் பார்த்து, ''கர்த்தர் உரைக்கிறதாவது: எழுந்திரு. இதோ இயேசு கிறிஸ்து உன்னை முற்றிலும் சுகமாக்கிவிட்டார்'' என்று எவ்விதம் சொல்லுவாய்? மணிக்கணக்காக மரித்து, குளிர்ந்துபோய் விறைத்துக் கிடக்கும் பிணத்திற்கு முன்பாக நின்றுக்கொண்டு, “கர்த்தர் உரைக்கிறதாவது: நீ எழுந்து காலூன்றி நில்'' என்று எப்படிச் சொல்லுவாய்?... நீ எதைக் குறித்து பேசுகிறாய் என்பதை அறிந்தவனாக இருக்கவேண்டும். பாருங்கள்? 54நல்லது, ''மரணம் எல்லாவற்றையும் பறித்துக் கொள்ளுகிறது. எல்லாம் நடந்தேறிவிட்டது'' என்று நீங்கள் கூறலாம். ஆம். ஆனால் தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்படும்போது, அது தேவன் என்று நீ அறிவாய். அதுவே காரியங்களை மாற்றியமைக்கின்றது. அது சரி. இப்பொழுது எல்லா யூதர்களும் இரட்சிக்கப்பட மாட்டார்கள். இல்லை, ஐயா! எல்லோரும் இரட்சிக்கப்படுவதில்லை. யூதர்கள் என்பது அவர்கள் எருசலேமை விட்டு வெளியே போனபோது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும். நேபுகாத்நேச்சார் அவர்களை அவ்விதம் அழைத்தான் என்று நான் நினைக்கிறேன். யூதா கோத்திரத்தார் அப்பொழுது கொண்டு போகப்பட்டதால் முதலில் “யூதர்கள்'' என்னும் பெயர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இப்பொழுது அவர்கள் யூதேயாவிலிருந்து வந்ததினால் அவர்களுக்கு யூதர்கள் என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. 55ஆனால், இஸ்ரவேல் என்பது வித்தியாசமானதாகும். இஸ்ரவேல், யூதர்கள் என்னும் பெயர்கள் முற்றிலும் வித்தியாசமானவைகள். ஒவ்வொரு யூதனும் ஒரு இஸ்ரவேலன் அல்ல என்பதை கவனிக்கவும். இல்லை, அவன் ஒரு வெறும் யூதன்... எல்லா யூதர்களும் இரட்சிக்கப்படுவார்கள் என்று பவுல் கூறவில்லை. ''எல்லா இஸ்ரவேலரும் இரட்சிக்கப் படுவார்கள்'' என்று அவன் கூறினான். ஏன்? ஆதியிலிருந்து இஸ்ரவேல் என்பது மீட்புக்குரிய பெயராகும். பாருங்கள். எல்லா இஸ்ரவேலர்களும் இரட்சிக்கப்படுவார்கள். ஆனால் எல்லா யூதர்களும் இரட்சிக்கப்படுவதில்லை. பாருங்கள். ஆயிரமாயிரமான புறஜாதியின் மக்கள் லட்சக்கணக்கான ஸ்தாபன சபைகளில் இருந்து கொண்டே தங்களை கிறிஸ்தவர்கள் என்றும், கிறிஸ்துவின் சபையென்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இது ஒன்றுமே கிடையாது. இது, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்பதல்ல. “நீங்கள் இந்த ஸ்தாபனத்தையோ அல்லது அந்த ஸ்தாபனத்தையோ அல்லது ஏதாகிலும் ஒரு ஸ்தாபனத்தையோ சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். உங்களுடைய பெயர் எங்களுடைய புத்தகத்தில் இல்லையென்றால் நீங்கள் இழக்கப்பட்டவர்கள்'' என்று மக்கள் கூறுகிறார்கள். அதுதான் மார்க்க பேதங்களைக் கொண்டுவந்து ஸ்தாபனங்களை உருவாக்குவதாகும். பாருங்கள்? 56நீங்கள் இரட்சிக்கப்பட ஒரே ஒரு வழி உண்டு. “அது விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.'' தேவன், தம்முடைய முன்னறிவினால் தம்முடைய மகிமைக் கென்று ஒரு சபையை முன் குறித்தார். அவர்கள்தான் இரட்சிக்கப்படுவார்கள். இதுதான் சரியான காரியம். இப்பொழுது உன்னுடைய விசுவாசம் அங்கேதான் நங்கூரமிடப்பட்டிருக்கின்றது. “என்னுடைய விசுவாசம் அங்கே நங்கூரமிடப்பட்டிருக்கிறது'' என்று நீ கூறலாம். ஆனால், நீ எவ்வித ஜீவியம் செய்கிறாய் என்று பார். நீ அதற்கு தகுதியற்றவன் என்று காட்டுகிறது. உன்னுடைய நங்கூரம் தவறானதாக இருக்கிறது. அது, கற்பாறையின் மீது நங்கூரமிடப்படாமல் மணலின்மீது போடப்பட் டிருக்கிறது. ஒரு சிறு அலை அதை தூரே எறிந்துவிடும். ஊம். 57வார்த்தையானது வெளிப்படுத்தப்படும்போது, “என்னுடைய சபை அதை போதிப்பதில்லை!'' என்று கூறுவாயானால், உன்னுடைய நங்கூரம் பாறையின் மீது போடப்படாமல் மணலின் மேல் போடப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஊ..ஊ... அது உண்மையே. ஆகவே, இப்பொழுது நீங்கள் அதைக் காண்கிறீர்கள். 1,44,000 பேர்கள் முன் குறிக்கப்பட்டவர்களா? ஆம் ஐயா! அவர்கள் இஸ்ரவேலர் - ஆவிக்குரிய இஸ்ரவேலர். அங்கே லட்சக்கணக்கான மக்கள் இருப்பார்கள் என்பதை நினைவு கூருங்கள். இப்பொழுது எத்தனைப்பேர் அங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஒரு முழு கூட்டமே என்று நான் யூகிக்கிறேன். ஆனால் அவர்கள் யூதேயாவில் இருப்பதினாலாயே எல்லோரும் இரட்சிக்கப் படுவதில்லை. பாருங்கள்? இப்பொழுது, எத்தனைப் பேர் அங்கிருக்கிறார்கள் என்பதைக் குறித்து ஒரு எண்ணம் உண்டா ? எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த உபத்திரம் துவங்குவதற்கு முன்பு... ஒருவேளை பெருகக்கூடும். இவைகளைக் குறித்த ஒலி நாடா ஒன்று என்னிடம் உண்டு. என்னுடன் மேற்கிற்கு எடுத்துச் சென்று, இப்பொழுது அது -அதுஅந்த-அந்த-அந்த உடன்படிக்கை சபை... 58அங்கே லட்சக்கணக்கான மக்கள் இருப்பார்கள் என்பதை நினைவு கூருங்கள். இப்பொழுது எத்தனைப்பேர் அங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. ஒரு முழு கூட்டமே என்று நான் யூகிக்கிறேன். ஆனால் அவர்கள் யூதேயாவில் இருப்பதினாலாயே எல்லோரும் இரட்சிக்கப் படுவதில்லை. பாருங்கள்? இப்பொழுது, எத்தனைப் பேர் அங்கிருக்கிறார்கள் என்பதைக் குறித்து ஒரு எண்ணம் உண்டா ? எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த உபத்திரம் துவங்குவதற்கு முன்பு... ஒருவேளை பெருகக்கூடும். இவைகளைக் குறித்த ஒலி நாடா ஒன்று என்னிடம் உண்டு. என்னுடன் மேற்கிற்கு எடுத்துச் சென்று, இப்பொழுது அது -அதுஅந்த-அந்த-அந்த உடன்படிக்கை சபை... 59அது சற்று பழமையான... ஓ, இப்பொழுது அது எனக்கு ஞாபகமில்லை. அது ஆரம்பித்தது. ஆப்பிரிக்காவில் டட்சு சீர்திருத்த சபையில் அந்த உடன்படிக்கை இருக்கிறது. அவர்களில் யாராவது இப்பொழுது இங்கே உட்கார்ந்துக் கொண்டிருப் பார்களானால், அது எப்படி என்பதைக் கூறுவேன். நீங்கள் இன்னும் அந்தப் பழைய “ஐடல் பெர்க் மதபோதனைகளை'' (Heidelberg catechism) பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதன் காரணமாகத்தான் நீங்கள் இன்னும்... டச்சு சீர்திருத்தச் சபையை சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் வெளிப்புறத்தில் அமெரிக்கப் பெயரை வைத்திருந்தாலும் அந்தப் பழைய ஐடல் பெர்க் மத போதனைகளையே போதிக்கிறீர்கள். இது சரியா இல்லையா என்று உன்னுடைய மேய்ப்பரைக் கேட்டுப்பார். ஆகவே, இந்த 1,44,000 பேர் பரிசுத்த ஆவியினால் முத்திரைப் போடப்படுவதற்கென்று முன்குறிக் கப்பட்டவர்களா? ஆம் ஐயா! அது சரியாக அப்படித்தான். அது சரி. இப்பொழுது ஏதாவது.. இப்பொழுது நான்.... இது உங்களுக்கேற்றவாறு பதில் அளிக்கப்படவில்லை என்றால், ஒருவேளை நான் தவறாக இருக்கக்கூடும். இது, சிறந்த முறையில் நான் அறிந்துக்கொண்டவாறு அளிக்கப்பட்டிருக்கிறது. 60சகோதரன் பிரான்ஹாமே, சர்ப்பத்தின் வித்து என்னும் செய்தியைக் குறித்து நீங்கள் அதிகக் கடினமாக பிரயாசப்பட்டதினால்... (ஓ. நான் இதைக் காணவே இல்லை. இது என்னைவிட்டு நழுவிப்போனது)... இந்த வாரத்தில் சர்ப்பத்தின் வித்தைக் குறித்து, இந்த கேள்வியைக் கேட்பது சரியாக இருக்குமா? என்னுடைய நண்பர்கள் ஆதியாகமம் 4:1ஐ விளக்கும்படி கேட்டார்கள், என்னால் அது முடியவில்லை. நீர் எனக்கு உதவி செய்வீரா? இது இப்பொழுது பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயத்திற்கு புறம்பாக இருக்கிறது. ஆனாலும் தேவனுடைய ஒத்தாசையினால் என்னால் என்னால் என்னால் முடிந்தவரை முயற்சிக்கிறேன். இப்பொழுது கவனிப்போம். அதைக் குறித்து நான் சற்று சரிசெய்துக் கொள்ளட்டும். ''நான் கர்த்தரிடமிருந்து ஒரு குமாரனைப் பெற்றேன்'' என்று அவள் அங்கு கூறினாள் என்று நினைக்கிறேன்... ஏவாள் அதைக் கூறினாள் என்று நினைக்கிறேன். 61அன்றொரு இரவு ஏழாயிரத்திற்கு பதிலாக ஏழு... அதற்கு... ஏழு நூறு என்று சொல்லி விட்டேன். ஆகவே இது சரியா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ள விரும்புகிறேன். இது என்னை பயமுள்ளவனாக்குகிறது. (nervous) சத்துரு எப்பக்கமும் சூழ்ந்திருப்பதால் அதை உணர்ந்து நீங்கள் விழிப்புடன் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். ஆமாம், அப்படித்தான். ''ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி; காயீனைப்பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்“ இப்பொழுது என்னுடைய சகோதரனோ, அல்லது சகோதரியோ, நான் இப்பொழுது உங்களுடைய கேள்விக்கு பதில் அளிக்கப் போகிறேன். இதை உங்கள் மீது வீசி எறிவதல்ல. நான் உங்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். இதில் குற்றம் கண்டு பிடிப்பவராக இருப்பவரை நான் நேசிக்கிறேன்; ஆனால் இவர் குற்றம் கண்டு பிடிப்பவர் என்று நான் நினைக்கவில்லை. ''எனக்கு உதவி செய்யும்'' என்று கேட்டிருக்கிறார். மக்கள் இதை விசுவாசித்த போதிலும் கேள்வி கேட்பவர்களுக்குச் சரியான முறையில் பதில் உரைக்க ஆவியானவர் அவர்களை நிலை நிறுத்தாததினால் இவ்விதம் கேட்டிருக்கிறார்கள். பாருங்கள். 62கேள்வி என்ன? “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்று ஏவாள் கூறினாள்'' என்பதை அவர்கள் கூறுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. காரியம் சரியோ அல்லது தவறே, ஜீவன் தேவனிடத்திலிருந்து வரவில்லையென்றால் அது எங்கிருந்து வரும் என்று நினைக்கிறீர்கள்? யூதாஸ்காரியோத்தை உலகத்திற்கு அனுப்பினது யார்? அதை எனக்கு சொல்லுங்கள். அவன், ''கேட்டின் மகனாக பிறந்தான் என்று வேதம் கூறுகிறது. எலுமிச்சம் பழத்தில் புழு இருப்பது போல - இவ்விதமாக அவர்களைக் கேட்கும்பொழுது. பாருங்கள்? பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அவர்களால் முடியாது - முடியாது. அது இருக்கின்றது. 63கவனியுங்கள். இதை இன்னும் தெளிவாக அறிந்துக்கொள்ள வேண்டுமென்றால், இங்கே எழுதியிருக்கிறவண்ணமாகப் பார்க்கும் போது, இது ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைக்கப்பட் டிருக்கிறது. இங்கே போதிக்கப்பட்டிருக்கிறபடி ஏவாள் தேவனிடத்திலிருந்து தான் இந்த குமாரனை பெற்றாள் என்று தோன்றுகிறது. அவர் ஒரு ஆவியாக இருக்கிறார், அவர் அதைச் செய்யமுடியாது, கவனித்தீர்களா? இப்பொழுது கவனியுங்கள், “கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்'' என்பதைக் கவனிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இதற்கு சரியான ஒரு வியாக்கியானம் இருக்கவேண்டும். ஆமாம், ஐயா. இல்லை யெனில், அப்பொழுது ஆவி... நாம் எப்பொழுதும் நம்முடைய பெற்றோரின் தன்மையைப் பெற்றுக்கொள்கிறோம். நீங்கள் அதை அறிவீர்கள். குழந்தையின் சுபாவத்தைக் கவனியுங்கள். ஆதாம் தேவனுடைய குமாரன், ஏவாள் தேவனுடைய குமாரத்தி, இவர்கள் தேவனுடைய சிருஷ்டிப்பின் முதன்மையானவர்களாக இருந்ததால், அவர்களில் சிறிதேனும் தீமை இருக்க வில்லை. தீமை அப்பொழுது காணப்படவும் இல்லை. அப்படி இருக்கும்போது, காயீன் எப்படி ஒரு பொய்யனும், கொலைக்காரனுமாய் இருந்தான்? இவைகள் எங்கிருந்து வந்தன? அதைக் குறித்து உங்களையே நீங்கள் கேட்டுப் பாருங்கள். அதுதான் சர்ப்பத்தின் வித்து. பாருங்கள்? அவ்விதம் வேதாகமம் கூறவில்லையா? அவனுக்கு பிறகு வந்த அவனுடைய சந்ததியைக் கவனித்துப் பாருங்கள். 64இந்த உலகம் யாரை சேர்ந்ததாக இருக்கிறது? - பிசாசை. இப்பொழுது இதை ஆட்கொண்டிருப்பது யார்? - பிசாசு. முற்றிலும் சரி. பிசாசு உலகத்தை அடக்கி ஆண்டுக்கொண்டிருக்கிறான். அவன், இயேசுவுக்கு இதின் எல்லா மகிமையையும், அழகையும் காண்பித்து, 'நீர் என்னை பணிந்துக் கொண்டால், இதை உமக்கு கொடுப்பேன்'' என்று கூறினான். அவன் அதை அடக்கி ஆண்டுக்கொண்டிருக்கிறான். இப்பொழுது அவன் அதைச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள். பிசாசின் பிள்ளைகள் உலக ஞானமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். காயீனுடைய பிள்ளைகளின் வம்ச வரலாறுகளை கவனிப்பீர்களானால் அவர்களில் ஒவ்வொருவனும் சாதுரியமுள்ளவன் என்பதை அறிந்து கொள்வீர்கள். 65அவன் ஆபேலை கொலை செய்தபோது, தேவன் அவனுக்குப் பதிலாக சேத்தைத் தந்தார். மரித்துப்போன நீதிமான்கள் மீட்கப்படும்போது அவர்கள் உயிர்த்தெழுவதற்கு சேத் ஒரு மாதிரியாக வைக்கப்பட்டிருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள், இயற்கையான வித்துக்களின் முதல் வித்து மரிக்கவேண்டும். இப்பொழுது உங்களுடைய சிந்தை திறக்கப்பட்டிருக்கிறதா? பாருங்கள்? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர்- ஆசி) இயற்கையான வித்துக்களின் முதல் வித்தாகிய ஆபேல், இப்பொழுதிருக்கும் சபைக்கு மாதிரியாக இருக்கிறான். அந்த சந்ததி காக்கப்படுவதற்கு மற்றொருவன் எழும்பத்தக்கதாக ஒருவன் மரிக்க வேண்டியதாய் இருந்தது. இது மீண்டும் மறு பிறப்பாக இருக்க வேண்டியதாய் உள்ளது. நீங்கள் இதைப் பிடித்துக் கொண்டீர்களா? (”ஆமென்'') இது அவ்வண்ணமாகத்தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பாருங்கள். பாருங்கள்? இது ஒரு பூரணமான 'மாதிரியாக உள்ளது. ஆகவே, ஆதாமுக்கு பிறந்த இயற்கையான மனிதன்கூட அந்த இயற்கையான போக்கை காண்பிக்கிறான். இது கிரியைச் செய்யாது. இயற்கையான மனிதன் தேவ னுடைய காரியங்களைப் புரிந்துக்கொள்ளுவதில்லை. ஆகவேதான் இது மீண்டும் திருப்பப்படுவதற்காக (to restore) ஒரு மனிதன் (A Man) இயற்கையாக வந்து மரிக்க வேண்டியதாய் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்காக, ஆபேல் மரித்தபோது அவன் ஸ்தானத்தில் சேத் வரவேண்டியதாய் இருந்தது. 66அவனில் இருந்த ஆவி எவ்விதமான மக்களை கொண்டு வந்தது என்பதைக் கவனியுங்கள். பயிர் செய்கிறவர்களும், ஆடு மேய்ப்பவர்களுமாகிய எளிமையான மக்கள்தான் அவனில் இருந்து தோன்றினார்கள். இந்த உலக ஞானத்தில் இருந்து கொண்டுவரப்படுகிறது எதுவென்பதை கவனித்துப்பாருங்கள். சாதுரியமானவர்களையும், கட்டடம் கட்டுகிறவர்களையும், உலோகங்களினால் சிறந்த வேலை செய்கிறவர்களையுமே உலக ஞானம் பிறப்பித்திருக்கிறது. அவர்கள் எங்கே முடிகிறார்கள் என்பதை கவனியுங்கள். தேவன் தாழ்மையுள்ளவர்களை இரட்சித்து மற்றெல்லோரையும் அழித்துப்போட்டார். ''சாந்தகுணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்'' என்று இயேசு மத்தேயு 5ல் கூறவில்லையா? ஆகவே, கவலைப்படவேண்டாம்; அவர்கள் நிற்பதற்கு ஒரு அடி இடம்கூட இருக்காது. பாருங்கள்? அது காயீனுடைய குமாரனாக இருக்கும் என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை. இதைக்குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருக்கும் ஒலிநாடா நம்மிடம் இருக்கிறது. பாருங்கள்? இல்லை , ஐயா. 67ஏவாள் புசித்தது ஒரு ஆப்பிள்பழம் அல்ல அது ஒரு “ஏப்ரிகாட்'' என்னும் பழம் என்று விஞ்ஞானம் நிரூபிக்கப் போவதைக் குறித்த ஒரு துண்டு செய்தித்தாளை அவர்கள் வைத்திருந்ததை நான் கண்டேன். பாருங்கள்? அந்த செய்தித்தாள் இப்பொழுது என்னுடைய வீட்டில் இருக்கிறது. ”அது ஒரு ஏப்ரிகாட்“ என்னும் பழம் என்றெல்லாம் சொல்லுவது மாம்சீக சிந்தையே. மற்றும் மோசே தண்ணீரை கடக்கவில்லையென்றும், சவக்கடலுக்கு மேற்கு கரையில் நாணல் நிறைந்திருக்கும் தரை வழியாகவே இஸ்ரவேலரைக் கொண்டு வந்தார். ஒரு சமயம் தண்ணீரால் நிறைந்திருந்த இடம் இப்பொழுது நாணல்களால் நிறைந்திருக்கிறது. மோசே குறுக்கு வழியாகச் செல்ல அந்த வழியாகச் சென்றார் என்றெல்லாம் சொல்லுவது மாம்சீக சிந்தையே. இதுதான் உண்மையென்று வைதீகமான சபைகள் இதை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். 68ஓ, மனிதனே, சர்ப்பத்தின் வித்து -அந்திகிறிஸ்து மற்றும் எல்லாக் காரியங்களும் அங்கிருப்பதை உன்னால் காணமுடியவில்லையா? நிச்சயமாக ஆமாம், ஐயா. சகோதரன் பிரன்ஹாமே, ப்ளூ (Flu) ஜூரத்தினால் அதிக சுகவீனமாக இருக்கும் என்னுடைய பேரனுக்காக தயவு செய்து ஜெபிக்கவும். (இது ஒரு ஜெப விண்ணப்பமாக இருக்கிறது) அவன் இப்பொழுது ரிவர்வியூ ஓட்டலில் இருக்கிறான். கர்த்தராகிய இயேசுவே, இந்த எளிமையான நபர் இதை வீணாக எழுதவில்லை. அன்றொரு இரவு ஒரு சிறு பையனுக்கு இருந்த வாத ஜூரத்தை நீர் நீக்கினதை அவள் கண்டிருக்கிறாள். நீர் மகத்தான தேவன் என்பதை அவள் அறிந்திருக்கிறாள். அந்தச் சிறு பையனுக்காக நாங்கள் எங்கள் ஜெபத்தை ஏறெடுக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் அவன் சுகமடைவானாக. ஆமென். யாராகிலும் ஒன்றை எழுதும்போது அது வீணாகப் போவதில்லை. அது எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அதன் மறைவில் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவும். அந்த சகோதரி... அந்தச் சிறுபையன்... ஏதோ ஒன்று. 69யூதர்களுக்கு பிரசங்கிக்க வரும் எலியா, உலகத்தில் வாழ்ந்த அந்த உண்மையான மனிதனா, அல்லது எலியாவின் ஆவி மற்றொரு மனிதனுக்குள் வருவதா? இப்பொழுது அதைக் குறித்து... நான் இதைக்கூற பயப்படுகிறேன். இது எனக்கு தெரியாது பாருங்கள். நான் மறுபடியும் அதை படிக்கட்டும் யூதர்களுக்கு பிரசங்கிக்க வரும் எலியா (ஓ, ஆமாம்.) உலகத்தில் வாழ்ந்த அந்த உண்மையான மனிதனா, அல்லது எலியாவின் ஆவியை பெற்றிருக்கும் வேறொருவனா? இதற்கு நான் சரியாக பதில் கூறுவேனானால், ஏனோக்கைக் குறித்து கூற முடியும். பாருங்கள், ஆனால் நான்- நான் அதைச் செய்ய முடியாது. பாருங்கள். வேதம் என்ன கூறுகிறதோ அதை மாத்திரம் நான் அறிந்திருக்கிறேன். இப்பொழுது நான் அதை இவ்விதம் கூறட்டும். ஒலி நாடாவை கேட்கும் சகோதரர்கள் இதைப் புரிந்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். அது அந்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதன் என்று நான் விசுவாசிக்க முற்படுகிறேன். ஏனென்றால் எலிசாவின்மேல் எலியாவின் ஆவி அமர்ந்ததாக கூறவில்லையா? பாருங்கள், “எலியாவின் ஆவி'' எலியா செய்தது போலவே அவனும் செய்தான். பாருங்கள்? ஆனால் இதுதான் உண்மையென்று நான் கூற முடியாது. எனக்கு தெரியாது. பாருங்கள், நான் உங்களோடு உத்தமமாய் இருக்கிறேன். எனக்குத் தெரியாது. 70சகோதரன் பிரான்ஹாமே, ஞானஸ்நானத் தைக் குறித்து நீர் எனக்கு தயவு செய்து பதில் உரைப்பீரா? மத்தேயு 28:19 பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று போதிக்கிறது; பேதுரு, அப்போஸ்தலர் 2:38ல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் என்று போதிக்கிறார். அப்போஸ்தலர் நடபடிகளில் எப்பொழுது இந்த மாறுதல் வந்தது? இப்பொழுது நான் கர்த்தராகிய இயேசுவில் விசுவாசிக்கிறேன். நல்லது, இதை எழுதியது சகோதரனோ அல்லது சகோதரியே, யாராயிருந்தாலும், இதிலே எந்த மாறுதலும் வரவில்லை. இயேசு எதை செய்யச் சொன்னாரோ அதைத்தான் பேதுரு செய்தார். இப்பொழுது யாராகிலும் ஒருவர் வந்து பட்டப்பெயர்களாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதை உபயோகப்படுத்துங்கள் என்று கூறுவார்களானால்; தேவன் எதைச் செய்யவேண்டாம் என்று கூறினாரோ, பேதுரு எதைச் செய்யக் கூடாது என்று கூறினாரோ அதையே செய்தார்கள். பாருங்கள்? இயேசு கூறினது... 71நான் உங்களுக்கு ஒரு காரியத்தை காண்பிக்க விரும்புகிறேன். கவனியுங்கள். இப்பொழுது அந்த நபர் இங்கிருப்பாரானால், இப்பொழுது கவனியுங்கள். நான் உங்களுக்கு முன்பாக மூன்று பொருட்களை வைக்கப் போகிறேன். இப்பொழுது கவனியுங்கள் (எடுத்து காட்டாக மூன்று பொருட்களை சகோ. பிரான்ஹாம் அங்கே வைக்கிறார் - ஆசி). திரித்துவ மக்கள் மூன்று தனித்தனியான ஆட்களில் விசுவாசம் கொண்டிருப்பதுபோல இதுதான் பிதா, இதுதான் குமாரன், இதுதான் பரிசுத்த ஆவி என்று வைத்துக் கொள்ளுவோம். அவர்கள் இவ்விதமாகத்தான் மூன்று நபர்களாக விசுவாசிக்கிறார்கள் என்பதை அறிவீர்களா? நல்லது அதன்பின், நான்... அப்படியென்றால்... மத்தேயு 28:19ல் ''நீங்கள் உலகமெங்கும் போய் சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' இல்லை, என்னை மன்னியுங்கள்; அப்போஸ்தலர் 2ஐ கூறுகிறேன் என்று நினைக்கிறேன்-இல்லை, லூக்கா 24:49. நான் அதைப் புரிந்துக்கொள்ள மீண்டும் அதைப் படிக்கட்டும்; ஏனென்றால் அன்றொரு நாள் ஒரு காரியத்தை சொல்வதற்குப் பதிலாக நான். இதைச் சரியாக சொல்ல விரும்புகிறேன். நீங்கள் சொல்லுவதன் தலைப்பை நான் அறிவேன். ஆனாலும் அவர் என்ன சொன்னார் என்பதைக் கவனிக்க விரும்புகிறேன், 29-ம் அதிகாரம் 16-ம் வசனத்திலிருந்து வாசிப்போம். “பதினொருவரும் அமர்ந்து போஜனம் புசிக்கையில்.....'' பதினொரு சீஷர்களும்....., கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்து கொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் (“வானங்களிலும், பூமியிலும் சகல வல்லமையும் (All Power heavens and earth) என்று சகோதரன் பிரான்ஹாம் வாசிக்கிறார் - தமிழாக்கியோன்). பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு 28:16 72இப்பொழுது தேவனுடைய வல்லமை எங்கிருக்கிறது? தேவன் எங்கிருக்கிறார்? வானத்தில் உள்ள எல்லா அதிகாரமும், பூமியில் உள்ள சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கும்போது, தேவன் எங்கிருக்கிறார்? அவர் அங்கேதான் இருக்கிறார். பாருங்கள். உங்களுடன் பேசிக் கொண்டிருப்பவர்தான் அவர் என்பதை கவனியுங்கள். சரி. ''ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதாவின் நாமத்திலும், குமாரன் நாமத்திலும் பரிசுத்த ஆவியின் நாமத்திலும் அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து...'' இப்பொழுது திரித்துவக்காரர்கள் எல்லையாவது, “நான் உங்களுக்கு பிதாவின் நாமத்திலும், குமாரனின் நாமத்திலும், பரிசுத்த ஆவியின் நாமத்திலும் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்.'' இது பரிசுத்த வேதாகமத்தில்கூட இவ்விதமாக இல்லை. கவனித்தீர்களா? ஒவ்வொரு பெயருக்கும் பின்னாக 'நாமத்திலும்' என்று சொல்லாமல், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில்' என்றுதான் அவர் கூறினார். ஒரே நாமம். இங்கே கவனியுங்கள். நாமங்களில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்று சொல்லாமல் - நாமம் (N-a-m-e) என்று ஒருமையிலே- பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே, என்றுதான் கூறினார். பாருங்கள்? 73இப்பொழுது பிதா என்பது ஒரு நாமமா என்று உங்களை கேட்க விரும்புகிறேன். (சபையார் ''இல்லை'' என்று பதிலுரைக்கிறார்கள்) குமாரன் என்பது ஒரு நாமமா? (சபையார் ''இல்லை'' என்று பதிலுரைக்கிறார்கள்) எத்தனை பிதாக்கள் இங்கிருக்கிறீர்கள்? உங்களில் எத்தனைப் பேர் பிதா என்று அழைக்கப்படுகிறீர்கள்? எத்தனைக் குமாரர்கள் இங்கிருக்கிறீர்கள்? எத்தனை மனிதர்கள் இங்கிருக்கிறீர்கள்? பாருங்கள்? உங்களில் எத்தனைபேர் “பிதா, குமாரன், அல்லது மனிதன்'' என்று அழைக்கப்படுகிறீர்கள்? பாருங்கள்? ஒருமுறை ஒரு ஸ்திரீ என்னைப் பார்த்து, “சகோதரன் பிரான்ஹாமே, பரிசுத்த ஆவி என்பது ஒரு பெயர்; அது ஒரு ஆள்'' என்று கூறினதுபோல் இது இருக்கிறது. “ஆமாம் ஐயா. நான் ஒரு ஆள், ஆனால் என்னுடைய பெயர் ஆளல்ல'' என்று நான் கூறினேன். நான் ஒரு ஆள் என்பதை அறிவீர்கள். என்னுடைய பெயர் வில்லியம் பிரான்ஹாம், ஆனால் நான் ஒரு ஆள். பரிசுத்த ஆவி ஒரு ஆள். அவர் அதுவாகத்தான் இருக்கிறார். அது ஒரு பெயரல்ல; அது. ஒரு ஆளாக இருக்கும் தேவனின் ஒரு பட்டப் பெயர் என்பதைக் கவனிக்கவும். தேவனுடைய ஆள் தத்துவத்தின் ஒரு பட்டப் பெயராகும்-அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இப்பொழுது - இப்பொழுது.... “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளுக்கும் போதித்து அவர்களுக்கு பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று அவர் சொன்னது-பிதாவின் நாமத்திலும், குமாரனின் நாமத்திலும், பரிசுத்த ஆவியின் நாமத்திலும் என்று சொல்லாமல்; மற்றும், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமங்களில் என்றும் சொல்லாமல்; பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் என்றுதான் சொன்னார். பிதா என்பதும், குமாரன் என்பதும், பரிசுத்த ஆவி என்பதும் நாமமில்லையென்றால்; நாமத்தில் என்று சொல்லும் போது, அது எதைக் குறிக்கின்றது? 74இவைகளில் “எதை நாமம் என்று அழைக்கப்போகிறீர்கள்?'' - எந்த நாமம் அது? பட்டப்பெயர்தான் நாமம் என்று சொல்லுவீர்களானால் எந்தப் பட்டப்பெயரினால் ஞானஸ்நானம் கொடுக்கப்போகிறீர்கள்? - பிதாவின் நாமத்திலா அல்லது குமாரனின் நாமத்திலா? நாமம் என்று ஒருமையில் சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். நாம் இப்பொழுது பார்த்துக்கொண்டிருப்பது மத்தேயுவின் புத்தகத்தின் கடைசிப் பகுதியாகும். இதை நான் எப்பொழுதுமே விளக்கியிருக்கிறேன். “ஜானும் மேரியும் அதற்குப் பிறகு சந்தோஷமாக வாழ்ந்தார்கள்'' என்று ஒரு காதல் கதையின் கடைசிப் பகுதியை படித்துவிட்டு சொல்லுவீர்களானால்; ஜானும் மேரியும் யார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேயில்லை. நீங்கள் மறுபடியும் கதையின் முதல் பாகத்திற்குச் சென்று ஜானும் மேரியும் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பாருங்கள்? இப்பொழுது நீங்கள் இதைத்தான் மத்தேயுவில் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்புத்தகத்தின் கடைசிப் பகுதியை மாத்திரம் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். காரியம் என்னவென்பதை அறிந்துகொள்ள மத்தேயுவின் முதல் பகுதிக்கு மறுபடியும் சென்று படியுங்கள். அது மத்தேயு புத்தகத்தின் கடைசி அதிகாரத்தின், கடைசி வசனங்கள் ஆகும். 75இது நீங்கள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, “ஜானும் மேரியும் அதற்குப் பிறகு சந்தோஷமாக வாழ்ந்தார்கள்'' என்று மாத்திரங்கூறுவது போல் இருக்கிறது. அது ஜான் ஜோன்சும், மேரியும் அல்லது அது ஜான் ஹென்றியும் வேறொருத்தியும்; இது ஜானும் மற்றொருவளும் என்று இவ்விதமாக கூறுவீர்களானால், நீங்கள் அதை இன்னும் புரிந்து கொள்ள வில்லை. நீங்கள் அதை தெளிவாக அறிந்துக்கொள்வதற்கு அந்த புத்தகத்திற்கு மறுபடியும் சென்று முதலில் இருந்து படிக்க வேண்டும். இங்கே ஒரு சிறிய பகுதியை மாத்திரம் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை சரியாகப் புரிந்து கொள்வதற்கு நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும். மத்தேயுவின் சுவிசேஷத்தில் முதலாம் அதிகாரத்தை வாசிப்பீர்களென்றால் : 18-ம் வசனத்தில் இருந்து வம்ச வரலாறு கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனிப்பீர்கள். ''இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமானது. இது சரியா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) இப்போது, உங்களை ஒன்று கேட்கப்போகிறேன். இப்பொழுது மறுபடியும் கவனியுங்கள். (சகோதரன் பிரான்ஹாம் எடுத்துக்காட்டாக வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருளையும் சுட்டிக்காட்டுகிறார்) இது யார்? தேவனாகிய... ('பிதா'' என்று சபையார் பதிலுரைக்கிறார்கள்-ஆசி). தேவனாகிய... ('குமாரன்'') தேவனாகிய... ( 'பரிசுத்த ஆவி“ இபபொழுது இது யார்? ('பிதா'') இது யார் ('பரிசுத்த ஆவி'') இது யார்? ('குமாரன்''). குமாரன். சரி. எல்லாம் சரியாய் இருக்கிறது. இப்பொழுது நாம் அதைப் புரிந்து கொண்டோம். இது யார் என்று கூறினீர்கள்? - இது தேவனாகிய யார்? ('பரிசுத்த ஆவி'') பரிசுத்த ஆவி, சரி. இப்பொழுது சரி. 76இயேசு கிறிஸ்துவினுடைய ஜெந்தத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப் பட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே , அவள்... கர்ப்பவதியானாள் ('பரிசுத்த ஆவியினாலே'' என்று சபையார் பதிலுரைக்கிறார்கள்ஆசிரியர்). தேவன் தாம் அவருடைய பிதா என்று நீங்கள் கூறினீர்கள் என்று நினைத்தேன். இங்கே ஏதோ தவறு இருக்கிறது. அவருக்கு இரண்டு பிதாக்கள் இருக்கமுடியாது. நீங்கள் இதை அறிவீர்கள். பாருங்கள்? இங்கே ஏதோ தவறு இருக்கிறது. இவர்கள் மூன்று ஆட்கள் என்றால், இவர்களில் யார் அவருடைய பிதா? ''அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள்'' என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. இதற்கும் தேவனாகிய பிதாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தேவன்தாம் தம்முடைய பிதா என்று இயேசு கூறினார். தேவன் தாம் அவருடைய பிதா என்பதை நாம் அறிவோம். அப்படியென்றால் அவருக்கு இரண்டு பிதாக்கள் இருக்க வேண்டும். அப்படியென்றால் அவர் முறை தவறிப் பிறந்தவராக காணப்படுகிறார், இப்பொழுது நீங்களே உங்களை எங்கு கொண்டு வந்து விட்டீர்கள் என்பதை உணரமுடிகிறதா? இப்பொழுது... ''அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில்...'' 77அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்தான் என்பதை நினைவு கூருங்கள். இப்பொழுதே கர்த்தருடைய கரம் சமீபமாயிருக்கிறது. முன் குறிக்கப்பட்ட மக்கள் இதை பிடித்துக்கொள்வார்கள். பாருங்கள்? ''அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு ; உங்கள் வேதாகமத்தில் தொடர்ந்து கவனிக்கிறீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் -ஆசி) சரி. தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது தேவனால் உண்டானது.“ 'தேவனாகிய பிதா'? நான் இதைத் தவறாகப் படித்தேனா? (சபையார் ''ஆமாம்'' என்று கூறுகின்றனர் -ஆசி). நான் இதைத் தவறாகப் படித்தேன். இவளுக்குள் கர்ப்பம் தரித்திருப்பதற்கும், தேவனாகிய பிதாவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது-அது பரிசுத்த ஆவியானவர். அது சரியா? (“ஆமென்'') அப்படியானால் அது என்ன? - பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய ஆவியே. இப்பொழுது நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்கள். பாருங்கள்? 78தேவனாகிய பிதாவும், பரிசுத்த ஆவியானவரும் ஒரே ஒரு ஆளாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவருக்கு இரண்டு பிதாக்கள் இருக்கவேண்டும்; அப்படியென்றால் எந்தவிதமான ஆளை நீங்கள் ஆராதிக்கிறீர்கள்? இப்பொழுது எந்தவிதமான தேவனை பெற்றிருக்கிறீர்கள்? கவனியுங்கள். கவனியுங்கள். பரிசுத்த ஆவியாகிய தேவனும் பிதாவாகிய தேவனும் ஒரே ஒரு ஆள்தான். “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்.......... (இந்த ஆள் இங்கே இருக்கிறார்).......அவருக்கு........ என்று பேரிடுவாயாக........ என்ன? (சபையார் இயேசு என்று கூறுகின்றனர் -ஆசி) அவருடைய பெயர். இயேசு: இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.... (யாருக்கு வார்த்தை வருகிறது)..... அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.'' 79தேவனுடைய நாமம் என்ன? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் என்ன? (சபையார் “இயேசு” என்று கூறுகின்றனர் -ஆசி) அவருடைய பெயர் இயேசு என்று வேதம் கூறுகிறது. இதைக் குறித்து விவாதம் செய்வதற்கு இக்கூடாரத்திற்கு வந்தி ருந்த ஒருவர் இவ்விதம் கூறினார். ''சகோதரன் பிரான்ஹாம் மற்றெல்லாவற்றையும் தெளிவாக்கி விட்டார். ஆனால் இதை அவரால் செய்ய முடியாது. இங்கே இவர்கள் மூன்று ஆட்கள் என்று தெளிவாக கூறுகிறது. மத்தேயு 3-ம் அதிகாரத்தில் யோவான் இங்கே நின்றுக்கொண்டிருக்கிறார். பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார். குமாரன் ஞானஸ்நானம் பெறுவதற்கு இங்கே வருகிறார். அவர் தண்ணீருக்குள் சென்றார், யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்; தண்ணீரிலிருந்து கரையேறினபோது வானம் அவருக்கு திறக்கப்பட்டது. வானத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல இறங்கி வந்தார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, 'இவர் என்னுடைய நேசக்குமாரன் இவரில்'....... என்று கூறிற்று''. ஒரே நேரத்தில் மூன்று வித்தியாசமான ஆட்கள். ஓ, என்னே! 80ஆம், பரிசுத்த ஆவியை பெறாதவர்களும், தேவனால் அழைக்கப்படாதவர்களும் பிரசங்க பீடத்தண்டைக்கு போகக்கூடாது என்பதை இது மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது. அது சரி. தேவனுடைய ஒத்தாசையினால் இப்பொழுது அந்த மனிதனை எடுத்து அவருடைய தலையே சுற்றும்படியாக எல்லாவற்றையும் சேர்த்து ஒரு முடிபோட்டுவிட முடியும். கவனியுங்கள், எனக்கு எதைப் பற்றியும்.. நான் அவ்விதம் நினைக்கவில்லை. இவ்விதம் கூறினது சரியில்லை. என்னை மன்னிக்கவும். நான் அவ்விதம் நினைக்கவில்லை. கர்த்தாவே, நான் அவ்விதம் நினைக்கவில்லை. அவர் இதைக் குறித்து என்னை எச்சரிப்பதை உணர்ந்தேன். நான் அவ்விதம் கூற நினைக்கவில்லை. நான் வருந்துகிறேன். பரிசுத்த ஆவியானவர் அவருக்கு சில இரகசியங்களை வெளிப்படுத்தக் கூடும் என்று விசுவாசிக்கிறேன். -அதுதான் சரியென்று தோன்றுகிறது. 81ஒரு இசைக்கருவியை சுருதி கூட்டும்போது, ஏதாகிலும் தவறு செய்யும்போது நீங்கள் அதை உணரமுடியும். அதுதான் கிறிஸ்தவனுக்குரிய பண்பாகும். நீங்கள் சில தவறானதை சொல்லும்போது அதை அவர் விரும்புவது இல்லை. நான் அவ்விதம் கூறினபோது என்னை அங்கு நுழைக்கப்பார்த்தேன். பாருங்கள்? நான் அந்தக் காட்சியில் இருக்கவில்லை. நான் அந்தக் காட்சியில் இருக்க விரும்பவில்லை; அதைச் செய்கிறவர் அவர். அவரே அந்த வேலையைச் செய்யட்டும். எக்காளத்தை தொனிக்கச் செய்கிறவர் அவர். எக்காளங்கள் தானாகவே தொனிக்கமுடியாத ஊமையான கருவிகள், அதற்குப் பின்னாக இருக்கிறவரின் சத்தம் தான் அதை தொனிக்கச் செய்கிறது. இப்பொழுது இங்கே கவனியுங்கள். மனிதன் தவறான முறையில் வார்த்தையை வியாக்கியானம் செய்கிறான். வார்த்தையானது ''கல்வி மான்களுக்கும், ஞானிகளுக்கும் மறைக்கப்பட்டு பாலகர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கே பூமியின் மீது இயேசு கிறிஸ்து ஒரு ஆளாக நின்றுக் கொண்டிருக்கிறார். வானம் நமக்கு மேலிருக்கும் ஆகாயமாகும். இப்பொழுது கவனியுங்கள். யோவான் இதற்கு சாட்சியாக இருக்கிறான்....... “பிதாவாகிய தேவன் இங்கிருக்கிறார். தேவனாகிய பரிசுத்த ஆவி புறாவைப்போல இங்கே இருக்கிறார். தேவனாகிய குமாரன் இங்கே இருக்கிறார்' என்று அந்த மனிதன் மூன்று ஆட்களாக சொல்லி இருக்க வேண்டும்.'' அது தவறாகும். 82அங்கே நின்றுக் கொண்டிருந்த யோவானுக்கு இது அந்த ஆட்டுக் குட்டியானவர் என்பது தெரியும். “தேவனுடைய ஆவியானவர் ஒரு ஆட்டுக்குட்டியாக இருப்பதைக் காண்பதாக யோவான் சாட்சி கூறினான். தேவனாகிய ஆவியானவர். ஒரு புறாவைப்போல, என்று நான் நினைக்கிறேன். அன்றிரவு இதேப்போல கூறினேன், எழுநூறு என்பதற்கு பதிலாக. பாருங்கள்? தேவனுடைய ஆவியானவர்-இங்கே இந்த ஆட்டுக்குட்டி. தேவனுடைய ஆவியானவர்-தேவன் புறாவாக வந்தார். தேவனுடைய ஆவியானவர் வானத்திலிருந்து இறங்கி வரும்போது, ”இவர் என்னுடைய நேசக்குமாரன், நான் இவரில் வாசம் பண்ண விரும்புகிறேன்'' என்னும் சத்தம் வானத்திலிருந்து வந்தது. வானத்திலும், பூமியிலும் சகல வல்லமைகளும் என் கரத்தில் எனக்குக் கொடுக்கப்பட்டிருகிறது. பாருங்கள்? பாருங்கள்? பாருங்கள்? அதுதான் அவர். இப்பொழுது அவருடைய நாமம் என்ன? (''இயேசு'' என்று சபையார் பதிலுரைக்கிறார்கள்- ஆசிரியர்). உண்மையாகவே. பாருங்கள்? 83திரித்துவக்காரரின் மூன்று வெவ்வேறான தெய்வங்கள் என்னும் தத்துவமானது அஞ்ஞானிகளுடைய உபதேசமாகும். வேதாகமத்தில் அவ்விதம் கூறப்படவில்லை. சிங்கத்தினுடைய செய்தியில் இது கூறப்படவில்லை. இது அந்திக்கிறிஸ்துவிலிருந்து உண்டான ஒரு காரியமாகும். எந்த ஒரு வேத சாஸ்திரியையும் கேட்டுப்பார். நிக்கொலாய் மதஸ்தரின் கொள்கையினால்தான் இது பிரவேசித்திருக்கிறது. ஆகவே தான் அது மார்டின் லூத்தருடனும் வந்தது. ஆகவேதான் அது ஜான் வெஸ்லியுடனும் வந்து, பெந்தெகொஸ்தே மக்களிடத்திலும் ஊற்றப்பட்டிருக்கிறது. பெந்தெகொஸ்தே மக்கள் வந்தபோது “இயேசு மாத்திரமே'' என்னும் கூட்டத்தினரும் வந்தனர். இது மறுபடியும் தவறானதொன்றாகும். இயேசுவே எப்படி தம்முடைய பிதாவாக இருக்கமுடியும்? பாருங்கள்? ஆகவே இது அதையும் வீழ்த்திவிடுகிறது. ஆனால், கழுகின் காலமொன்று வரவேண்டியதாயிருக்கிறது. பாருங்கள்? அந்த காலத்தில்தான் எல்லா இரகசியங்களும் தெளிவாக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. பாருங்கள்? 84''பிதா, குமாரன், பரிசுத்த ஆவி“ இவைகள் எல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பட்டப் பெயர்களாய் இருக்கின்றன. அந்த மூன்று பேரையும் கவனித்துப் பாருங்கள். ”பிதா, குமாரன், பரிசுத்த ஆவியென்று“ மத்தேயு கூறுகிறார். ''கர்த்தராகிய இயேசு கிறிஸ்து'' என்று பேதுரு கூறுகிறார், பிதா யார்? கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, ''என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும்” என்று கூறினார். அது சரியா? பிதா, குமாரன்-இயேசு, பரிசுத்த ஆவி-தேவனிடத்திலிருந்து புறப்பட்ட 'லோகாஸ்' என்னும் வார்த்தை . “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்பது தேவனுடைய ஆள் தத்துவத்தை மூன்று வித்தியாசமான வழிகளில் வெளிப்படுத்தும் மூன்று பட்டப் பெயர்களாகும்; அல்லது ஒரே ஒரு ஆளுக்குரிய மூன்று லட்சணங்களாகும். இதைச் சரியாகப் புரிந்துக்கொள்ள முடியாதவர்களுக்குஇவைகள் ஒரே தேவனின் மூன்று அலுவல்களாக இருக்கிறது. ஒரே தேவனின் மூன்று பண்புகள். மூன்று வித்தியாசமான யுகங்களில் தம்முடைய பிதாவின் தன்மையையும், குமாரனுக்குரிய தன்மையையும், பரிசுத்த ஆவிக்குரிய தன்மையையும் வெளிப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார். தேவன் மூன்றில் பரிபூரணப்படுகிறார். அந்திக்கிறிஸ்துவின் இலக்கம் நான்கு என்பதை நினைவுகூறுங்கள். பாருங்கள்? “பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்பது முற்றிலுமாக ''கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிப்பதாகும். “இயேசுவின் நாமத்தில் மாத்திரம் ஞானஸ்நானம் கொடுப்பதும் தவறானதாகும். ”வெறும் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பது“ முற்றிலும் தவறாகும். அநேக இயேசுக்களை நான் அறிந்திருக்கிறேன். 'லத்தீன்' (Latin) நாடுகளில் அநேக இயேசுக்கள் இருக்கிறார்கள். ஆனால் இது 'கர்த்தராகிய இயேசுகிறிஸ்து!'' இது யார் என்பதை தெளிவாகக் கூறுகிறது. அநேக பிரான்ஹாம்கள் இருக்கிறார்கள். நீங்கள் என்னுடன் நேரடியாக பேசவேண்டுமானால், நான் ஒருவனே வில்லியம் மரியன் பிரான்ஹாம். அதுதான் நான். ஆனால் வேறு அநேக வில்லியம் பிரான்ஹாம்கள் இருக்கிறார்கள். ஆனால் அபிஷேகம் பண்ணப்பட்டவராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பவர் ஒருவர்தான் என்பது தெளிவாக உள்ளது. அவர் ஒருவரே. அதுதான் சரி. இதற்கும் மேலாக ஏதாகிலும் இருக்குமாயின், கடிதம் எழுதி நான் மற்ற கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அனுப்பலாம். வியாதியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் வியாதியஸ்தருக்கு ஜெபிக்கவேண்டியவனாகவும் இருக்கிறேன். 85சகோதரன் பிரான்ஹாமே, இந்தக் கேள்வி இதில் பொருந்தவில்லை என்றால்... பதில் கூறவேண்டாம். (அது நல்லது, நான் அதைப் பாராட்டுகிறேன்) மிகவும் சிறியவர்களாகிய பிள்ளைகள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்களா? உமக்கு நன்றி. அவர்கள் கையொப்பம் இடவில்லை. இப்பொழுது இல்லை யென்றால், பரவாயில்லை. ஆனால் கவனியுங்கள், உலகத்தோற்றத்திற்கு முன் தேவன் ஒரு பெயரை ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதியிருக்கும் போது, உலகத்தில் உள்ள எதுவும் அதை அழித்துப்போட முடியாது. ஏனென்றால் அது கிறிஸ்துவின் இரத்தமாகிய மையினால் எழுதப்பட்டிருக்கிறது. அது இவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது அவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது அவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது எதுவாக இருந்தாலும், அது ஒன்றுபோலவே செல்லுகிறது. பாருங்கள். எல்லா பிள்ளைகளும், எல்லா சபையும், அங்கிருக்கும் ஒவ்வொன்றும்... தேவன், தம்முடைய முன்னறிவினால்... 86இப்பொழுது, நமக்கு ஒன்றும் தெரியவில்லை. ''சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் அங்கிருந்ததை நிரூபிக்கமுடியுமா?'' என்று நீங்கள் கூறலாம். இல்லை, ஐயா. நான் அதை நிரூபிக்க முடியாது. தேவன் என்னை வேறொரு காரியத்திற்கு கருவியாக உபயோகப்படுத்தக்கூடும், உங்களையும் அவ்விதமாகவே உபயோகப்படுத்துவார். ஆனால் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன். அறிவினால் நான் இரட்சிக்கப்படாமல் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். அவ்விதமாகத்தான் நீங்களும் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்விதமாகத்தான் நாமெல்லோரும் இரட்சிக்கப் பட்டிருக்கிறோம். ஆனால், தேவன் எல்லைக்கப்பாற்பட்டவர் என்பதை நினைவு கூறுங்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ஆமென் என்று கூறுகின்றார்கள் - ஆசி) - எல்லைக்கப்பாற்பட்டவர். நல்லது. எல்லைக்கப்பாற்பட்டவராய் இருப்பதால், அது அவரை சர்வஞானியாக்குகிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ('ஆமென்') சர்வஞானியென்றால் அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்பதாகும். எல்லைக்கப்பாற்பட்டவராக இல்லாமல் அவர் சர்வஞானியாக இருக்க முடியாது. பாருங்கள்? அவர் அறிந்திருப்பதேயல்லாமல் வேறெதுவும் இருந்ததில்லை. பூமியின் மீது இருக்கும் ஒவ்வொரு கொசுவையும் அவர் அறிந்திருந்தார். ஒவ்வொரு கொசுவும் எத்தனை முறை தன் கண்ணை சிமிட்டும் என்றும், ஒவ்வொன்றிலும் எவ்வளவு கொழுப்பு இருக்கும் என்றும், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்தால் எவ்வளவாய் இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். நீங்கள் சுவாசிக்கும் ஒவ்வொரு சுவாசத்தையும், உங்கள் நுரையீரலில் அது எவ்வளவு ஆழமாகச் செல்லும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதுதான் வரம்பிற்கப்பாற்பட்டவர் என்பதாகும். 87அவர் வரம்பிற்கப்பாற்பட்டவராக இருப்பது அவரை சர்வஞானியாக்குகிறது. அது சரியா? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர்ஆசி) அவர் சர்வஞானியென்றால் அது அவரை சர்வ வியாபியாக்குகிறது. ஏனென்றால் அவர் நிமிஷத்தையும், மணியையும், நேரத்தையும் ஒரு வினாடியில் 55,000த்தில் ஒருபாக அளவிற்கும் சரியாக அறிந்து, அது எப்பொழுது நடக்கும் என்பதையும் அறிவார். பாருங்கள்? இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? (''ஆமென்'') அப்படியென்றால் எல்லாவற்றையும் அறிவார். ஆகவேதான் அவர் சர்வவல்லமை உள்ளவராக இருக்கிறார். எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், எல்லாவற்றையும் செய்கிறவராய் இருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள். தேவனால் முன்குறிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும்... இயேசு எப்பொழுது... வேதம் கூறுகிறது. இயேசு கி.பி.30ல் அடிக்கப்பட்டார் என்பதை நாம் அறிவோம். அது சரியா? கி.பி.30ம் ஆண்டின் மத்தியிலே என்று நினைக்கிறேன். 88இப்பொழுது ஆனால் அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னால் அடிக்கப்பட்டார் என்று வேதம் கூறுகிறது, உங்களுடைய பெயர்கள்... ஆட்டுக்குட்டியின் புஸ்தகத்தின் போது... இந்த புஸ்தகத்தை மீட்டுக் கொள்ள ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோது... இங்கே ஒரு மகத்தான காரியம் இருக்கிறது. அது உற்சாகத்தை எழுப்பக்கூடும். கவனியுங்கள்! ஆட்டுக்குட்டியானவர். ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகம் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே எழுதப்பட்டது என்று வேதம் கூறகிறது என்பதை நினைவு கொள்ளுங்கள். அந்த புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிருக்கும் ஒவ்வொருவரும், மீட்கப் படுவதற்காக உலகத் தோற்றத்திற்கு முன்பாக ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோது, உங்களுடைய பெயரும் அதில் எழுதப்பட்டது. பாருங்கள், நீங்கள் அதை இப்பொழுது புரிந்துக்கொண்டீர்களா? பாருங்கள், ஒழுங்கில்லாமல் எதுவுமில்லை. கடிகாரம் சுற்றிக் கொண்டிருப்பதுபோல்- தேவனுடைய பெரிய கடிகாரம் வேலை செய்வதுபோல இது இயங்கிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்? உலகத் தோற்றத்திற்கு முன்பாக உங்களுடைய பெயர் அங்கு எழுதப்பட்டது - அந்த புஸ்தகத்தில் உள்ளவர்களை மீட்பதற்காக ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட் டபோது, இப்பொழுது, அவர் தாம் மீட்டவர்களை பெற்றுக் கொள்வதற்காக அவர் முன்வந்து, புஸ்தகத்தை எடுக்கிறார். இப்பொழுது நான் இன்னும் தொடர்ந்து போக விரும்பவில்லை; இன்றைக்கு இன்னொரு கேள்விக்கு விடையளிக்க முடியாமல் போய்விடும். எல்லாம் சரி. . 89நரகமும், அக்கினியும் கந்தகமும் எரியும் கடலும் ஒன்றா? இல்லை. வேதாகமத்தில் நரகத்திற்கு என்ன மொழிப் பெயர்த்திருக்கிறார்களோ, நான் அதை விசுவாசிக்கிறேன். இப்பொழுது இங்கே பண்டிதர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை கனப்படுத்த விரும்புகிறேன். சகோதரன் ஐவர்சன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார், சகோதரன் வேயில் மற்றும் உண்மையான வேத பண்டிதர்களாகிய சகோதரர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நரகம் தான் ''பாதாளம்'' என்று மொழிப்பெயர்க் கப்பட்டிருக்கிறது. அது சரியா? இதுதான் பாதாளத்திற்குரிய கிரேக்க பதமாகும். ஆனால் அக்கினிக்கடல் என்பது வேறொன்றாகும். ஏனென்றால் வெளிப்படுத்தின விசேஷத்தில் நரகமும் மற்றெல்லாமும் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டன என்று பார்க்கிறோம். பாருங்கள்? எல்லாம் சரி, இப்பொழுது கவனிப்போம். 90இல்லையென்றால் அக்கினிக்கடலாகிய நரகம் நித்தியமானதா? இல்லை, ஐயா. இல்லை, ஐயா. சிஷ்டிக்கப்பட்டதொன்றும் நித்தியமானதல்ல, இல்லை, சிருஷ்டிக்கப்பட்டதெல்லாம்... ஆகவேதான் நித்திய நரகம் என்பது ஒன்று இருக்க முடியாது. நீங்கள் ஒரு நித்திய நரகத்தில் வேகப் போகிறீர்கள் என்று யாராகிலும் சொன்னால், எனக்கு அதற்குரிய வேதவாக்கியத்தைக் காட்டுங்கள். பாருங்கள்? அவ்விதமான காரியம் ஒன்றுமில்லை. நரகமானது, பிசாசுக்கும் அவனது தூதர்களுக்கும், அந்திக் கிறிஸ்துவுக்கும், அவனது மக்களுக்கும் சிருஷ்டிக்கப்பட்டது. அதுதான் மாம்ச சரீரத்தில் தோன்றும் பிசாசு. அழிக்கப்படுவதற்கென்றே அது சிருஷ்டிக்கப்பட்டது. முழு உலகத்திலும், எல்லா இடங்களிலும் ஒன்றே ஒன்றுதான் நித்தியமானதாக இருக்கிறது. அதுதான் தேவன். ஒரு அணுவோ, அல்லது எலக்ட்ரானோ, அல்லது காஸ்மிக் ஒளியோ (cosmic light), அல்லது மற்றெதுவோ உண்டாவதற்கு முன்னமே அவர் தேவனாக இருந்தார். அவர் சிருஷ்டி கர்த்தர். 91நீ நித்தியமாயிருப்பதற்கு ஒரே ஒரு வழி, நீ நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளுதலாகும். அதற்குத்தான் 'சோ' (Zoe) என்னும் கிரேக்க வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். 'சோ' -அது சரியில்லையா? சோ. சோ. கலியாண வாக்குப்படி உன்னுடைய தகப்பனார் உன்னுடைய தாயின் மூலம் தன்னுடைய ஜீவனை உனக்குள் அளித்திருப்பதுபோல தேவன் அந்த ஜீவனை உனக்களிக்கிறார். அவன் அவ்விதம் தன் ஜீவனை ஒரு குமாரனுக்காக அளிக்கும் போது மகிழ்ச்சியுறுகிறான் (joy of imparting)... (என்னைப் புரிந்துக் கொண்டீர்களா?). அவ்விதமாகவே தேவன் தம்முடைய ஜீவனை ஒரு குமாரனுக்கு அளிக்கும் போது மகிழ்ச்சியுறுகிறார். பாருங்கள்? அப்பொழுது நீ 'சோ' என்னும் தேவனுடைய சொந்த ஜீவனைப் பெற்று, அவருக்குள் ஒரு பாகமாக மாறிவிடுகிறாய். “நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்.'' “கடைசி நாட்களில் அவர்களை எழுப்புவேன்.'' இந்த ஒரே விதமாகத்தான் நீங்கள் நித்திய ஜீவனை பெற்றிருக்கிறீர்கள்; அந்த நித்திய ஜீவன் வெளிப்படுவதற்கு, தான் எந்த சரீரத்திற்குள் வரவேண்டும் என்பதை அறிந்திருக்கிறது. அது வெறுமையாக அங்கு கிடக்க முடியாது. தேவனுடைய ஆவி, கிறிஸ்துவின் ஆவி, அந்த மகத்தான நாளிலே அந்தச் சரீரத்தின் மேல் அசைவாடினபோது, அது (சரீரம்தமிழாக்கியோன்) மறுபடியும் எழுந்திருக்கும் என்று அறிந்திருந்ததைப் போல, பரிசுத்தவான்களும் தங்கள் சரீரம் மறுபடியும் எழுந்திருக்கும் என்று அறிந்துள்ளார்கள். 92இயேசு மரித்தபோது, அவர் நரகத்திற்கு செல்லவேண்டியதாக இருந்ததால், அவர் அங்கு சென்றார் என்பதை இப்பொழுது நினைவு கூருங்கள். அவர்தான் பாவத்தின் தடையரண் (sin-barrier). “'நோவாவின் காலத்தில் மனந்திரும்பாமலிருந்த ஆத்துமாக்களுக்கு பிரசங்கிப்பதற்காக அவர் நரகத்திற்குச் சென்றார்” அது சரிதானா? அவர் நரகத்திற்குச் சென்று, தேவனிடத்திலிருந்து தங்களை பிரித்துக் கொண்டிருந்த ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்தார். மரணம் என்பது பிரிவினையாகும். அவர்கள் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்தார்கள் - மீண்டும் திரும்ப போகமுடியாது. ஸ்திரீயின் வித்து என்று கூறப்பட்டவர் அவர் தான் என்று சாட்சி பகர இயேசு அங்குச் சென்றார். சர்ப்பத்தின் வித்து... சர்ப்பத்தின் வித்து என்ன செய்தது என்பதைக் கவனித்தீர்களா? சிவப்புக் குதிரை. அந்திக்கிறிஸ்து - பிரிவினையாகிய மரணத்தோடு முடிவடைகிறான். ஸ்திரீயின் வித்து-ஜீவனானது வெண்மையான குதிரையுடன் முடிவடைகிறது-இயேசு கிறிஸ்து. அது என்னவென்பதைப் புரிந்து கொண்டீர்களா? - ஒருவருக்கு விரோதமாக மற்றொருவர்-ஸ்திரீயின் வித்துக்கு விரோதமாக சர்ப்பத்தின் வித்து. இப்பொழுது அறிந்துக் கொண்டீர்களா? ஓ, இதைக் குறித்து இன்னும் சற்று சிந்தித்தால் அது நன்றாக இருக்குமல்லவா? ஆனால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம். 93சகோதரன் பிரான்ஹாமே, முதலாம் முத்திரையில், முதலாம் குதிரையின் மீது ஏறியிருந்தவன் 2 தெசலோனிக்கேயரில் (2ம் அதிகாரம்) உரைக்கப்பட்டுள்ளபடி, பாவ மனுஷனின் வெளிப்பாட்டின் நிறைவேறுதலா? ஆம், அது சரி. அதன் நிறைவேறுதல்தான். அது சுலபமானது. அது பாவமனுஷன் தான். இதே மனிதன் தான் மரணம் என்னும் மங்கின நிறமுடைய குதிரையின் மீது ஏறுகிறவரைக்கும் பல கட்டங்களில் குதிரையின் மீது ஏறியிருக்கிறவனாய் காணப்படுகிறான். கிறிஸ்துவோ நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக் கப்படுதல் என்பவைகளோடு வெள்ளைக் குதிரைக்கு வருகிறார். அவர்தான் அந்த ஜீவன். பாருங்கள். 94கிறிஸ்துவின் மணவாட்டியில் இல்லாமல் பலவித ஸ்தாபனங்களிலிருக்கும் மறுபடியும் பிறந்த விசுவாசிகளுக்கு என்ன நேரிடும்? அவர்களுக்கு என்ன நேரிடும்? நல்லது, சற்று நேரத்திற்கு முன்பாக அதை விவரித்தோம் என்று நினைக்கிறேன். பாருங்கள்? அவர்கள் உபத்திரவத்திற்குள் பிரவேசிக்கிறார்கள். அவர்கள் உபத்திரவ காலத்தில் இரத்த சாட்சிகளாக மரிக்கிறார்கள். அவர்கள் கடைசியில், ஆயிரம் வருஷ அரசாட்சிக்குப் பின், தங்களுடைய நியாயத்தீர்ப்புக்காக வருகிறார்கள். பாருங்கள்? ஏனெனில் வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. உயிருடன் இருப்பவர்களில் மீதியாக இருப்பவர்கள்... ''மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடிவடையும் வரைக்கும் உயிரடையவில்லை. அதற்குப் பிறகு நீதிமான்களும், அநீதியுள்ளவர்களும் வந்து கிறிஸ்துவினாலும், மணவாட்டியினாலும் நியாயம் விசாரிக்கப்படுவார்கள். அவர் பத்தாயிரம் மடங்கு பத்தாயிரமான தமது பரிசுத்தவான்களோடு பூமிக்கு வந்தார். அது சரிதானா?-அவருடைய மணவாட்டி. நியாயசங்கம் உட்கார்ந்தது. புஸ்தகங்கள் திறக்கப்பட்டன... புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவபுஸ்தமாகிய மற்றொரு புஸ்தகம் திறக்கப்பட்டது. அவர் அங்கு செம்மறியாடுகளையும், வெள்ளாடு களையும் பிரித்தெடுக்கிறார். அது சரிதானா? அதற்கும் மணவாட்டிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவள் அங்கு நியாயத் தீர்ப்பில் நின்று கொண்டிருக்கிறாள், அவளுடைய ராணி... ராணியும் ராஜாவுமாக ஒன்றாக இருக்கிறார்கள். ''அவர் தம்முடைய பரிசுத்தவான்களோடு வந்தார்; பத்தாயிரம் மடங்கு பத்தாயிரமானவர்கள் அவருக்கு ஊழியம் செய்தார்கள்.'' அவருடைய மனைவி. பிறகு நியாய சங்கம் உட்கார்ந்தது. அதற்குப் பிறகு செம்மறியாடுகள், வெள்ளாடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன. அன்றிரவு நான் கொண்டு வந்த அந்த சிறு தியானத்தை நினைவு கூருங்கள், அப்போது உங்களுக்கு விளங்கும். மாட்டிடையனைப் பற்றிய தியானம். பாருங்கள்? அதோ, நீங்கள் புரிந்து கொண்டீர்கள். 95சபை, ஸ்தாபனத்திலிருக்கும் மக்கள், சுத்தமான கிறிஸ்தவர்கள், செய்தியைப் பெற்றுக் கொண்டவர்கள். அவர்கள் ஒருபோதும் அதைப் பார்க்க மாட்டார்கள். அது ஒருபோதும் அவர்களுக்குப் போதிக்கப்பட மாட்டாது. பலதிறத்தாரும் கலந்திருக்கும் கூட்டத்திலிருப்பவர்கள், இச்செய்தி பிரசங்கிக்கப் படுபவர்கள் அவர்கள் பேரானது ஆட்டுக்குட் டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந் தாலொழிய, மற்றபடி இச்செய்தியானது அவர்கள் தலையின் மேலாகக் கடந்து செல்லும். ஆம். ஆனால் அவர்கள் அருமையான மக்கள். அவர்கள் மறுபடியும் எழுப்பப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்குப் பிரசங்கித்த அதே கூட்டத்தாரால் அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள். ''பரிசுத்தவான்கள் பூமியை நியாயந்தீர்ப்பார்களென்று அறியாதிருக்கிறீர்களா?'' அவர்களுக்குப் பிரசங்கிக்கப்படும், பாருங்கள்? அதிலிருந்து (கலப்படமான கூட்டத்திலிருந்து, ஸ்தாபனங் களிலிருந்து - தமிழாக்கியோன்) “வெளியே வரும்படியாக செய்தியைக் குறித்து சாட்சி பகர்ந்த அதே மக்களால் பிரசங்கிக்கப்படுவார்கள். அது விளக்கப்பட்டுவிட்டதென்று நான் நினைக்கிறேன். என்னிடம் இங்கே அநேக கேள்விகளிருக்கின்றன. 96சகோதரன் பிரான்ஹாமே, எலியாவின் ஆவியைப்பெற்ற ஏழாம் தூதனும், எடுக்கப்படுதலுக்குப் பிறகு உள்ள மூன்றரை வருடங்களில் 1,44,000 யூதர்களிடத்திற்கு அனுப்பப்படும் எலியாவும் ஒரே மனிதன்தானா? எங்களில் சிலர் இதைக் குறித்து குழப்பத்தில் இருக்கிறோம். இல்லை, இவர் அவர் அல்ல; பாருங்கள்? இருவரும் வெவ்வேறான மனிதர்கள். எலியாவைப் போன்ற தோற்றத்தில் வரும் எலிசா எலியாவல்ல. யோவான்ஸ்நானன் என்று அழைக்கப்பட்ட மனிதன் மீது வந்த எலியாவின் ஆவி எலியாவல்ல. லவோதிக்கேயா சபையின் கடைசிக் காலத்தில் தோன்றும் செய்தியாளனாகிய ஏழாம் தூதனாகிய மனிதன் உண்மையான எலியா அல்ல. அவர் தன்னுடைய ஜனங்களாகிய புறஜாதியாரிடத்தில் அனுப்பப்படும் ஒரு புறஜாதி மனிதனாயிருப்பார். எலியா.... எலியாவின் ஆவி மக்களுக்குள் அங்கு வரும்பொழுது அவன் ஒரு யூதனாயிருப்பான். ஏனெனில் அவர்கள் (தீர்க்கதரிசிகள்தமிழாக்கியோன்) தங்கள் சொந்த ஜனத்தினிடத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். அதுதான் எனக்குக் கிடைத்த வெளிப்பாடு. ஏனென்றால் நானும்... டாமி ஆஸ்பர்ன் அவர்களும்; நாங்கள் அதைப்பற்றி அப்போது பேசியபொழுது (டாமியும் நானும்) நான் அதை ஒரு போதும் அறியவில்லை. நான் வியாதியஸ்தருக்காக மட்டும் ஜெபித்துக் கொண்டு இருந்தேன். 97நான் அங்கு வந்தபொழுது, ஃபோர்ட் வெயின் சுவிசேஷ கூடாரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, அயல் நிலங்களில் பணிபுரியும் ஒரு சுவிசேஷகி வந்திருந்தார்கள். அவர்களுடைய மார்பகங்கள் இவ்வளவு பெரிதாக இருந்தன.- புற்றுநோயால் அரிக்கப்பட்டு விட்டிருந்தது; அவர்கள் அந்தத் தெருவிலுள்ள நாங்கள் வசித்த வீட்டில் இருந்தார்கள். நான் அந்த அருமையான சகோதரிக்காக ஜெபித்தேன். அவர்கள் சுகமாக்கப்பட்டு ஊழியத்திற்குத் திரும்பினார்கள். அவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தபோது-அங்கு பணிபுரியும் கிறிஸ்தவ சுவிசேஷ குழுக்களைப் பற்றிய ஒரு புத்தகத்தை விட்டுச் சென்றிருந்தார்கள். நானும், ''நல்லது, சுவிசேஷகர்கள் அருமையானவர்கள்'' என்று எண்ணினேன். நான் சுவிசேஷகர்களைக் குறித்து ஒரு போதும் அதிகமாய் சிந்தித்ததில்லை. 'நல்லது, அந்த வெளியிடங்களிலே அது தேவனுடைய ஒரு காரியாலமாகும். அதுபோல இங்கு பென் தெருவில் எட்டாம் நம்பர் இடம் (Eighth and Penn Street) என்னுடைய ஸ்தானமாயிருக்கிறது என்று எண்ணினவனாய் என்னால் முடிந்தவரை சிறப்பாக ஊழியம் செய்து வந்தேன். 98ஆனால் ஒருநாள் என்னுடைய படிக்கும் அறையில் நான் உட்கார்ந்துகொண்டு நான் அந்தப் புத்தகத்தை எடுத்தேன். அதில் நீக்ரோ வகுப்பினரின் படம் ஒன்று இருந்தது. ஒரு வயது முதிர்ந்த தந்தை தலையில் நரைத்த முடியுடன் அதில் காட்சியளித்தார். அந்த படத்தின் கீழ் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது! “வெள்ளை மனிதனே, வெள்ளை மனிதனே, உன்னுடைய தந்தை எங்கேயிருந்தார்? பாருங்கள்? நான் இப்போது வயோதிபனும் சிந்தை மழுங்கினவனுமாயிருக்கிறேன். என்னால் இப்போது சரிவர புரிந்துக் கொள்ள முடியவில்லை. நான் வாலிபனாயிருந்தபோது இயேசுவை அறிந்திருப்பேனானால் நான் அவரை என் ஜனங்களிடத்திற்கு கொண்டு சென்றிருப்பேன்.”' ஆக, நான் அதைப் படித்தேன். “திரும்பவும் அதைப்படி, திரும்பவும் அதைப்படி” என்று ஏதோ ஒன்று சொல்லிக் கொண்டேயிருந்தது. நான் படித்துக் கொண்டிருந்தேன்..... ஓ, பாருங்கள்! உங்களுக்கும் அந்த அனுபவம் வந்திருக்கும்- ''படித்ததையே திரும்பவும் திரும்பவும் படிப்பது. அதில் ஏதோ ஒன்றிருக்கிறது.'' நான் அன்று க்ரீன் மில் என்னும் உயரமான இடத்தில், அந்தக் குகையை விட்டு வெளியே வந்தபோது, மக்கள் எப்படி அன்னிய பாஷை பேசியும், உண்மையான பரிசுத்த ஆவியைப் பெற்றும் ஆர்ப்பரித்தும் கூட அந்திக் கிறிஸ்துவாகயிருக்க முடியும் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை-உண்மையான பரிசுத்த ஆவியைக் கொண்டு அன்னிய பாஷைகள் பேசி, பல பாஷைகளைப் பேசினாலும் கூட இன்னும் சாத்தானாகயிருக்கிறார்கள். ஆம், அது சரிதான்! நான் அதை உங்களுக்கு நிரூபித்துக் காட்ட முடியும். ஆம், நிச்சயமாக! அவர்கள் அதைச் செய்தபோது... கவனித்துப் பாருங்கள். 99ஆகவே அன்னிய பாஷைகள் பேசுவது பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கு அத்தாட்சியல்ல, அது பரிசுத்த ஆவியின் வரங்களில் ஒன்றாகும். பாருங்கள்? அவருடைய வரங்களில் ஒவ்வொன்றையும் பிசாசானவன் போலியாகச் செய்து காண்பிக்கக்கூடும். தெய்வீக சுக மளித்தல் மற்றும் ஒவ்வொரு வரத்தையும். ''அந்நாளில் அநேகர் என்னை நோக்கி,“ கர்த்தாவே, பிசாசுகளைத் துரத்தினேன் அல்லவா; நான் செய்தேனல்லவா...'' அது சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதாகும். ”... உம்முடைய நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோமல்லவா, இந்த எல்லாக் காரியங்களையும் அக்கிரமச் செய்கைக்காரர்களே, நான் உங்களை அறியவும் இல்லை'' என்று கூறுவார். “ஒரே மழையானது நீதிமான்கள் மேலும், அநீதியுள்ளவர்கள் மேலும் விழுவதாக” வேதாகமம் கூறுகிறது. கோதுமை நிலத்தில் வளர்ந்திருக்கும் களையும் அதே மழையைப் பெறுவதனால், அந்த ஒரே மழையினால் சந்தோஷத்தைப் பெற்று கூச்சலிடக் கூடும்; “ஆனால் அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்!'' அச்சிறு களையானது, கோதுமை பெருமளவிற்கு அதே மழையைப் பெற்று, நின்று குதூகலித்து, கூச்சலிடக்கூடும். 100அங்கேதான் புரிந்து கொள்கிறோம். ஆகவே அவர்கள் கூச்ச லிடக்கூடும். அன்னிய பாஷைகளில் பேசக்கூடும். அவர்கள் விரும்பும் ஒவ்வொன்றையும் போலியாகச் செய்து காட்டக்கூடும், ஆனால் அந்த நாளிலே, “அக்கிரமச் செய்கைகாரர்களே'' என்று அழைக்கப்படுவார்கள். நான் சற்று நேரத்திற்கு முன்பு சொன்னதுபோல, நான் சொல் வதற்கு செவி சாயுங்கள்; கூர்ந்து கவனியுங்கள்! உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து வார்த்தையோடு உங்களையே சோதித்துப் பாருங்கள். நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். குட்டையான முடியை உடைய பெண்களே, அதை வளர விடுங்கள். நீங்கள் அரைக்கால் சட்டை அணிந்திருப்பீர்களானால் அவைகளைக் களைந்து விடுங்கள். ஒரு பெண்மணியைப் போல நடவுங்கள். ஆண்களாகிய நீங்கள் இன்னமும் சிகரெட் புகைத்துக் கொண்டும், கேளிக்கைகளில் ஈடுபடுவீர்களானால், அதைக் நிறுத்துங்கள்! நீங்கள் அதைக் குறித்து எவ்வளவு பேசுகிறீர்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. நீங்கள் இன்னமும் அந்த சங்கங்களைக் பிடித்துக்கொண்டு, “இதுதான் அது'' என்றும் அதுதான் இது'' என்றும் கூறிக்கொண்டிருப்பீர்களானால் நீங்கள் நிறுத்திக் கொள்வது நல்லது. திரும்பிப் பார்த்து வார்த்தையோடு பரிசோதித்துப் பாருங்கள். நாம் கடந்து போகிறோம்...... குட்டையான முடி, இந்த காலத்திற்குரிய மற்ற எல்லாக் காரியங்களுக்கும் அப்பாற்பட்டு நாம் ஜீவிக்க வேண்டும். நாம் இப்போது வேறு செய்தோம்.'' நான் (இயேசு) சொல்லுவேன், ''என்னைவிட்டு அகன்று போங்கள், எதற்குள்ளாகவோ வந்து விட்டபடியால் தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்பாக அந்தப் புஸ்தகத்தில் மறைத்து வைத்திருந்த இரகசியங் களையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தச் சிறிய காரியங்களில் கீழ்ப்படிகிறவர்களே, இந்த மற்ற காரியங்களையும் பிடித்துக் கொள்வார்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லையென்றால், கிழக்கும் மேற்குக்கும் இருக்கிற தூரமாக அது உங்கள் தலையின் மேலாகக் கடந்து போகும். அது அப்படியே.... 101கிதியோன் தன் மனிதர்களைப் பிரித்தது போல-ஆயிரமாயிரமானவர் அங்கே இருந்தனர். “அது மிகவும் அதிகம். அவர்களை மறுபடியும் பிரித்தெடு” என்று தேவன் கூறினார்; அவர்களுக்கு மற்றொரு சோதனையைத்தந்து, அவர்களை மறுபடியுமாக பிரித்தெடுத்தார் - அவர்களை மறுபடியுமாக பிரித்தெடுத்து, கடைசியாக அவனிடம் கையளவே உள்ள ஆட்கள் இருக்கும் வரை பிரித்தெடுத்தார். “இந்த வேலையை செய்ய நான் விரும்பும் கூட்டம் அது தான்'' என்றார். உண்மையில் நடந்தது அதுதான். பெந்தெகொஸ்தே ஸ்திரீகள், முன்னும் பின்னுமாக போவது, அங்கே உட்கார்வது, கேட்பது, வார்த்தையின்படி தவறாகும். அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை ஐயா! ஒவ்வொரு வருடம் நான் கடந்து செல்லும்போதும், நான் இதைக்குறித்து போதிக்க ஆரம்பித்தபோது இருந்ததைக் காட்டிலும் அதிகமான பெண்கள் தங்கள் முடிகளை குட்டையாக வெட்டிக் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். “அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்... நீங்கள்...'' என்கிறார்கள். யாரோ ஒருவர் சொன்னார், ''நல்லது, சகோதரன் பிரான்ஹாமே, மக்கள் உங்களை ஒரு தீர்க்கதரிசியாக கருதுகின்றனர்'' என்று. நான் ஒரு தீர்க்கதரிசி என்று நான் கூறுகிறதில்லை. நான் அவ்விதம் கூறுவதை நீங்கள் யாரும் கேட்டிருக்கமாட்டீர்கள். அவ்விதம் நீங்கள் கேட்டிருப்பீர்களானால், அவ்விதம் கருதுவீர்களானால்... ''நீங்கள் ஏன் பரிசுத்த ஆவியை எவ்விதம் பெற்றுக்கொள்வது என்று மக்களுக்கு போதிக்கக் கூடாது? இதை எவ்விதம் பெறுவது, பரிசுத்த ஆவியின் வரங்களை எவ்விதம் பெறுவது போன்ற காரியங்களைப் போதித்து சபைக்கு ஏன் உதவக்கூடாது?'' என்று கூறினார்கள். அவர்கள் தங்கள் ஏ,பி,சி (A B C)களை கற்றுக் கொள்ளக்கூட தங்கள் செவியை சாய்க்காதிருக்கும்போது, நான் எவ்விதம் அவர்களுக்கு அல்ஜீப்ரா (Algebra) கற்றுத்தர முடியும்? அது சரிதான். நீங்கள் இந்தச் சிறிய காரியங்களை சரி செய்யுங்கள். இங்கே கீழே இறங்கி வந்து, சுத்தி செய்து கொண்டு, சரியாக துவங்குங்கள். ஆமென். அது சரி. 102நான் எதைக்குறித்து பேசிக் கொண்டிருந்தேன்? நான் பேசிக் கொண்டிருந்த பொருளைவிட்டு விலகிச் செல்ல நினைக்கவில்லை; என்னை மன்னியுங்கள், பார்த்தீர்களா? நல்லது. “எங்களில் சிலர் குழப்பமடைந் திருக்கிறார்கள். எலியா ஒரே ஆள்தானா..?'' என்ற கேள்விதான். ஆமாம், ஊம், அது உண்மை . இல்லை. புறஜாதிகளுக்கு வரும் இந்த எலியா அந்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட புறஜாதி மனிதனா யிருப்பார். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் குழப்பத்திலிருந்து தம் பிள்ளைகளை வெளியே கொண்டுவர தேவன் அதே ஆவியை உபயோகிக்கிறார். அது அவருடைய நோக்கத்தை நன்றாக நிறைவேற்றுகிறது. ஆகவே அந்த ஆவி மறுபடியும் கீழிறங்கி வந்திருக்கிறது, ஏனென்றால், பாருங்கள்.... அதிக மெருகேற்றப்பெற்ற, கல்வியறிவு பெற்றவர்களை அவர் உபயோகிக்கக் கூடுமானால்-அத்தகைய இனத்தைச் சேர்ந்தவர்தான் அதைப்பிடித்துக்கொள்வர். தன்னுடைய அச்சரங்களை (A B C)க்கூட சரியாக அறிந்திராத, தன்னுடைய வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத்தெரியாத, அப்படிப்பட்ட ஒரு மனிதனை அவர் கொண்டுவருகிறார். வனாந்தரங்களிலிருந்து யாராவது ஒருவரை எங்காவது கொண்டுவந்து எளிய சிந்தை உள்ள மக்களிடம் அனுப்பி அவர்களுக்குப் புரிய வைத்து, அவர்களை எடுத்துக் கொள்கிறார். (சகோதரர் பிரான்ஹாம் தன் விரலை ஒருமுறை சொடுக்குகிறார்-ஆசி) அவ்விதமாக அவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள், பாருங்கள். அது மெருகேற்றப்பட்டதாக வருமானால்... 103பவுல் கூறியதுபோல, “நான் கல்வியின் மெருகோடு உங்களிடம் வரவில்லை; நான் உயிர்த்தெழுதலின் வல்லமையில் உங்களிடம் வருகிறேன்'' என்றார். அவருடைய கல்வியை அவரிடமிருந்து எடுத்துப் போட, அரேபியாவில் தேவன் மூன்றரை வருடம் எடுத்துக் கொண்டார். மோசேயிடமிருந்து அதை எடுத்துப்போட 40 வருடம் எடுத்துக் கொண்டார். பாருங்கள்? ஆகவே அதுதான் விஷயம். கல்வியறிவு இல்லாமையை நான் ஆதரிக்கவில்லை. கல்வியறிவு தேவையில்லை என்பதை உங்களுக்கு கூற முயற்சிக்கிறேன். இந்த உலகத்தின் ஞானம் மாறுபட்டதாயிருக்கிறது. சுவிசேஷம் பரவுவதற்கு கல்வியானது மிகப்பெரிய தடையாக இருந்திருக்கிறது. கல்வி அறிவு இல்லாமலிருந்தால், இந்தப் பெரிய வேத பாடசாலைகள் முதலியவைகள் இல்லாமலிருப்போம். மக்கள் எளிய மனதுள்ளவர்களாக தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுப்பார்கள்; ஆனால் அவர்களோ அவ்வளவாக மெருகேற்றப்பட்டவர்களாக குழப்பப்பட்டு, அங்குள்ள எல்லாவித ஸ்தாபனங்களோடும் இறுக இணைக்கப்பட்டவர்களாய் அங்கேயே தங்கிவிடப் போகிறார்கள். அவ்வளவுதான், அவர்கள் அந்த ஆவியை பெற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் எப்போதாவது ஒரு நல்ல ஸ்திரீயை மிகவும் கீழ்த்தரமான மனிதனுக்கு மணம் முடித்திருக்கிறீர்களா? ஒன்று அந்த கீழ்த்தரமான மனிதன் அந்த ஸ்திரீயைப்போல நல்லவனாவான். அல்லது, அந்த ஸ்திரீ அவனைப்போல் கீழ்த்தரமானவளாவாள். பாருங்கள்? அது சரிதான். “அவர்களை விட்டு வெளியே வாருங்கள். நான் எடுத்துக் கொள்ளப்படுதலை நிகழ்த்த ஆயத்தமாகிறேன்'' என்று அவர் சொன்னதற்கு அதுதான் காரணம். உங்களை இங்கிருந்து கொண்டு போய் விடத்தக்கதான ஒரு வகையான விசுவாசம் உங்களுக்கிருக்க வேண்டும். 104தானியேல் 9:27ல் உள்ள உடன்படிக்கை எப்போது ஒரு வாரத்திற்கு உறுதிப்படுத்தப்பட்டது? இயேசுகிறிஸ்து பூமியின் மீது யூதர்களுக்கு பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, உடன்படிக்கையில் பாதி வாரம் உறுதிப்படுத்தப்பட்டது. அவர் புறஜாதி மக்களிடம் செல்லவே இல்லை. அவர் தம்முடைய சீஷர்களுக்கு, “புறஜாதியாரிடத்திற்கு செல்ல வேண்டாம்” என்று கூறினார்; அது யூதர்களுக்கு மாத்திரமே. பாருங்கள்? அவர் மூன்றரை ஆண்டுகள் பிரசங்கித்தார். அதாவது எழுபது வாரங்களில் பாதி; அவர் செய்வார் என்று தானியேல் கூறினதுபோல். அவர் யூதர்களுக்கு உறுதியாக உறுதிப்படுத்தப்பட்டார் என்பதை நினைவு கூருங்கள். இந்த புறஜாதியாரின் காலத்தை இங்கு நுழைக்க அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டிருந்தது. அந்த முழு திட்டத்தையும் உங்களால் காணமுடிய வில்லையா? கவனியுங்கள். அவர் தம்மை ஒரு தீர்க்கதரிசியாக நிரூபித்தார், தீர்க்கதரிசி என்ன செய்வாரோ அதை அவர் செய்தார், தீர்க்கதரிசிகளின் அடையாளங்களைக் காண்பித்தார். ''ஒருவன் தன்னை ஒரு ஞானதிருஷ்டிக்காரன் என்றோ அல்லது ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லிக்கொள்வான் என்றால், அவன் சொல்லுவதைக் கவனித்துப் பாருங்கள், அவன் கூறியவைகள் நிறைவேறும் போது, அவன் கூறியது தொடர்ந்து நடந்து கொண்டே வரும் என்றால்....', என்று உங்கள் சொந்த வேத வாக்கியமே கூறுகின்றது. 105“தட்டுங்கள். அப்பொழுது திறக்கப்படும், தேடுங்கள்... கண்டடைவீர்கள், கேளுங்கள். கொடுக்கப் படும்.'' என்று வேதம் கூறுவதை நீங்கள் காண்பீர்களானால்... ”தட்டுங்கள்“ என்று சொல்லும்போது, தொடர்ச்சியாக தட்டுங்கள் என்பதைக் கவனியுங்கள். (இதை உதாரணமாக காட்டுவதற்கு, சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மீது இருபத்து மூன்றுமுறை தட்டுகிறார் -ஆசி). அங்கே உறுதியாய் இருங்கள். அந்த அநீதியுள்ள நியாயாதிபதி அந்த ஸ்திரீக்கு பதிலளிக்காமல் இருந்ததுபோல, அவள் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்தாள். ”நான் உன் பக்கமாக இருக்கிறேன்'' என்று கூறிக்கொண்டு அவன் கதவை தட்டிக்கொண்டே இருந்தாலும் (சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுவதை நிறுத்துகிறார் -ஆசி) ஒரு நீதிபதி பதிலுரைக்க மாட்டான். ''கர்த்தாவே, நான் இதை பெறவிரும்புகிறேன். ஆமென்.'' என்று அவரை தேடி கூறுவீர்களென்றால், அது மாத்திரம் போதாது, நீங்கள் அதை பெறும் வரைக்கும் அங்கேயே உறுதியாய் தரித்து நில்லுங்கள். அது வரும் என்று நீங்கள் அறிவீர்கள். அவர் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அதை பற்றிக்கொண்டு அங்கேயே உறுதியாக நில்லுங்கள். பாருங்கள்? இப்பொழுது, இப்பொழுது, சபையானது எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகுள்ள உபத்திரவ காலம்தான் எழுபதாவது வாரத்தின் கடைசிப் பாகமாகும். இங்கே மூன்றரை ஆண்டுகள் மறுபடியும் தீர்க்கதரிசிகளால் உறுதிப்படுத்தப்பட கொடுக்கப்படும் புரிந்துக்கொண்டீர்களா? மோசேயும், எலியாவும் வெளிப்படுத்தல் 11. இப்பொழுது, இது என்ன என்பதை நாம் பார்க்கட்டும். 106நீங்கள் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் ஒருவராயிருப் பீர்களானால், மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படும்போது அதில் போவீர்களா? ஆம், ஆம், ஐயா, அது சுலபமானதாயிருக்கிறது 107சகோதரன் பிரான்ஹாமே, பாகாலுக்கு தங்கள் முழங்கால்களை முடக்காதவர்கள் ஏழாயிரம் என்று சொல்ல நினைத்தீர்களா, அல்லது எழுநூறா? ஏழாயிரம் என்று சொல்ல நினைத்தேன். அதற்காக என்னை மன்னியுங்கள், பாருங்கள். அது ஒரு பேசும் தோரணையாயிருந்தது. நான் சற்று நேரத்திற்கு முன்பு சொன்னதுபோல... நான் இங்கு நின்றதைக் கவனித்தீர்களா? “ஆட்டுக்குட் டியானவரைக் கண்டதற்கு அவர்கள் சாட்சி கொடுக்கிறார்கள்...' என்று கூறினேன். பார்த்தீர்களா? பாருங்கள்? ஆட்டுக்குட்டியானவர் பூமியில் இருந்தார்-பாருங்கள்? ”தேவனுடைய ஆவியானவர் ஆட்டுக்குட் டியானவர் மீது வந்ததைக் கண்டதற்கு சாட்சி கொடுக்கிறார்கள்.'' 108இப்போது, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்'' என்று கூறப்பட்டிருக் கிறது. நீங்கள் பார்த்தீர்களா? அது சரியான கிரேக்க பாஷையின் முறைப்படி எழுதப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் கவனிப் பீர்களானால், அது இவ்விதமாக இருக்கும்... இப்போது வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள்..... பரிசுத்த யாக்கோபின் மொழி பெயர்ப்பில் ''நான்-நான்-நான்-வாசம் பண்ணபிரியமாயிருக்கும் என்னுடைய நேசகுமாரன் இவர்” என்பதாக வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில், நாம் இன்று சொல்வதுபோல சொல்வோமென்றால்; ''நான் உள்ளே வாசம் பண்ண பிரியமாயிருக்கும் என்னுடைய நேசக்குமாரன் இவர்“ என்று கூறுவோம் - அதைத் திருப்பி விடுவோம், பாருங்கள். ''நான் வாசம் பண்ண பிரியமாயிருக்கும் என்னுடைய நேசகுமாரன் இவர்” பாருங்கள்? இப்போது, இன்றைக்கு நாம்: “நான் உள்ளே வாசம்பண்ண பிரியமாயிருக்கும் என்னுடைய நேசகுமாரன் இவர்” என்று கூறுவோம்-அதே வார்த்தை வித்தியாசமாய் பொருத்தப்பட்டிருக்கிறது. பாருங்கள்? 109இப்போது, ஆம், நான் கருதியது... தயவாக என்னை மன்னியுங்கள். சகோதரர்களே, தூர இடங்களில் இந்த ஒலி நாடாவைக் கேட்கிறவர்களே, நண்பர்களே, கேளுங்கள்: நான் அதை அவ்விதம் சொல்ல நினைக்கவில்லை. நான் சுவிசேஷத்தின் ஒரு ஊழியக்காரன்; அதை எத்தனை முறை பிரசங்கித்திருக்கிறேனோ, அத்தனை முறையும் அது ஏழாயிரம் என்பதை அறிந்திருந்தேன். நான் எழுநூறு என்று சொல்ல நேர்ந்தது. எழுநூறு என்று நான் நினைக்கவில்லை, நான் கருதினது... நான் அதை வேதத்திலிருந்து படிக்கவில்லை. நான் பேசிக்கொண்டிருக்கும்போது என் மனதில் அவ்வண்ணம் வந்தது. ஏழாயிரம் என்பதற்குப் பதிலாக எழு நூறு என்று கூறிவிட்டேன். அத்தகைய தவறுகளை நான் எப்போதும் செய்கிறேன். நான் நிச்சயமாக ஏதும் அறியாதவன், ஆகவே நீங்கள் என்னை மன்னித்துவிடுங்கள். பாருங்கள்? அப்படிச் செய்ய நான் நினைக்கவில்லை. 110கிறிஸ்துவின் மணவாட்டியும், கிறிஸ்துவின் சரீரமும் ஒன்று தானா? ஆமாம், ஐயா! பாருங்கள்? இப்பொழுது இங்கே கவனியுங்கள், நான் இதை ஆரம்பிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அதன் மீது நான் ஒரு பிரசங்கமே செய்யக்கூடும். ஆனால் அதைச் செய்யமாட்டேன், ஆனால் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். தேவன், ஆதாமுக்கு அவனுடைய மணவாட்டியை அவனுடைய விலாவிலிருந்து கொடுத்த போது, அவன், “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்'' என்றான். அது சரிதானே? தேவன், கிறிஸ்துவுக்கு அவருடைய மணவாட்டியை கொடுத்த போது, ஆவியானவர் மணவாட்டியாகிய மாம்சத்தை தந்தார். அவருடைய இருதயத்திற்கு கீழாக அவர் குத்தப்பட்டார், தண்ணீரும், இரத்தமும், ஆவியும் புறப்பட்டு வந்தன; அதுதான் “அவருடைய மாம்சத்தில் மாம்சமும், அவருடைய எலும்பில் எலும்புமாக'' உருவாக்கப்பட்டது. மணவாட்டிதாமே, கிறிஸ்துவின் எலும்பும் மாம்சமாகவும் இருக்கிறோம் நிச்சயமாக. அவர்கள் அவ்விதமாகத்தான் இருக்கிறார்கள். அதுதான் அவரது மணவாட்டி. 111எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு கிறிஸ்துவின் மணவாட்டிக்கு ஊழியம் இருக்குமா? நிச்சயமாக, இப்பொழுது நேரடியாக அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துவின் மணவாட்டி, நிச்சயமாக! அதுதான் ஏற்ற வேளையின் செய்தி-கிறிஸ்துவின் மணவாட்டி. நிச்சயமாக, அவள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், சுவிசேஷகர்கள், மற்றும் மேய்ப்பர்களை உடையவளாய் இருக்கிறாள். அது சரியா? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர் -ஆசி) அதுதான் கிறிஸ்துவின் மணவாட்டி. நிச்சயமாக, அவளுக்கு ஒரு ஊழியம் உண்டு. ஒரு மகத்தான ஊழியம்-இந்த காலத்திற்குரிய ஊழியம், அது மிகவும் எளிமையானதாக இருக்கும். 112இப்பொழுது நினைவுகூருங்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் கூட்டத்தில் நான்... இருந்தீர்கள்? நான் எதைக் குறித்து பிரசங்கித்தேன் என்று நினைவிருக்கிறதா? எளிமை. ஓ! அதை மறந்து விட வேண்டாம். அதைக் குறித்து மறுபடியும் எச்சரிக்க ஒரு நிமிஷம் நிறுத்தப்போகிறேன். ஏதாகிலும் ஒரு மகத்தான காரியம் நடக்கப்போவதாக தேவன் முன்னுரைக்கும்போது, மக்கள் தங்கள் ஞானத்தினால், என்ன நடக்கிறதோ அதை இழந்து போகும்வரை, வெகு தூரத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேவன் ஒரு காரியத்தை மகத்தானது என்று கூறும்போது, உலகம் அதைக் குறித்து நகைத்து, “ஓரு கூட்டம் அறிவில்லாதவர்கள்'' என்றுரைக்கிறது. அது சரி. மகத்தான உலகமும், மிக மகத்தான சபையும், “சிறுவனே, அது மகிமையானது!'' என்று சொல்லும்போது, தேவன் அவர்களைப் பார்த்து, ''ஒரு கூட்டம் அறிவில்லாதவர்கள்'' என்று கூறுகிறார். ஆகவே, நீங்கள் விழிப்பாய் இருக்கவேண்டும்.... அது ஒருவேளை அவ்விதமாகத்தான் இருக்கலாம் என்று நான் நினைக்கவில்லை. சரியாக அதே வழிதான், ஆனால் அந்த வழியில்தான் அது அமைந்திருக்கிறது. கவனியுங்கள்! இங்கே மகத்தான, பரிசுத்த வைதீக சபை ஒன்று இருந்தது, ''நமக்கு வார்த்தை தெரியும்; நமக்கு பள்ளிகள் உண்டு; நமக்கு வேதப்பள்ளிகள் உண்டு. நம்மிடம் மெருகேற்றப்பெற்ற மனிதர்கள் உண்டு. நூற்றுக்கணக்கான வருடங்களாக யேகோவாவுக்கு உத்தமமாய் இருந்து வந்திருக்கிறோம். நாம் தான் 'சபை'; நாம் தான் ஆலோசனை சங்கம், பரிசேயர்களும், சதுசேயர்களும் மற்றும் எல்லா ஸ்தாபனங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் சபைகளின் ஐக்கியம் நமக்குண்டு. நாம் பெற்றுக்கொண்டிருப்பதுபோல. சபையின் ஆலோசனை சங்கமாக நாமெல்லாரும் ஒன்றாக இருக்கிறோம். இங்கே நாம்தான் பெரிய மனிதர்கள். நாம் அந்த வேதவாக்கியங்களை அறிந்துள்ளோம். நதிக்கரையிலே ஆட்டுத்தோல் உடையணிந்து தாடியுடன் நின்றுக் கொண்டிருக்கும் அந்த எளிமையில் உள்ள அறிவில்லாதவனைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்'' என்று கூறினதைக் கவனியுங்கள். நிச்சயமாக அவர்கள் அதற்கு செவிசாய்க்கமாட்டார்கள். 113ஆனால், வேதாகமம் மல்கியா 4ல்... அல்லது 3-ம் அதிகாரத்தில், “இதோ, நான் என் செய்தியாளனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்'' என்று கூறுகிறது. இதற்கு ஏழுநூற்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யோவான்... ஓ, அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய ஏசாயா அங்கு நின்றுக்கொண்டு, ”கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தர வெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைப் பண்ணுங்கள் என்றும். வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று“ என்று கூறினான். அது சரி, ”ஓ, எல்லா உயர்ந்த இடங்களெல்லாம் தாழ்த்தப்படும். இதைக்குறித்து அநேக மக்கள் பேசினார்கள். ஓ, ''இந்த மனிதன் வரும்போது தன்னுடைய விரலை சுட்டிக்காட்டி கட்டளையிடும்போது, மலைகள் அகன்று போய்விடும், ஓ, பள்ளமான இடங்களெல்லாம் உயர்த்தப்படும். கரடுமுரடான இடங்களெல்லாம் சமமாக்கப்படும். சகோதரனே, இங்கிருக்கும் வயல்களிலெங்கும் தானியத்தை பயிர் செய்யலாம். ஓ, இந்த மனிதன் வரும்போது நாம் மகத்தான காரியங்களை செய்யப்போகிறோம்'' என்று அநேகர் கூறினார்கள். பாருங்கள்? 114தேவன் ஒரு இயந்திரக்கைப்பிடியை சுழற்றி, ஒரு தாழ்வாரத்தை கீழே இறக்கி அதிலிருக்கும் மனைதனைப் பார்த்து, “என்னுடைய மேசியாவின் மகத்தான முன் தூதனே, வெளியே வாரும்'' என்று கூப்பிடுவா ரென்றும், அதற்குப் பிறகு அவன் போனபிறகு அவர்கள் அதை மறுபடியும் இழுத்து, அவனுடைய ஊழியம் முடிந்தபிறகு மறுபடியும் இயந்திர கைப்பிடியை சுழற்றி அதை கீழே இறக்கி வேதப்பள்ளியின் பக்கத்தில் வைத்துவிட்டு, ”நல்லது, என்னுடைய நேசக்குமாரனே, வெளியே வந்து அவர்களுக்கு அறிவியும்'' என்று கூறுவார் என்றும் அவர்கள் எதிர்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாருங்கள்? ஓ, என்னே! அவன் வந்தபோது என்னென்ன நடந்தது என்பதைக் கவனித்தீர்களா? “அவர்கள், பள்ளிக்கூடங்களில் படிக்காத ஒருவன் இங்கிருக்கிறான்-அவனிடத்தில் ஐக்கியத்தின் அட்டைகூட இல்லை-ஓ, அவனிடத்தில் எந்தவிதமான அத்தாட்சிக் கடிதமும் இல்லை. இல்லை. அவனுடைய வாழ்க்கையிலேயே ஒரு நாளாகிலும் பள்ளிக்கூடத்திற்கு சென்றதாக கூறுவதற்கும் ஒருவருமில்லை. அவனுடைய பேச்சைப் பார்த்தால் கூட அவன் பள்ளிக் கூடத்திற்கு போகாதது போலிருக்கிறது. மத சம்பந்தமான வார்த்தைகளைக்கூட அவன் பேசவில்லை. அவன், விரியன் பாம்பு, கோடாரி, வனாந்தரம், மரம் போன்ற வார்த்தைகளைத்தான் பேசினான். அந்த நாளிலோ, அல்லது இந்த நாளிலோ, அல்லது எந்த நாளிலோ இருந்த மதசங்கத்தின் அமைப்புகளுக்குரிய வார்த்தைகளையே அவன் பேசவில்லை .'' 115அவன் ஒரு அநாகரிக மனிதனாகக் காணப்பட்டான். எங்கோ இருந்த ஒரு புதரிலிருந்து வெளியே வந்தான். அவன் சவரம் செய்துக் கொள்ளாதவனும், தன் தலையின்மீது படியாமல் நின்றுக்கொண்டிருக்கும் மயிரை உடையவனாகவும் வந்தான். இரண்டு மாதத்திற்கொரு முறையோ, அல்லது மூன்று மாதத்திற்கொருமுறையோ மாத்திரம் குளித்தவனாக இருந்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். சரி. இரவில் அவன் ''பைஜாமா'' போடாதவனாய் இருந்தான். அவன் எந்த விதமான காரிலும் செல்லாதவனாகவும் இருந்தான். அவன் தன் பற்களை 'பிரஷ்ஷினால் சுத்தம் செய்யாதவனுமாயிருந்தான்- உண்மையில் இல்லை. ஓ, இவன் எப்படிப்பட்ட மனிதனாயிருந்தான். இதோ அவன் வனாந்தரத்தில் தடியை ஊன்றி நடந்து வந்து, ''கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்றும், அவருக்கு பாதையைச் செவ்வைப்படுத்துங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனின் சத்தமாய் இருக்கிறேன்!'' என்று கூறினான்.... போதகர்களில் சிலர் அங்கு நின்று கொண்டு, “ஊ! உன்னிடத்தில் இருக்கிறதா... இந்த பெருங்கூட்டத்தில் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம், நாங்கள் அதைச் செய்ய முடியாது. நல்லது, உன்னுடைய அடையாளச் சீட்டு எங்கே?'' என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டதை அவன் பொருட்படுத்தவில்லை. அவன் ஒரு செய்தியைக் கொண்டு வந்திருந்தான். அதையே அவன் பிரசங்கித்தான். 116அவர்கள், “ஆ, சற்று பொறுங்கள், நாங்கள் பேராயரை (Bishop) கொண்டு வருகிறோம். அவர் அதைக்குறித்து என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். நாங்கள் அங்கே செல்லுகிறோம். அதுதான் சபையின் தலைமைஸ்தலம். இதைச் சபையின் தலைவர்தான் அங்கீகரிக்க வேண்டும். இவன் தேவனிடத்தில் இருந்து வந்திருப்பானானால் இவன் நம்முடைய பேராயரை அங்கீகரிப்பான்,'' என்று கூறினார்கள். அங்கு ஆசனங்களைப்போட்டு மரியாதைக்குரிய பெரியோர்களை உட்கார வைத்திருப்பார்கள். அவன், ''விரியன் பாம்புக்குட்டிகளே, புல்லின்கீழ் இருக்கும் சர்ப்பங்களே'' என்று கூறினான். தங்களுடைய காலர் பட்டையை உயர்த்தி போட்டுக் கொண்டிருக்கும் பரிசுத்த பிதாக்களையும் மற்றவர்களையும். ''வரும் கோபத்திற்கு தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? உங்களுடைய நேரம் சமீபமாய் இருக்கிறது. நீங்கள் இதை சிந்திக்கவில்லையா?...'' நீங்கள், “அவன் இதை சேர்ந்தவன் அல்லது அதை சேர்ந்தவன்'' என்று கூறலாம். ''நான் உங்களுக்கு சொல்லுகிறேன்: நான் ஆராதிக்கும் தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார்” என்றான். ஓ, என்னே! இப்பொழுது, மதத்தலைவர்களைப்போல அவன் பேசாமல் அதற்கு விரோதமாகப் பேசினான். “கோடாரியானது மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது! ஆகையால் நல்ல கனி கொடாத மரமெதுவோ அது வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படும்! ஓ, நான் உங்களுக்கு தண்ணீரினால் மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் கொடுக்கிறேன். ஆனால் எனக்குப் பின்னால் அவர் வருகிறார்; சந்திரன் இரத்தம் போலாகும் மற்றும்...'' ஓ! ''அவர் தம்முடைய களத்தை நன்றாய் விளக்கி, பதரை அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார். கோதுமையையோ களஞ்சியத்தில் சேர்ப்பார். அவர் களையையும், கோதுமையையும் தனியே பிரிப்பார்.'' ஓ! என்னே ஒரு செய்தி! 117அவர்கள் “ஊ! இந்த மனிதனா! இவன் என்ன சொல்லுகிறான்?இது-இது-இது என்ன சமயம்? ஓ, படிப்பறியாதவன். நமக்கு அங்கு ஒரு மனிதன் இருக்கின்றார். சகோதரன் ஜோன்ஸ் இருக்கிறார். இந்த நாட்களில் யாராகிலும் எழுப்பப்பட வேண்டுமானால் அது இவராகத்தான் இருக்க முடியும். பேராயர் இன்னார் இன்னார்தான் இதைச் செய்ய முடியும். பரிசுத்த பிதாவாகிய இன்னார் இன்னார்தான் இதைச் செய்ய முடியும்'' என்று கூறினார்கள். ஓ, என்னே ! பாருங்கள்? தேவன் எளிமையில் மறைந்திருந்து, எளிமையில் கிரியை செய்கிறார். புரிகின்றதா? ஒருநாள் அவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அவன் “ஆமாம், அவர் உங்கள் மத்தியிலே நின்றுக் கொண்டிருக்கிறார்'' என்றான். அவன்தான் அந்த முன்னோடி என்பதை அவன் நிச்சயமாக அறிந்திருந்தான். அவன், தான் யார் என்பதை அறிந்திருந்தான். ஆகவே தான் அவர்களை அவன் அவ்விதம் அசைத்தான். ''பயப்படாதிருங்கள், தொடர்ந்து நன்மையான காரியங்களைச் செய்து முன்னேறுங்கள். இராணுவ வீரர்களாகிய நீங்கள், உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படியுங்கள், தீமை ஏதாகிலும் செய்திருந்தால் நற்சீர் பொருந்துங்கள்...' என்றான். ''நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நாங்கள் இவ்விதமான காரியங்களை செய்வதை விட்டுவிடட்டுமா? நாங்கள் இதை நிறுத்தி விடட்டுமா?'' அவன், ''நீங்கள் இருக்கிறவண்ணமாகவே முன்னேறிச் செல்லுங்கள், முன்னேறுங்கள்; நீங்கள் உருளைக் கிழங்கை பயிர் செய்தால், தொடர்ந்து பயிர் செய்யுங்கள். இராணுவவீரர்களே, கொடுமை செய்யாதீர்கள், நீங்கள் எவ்விதம் இருக்கிறீர்களோ அவ்விதமாகவே தொடர்ந்து செல்லுங்கள். உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்.'' ''ரபீ, நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' ''நீங்கள் இருக்கிற வண்ணமாகவே முன்னேறி செல்லுங்கள், நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் மத்தியிலே இருக்கிறார்.'' அவன் தன்னுடைய செய்தியின் நேரத்தை அறிந்திருந்தான். அவன் அந்த நபரை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருந்தான். அவர் அங்கிருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். ''ஒருவர் உங்கள் மத்தியில் இருக்கிறார்; நீங்கள் அவரை அறியவில்லை. நடந்துக் கொண்டிருக்கும் காரியங்களை நீங்கள் அறிந்துக் கொள்ளாமல் இருக்கிறீர்கள்'' என்றான். ''ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது'' என்றான். “அவர் இங்கிருப்பார், நான் அவரை அறிந்துக் கொள்ளுவேன்.'' 118கடைசியாக ஒருநாள் அவன், “இதோ அவர் இங்கிருக்கிறார். இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி'' என்றான். ''என்னுடைய நேரம் இப்பொழுது வந்திருக்கிறது. நான் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நான் இப்பொழுது சிறுக வேண்டும்; நான் இந்தக் காட்சியை விட்டுச் செல்ல வேண்டும். இங்கிருந்து அவர் தொடர்ந்துகொண்டு செல்லுவார்.'' “இப்பொழுது ஆயிர வருட அரசாட்சி தொடங்க வேண்டியதாய் இருக்கிறது, காலம் சமீபமாய் இருக்கிறது'' என்றான். அவர் வரும் போது... “அவர் எல்லோரையும் அசைத்து, கோதுமையை பதரிலிருந்து பிரித்தெடுப்பார். அவர் பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பார். அவர் தம்முடைய களத்தை நன்றாக விளக்குவார். நூற்றுக் கூடை அவர் கையில் இருக்கிறது'' என்று யோவான் கூறினான். ஆனால் அவர் யார்? - அந்தச் சிறிய..... 119இப்பொழுது, அவர்கள் இவ்விதமாக திட்டம் தீட்டி வைத்திருந்தனர். “ஓ! மனிதனே! அவர் வரும்போது ஒருமைல் நீளத்திற்கும் மேலான ஈட்டியை அவர் பெற்றிருப்பார். அவர் பாலஸ்தீனாவில் நின்று கொண்டு, தம்முடைய வெண்மையான மேகங்களில் ஒன்றின்மீது நின்றுக் கொண்டு, இந்த எல்லா ரோமர்களையும் பொறுக்கியெடுத்து அவர்களை நரகத்தில் போட்டு விடுவார். - எல்லோரையும் அழிக்கும் வரை இவ்விதமாகச் செய்வார்.'' இவ்விதமாகத்தான் அவர்கள் எல்லோரும் மேசியாவின் வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவ்விதமான வேளையில்தான், ஒரு சிறு ஆட்டுக்குட்டி, சாந்தமும், மனத்தாழ்மையுமாய் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தள்ளிவிட்டுக் கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது.255. அவர் அவ்வளவு எளிமையாக வந்திருந்ததால் யோவானுக்கும் சந்தேகமுண்டாகி, ''நீங்கள் அவரிடத்தில் போய் வருகிறவர் நீர் தானா?'' என்று கேட்கும்படி அனுப்பினான். அவ்வளவாக எளிமையில் வந்திருந்ததால் அந்த தீர்க்கதரிசியும்'' வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரவேண்டுமா?'' என்று கேட்கும்படி ஆட்களை அனுப்பியிருந்தான். 120இப்பொழுது அவர் மத்தேயு 11ல் அந்தச் சீஷர்களுக்கு படிக்கும்படியாக ஒரு புஸ்தகத்தை அளிக்கவில்லை. யோவானின் சீஷர்கள் அவரிடத்தில் வந்து கேட்டபொழுது... யோவான் சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது 'அவனுடைய கழுகின் கண்கள் திரையிடப்பட்டுவிட்டிருந்தன'' என்று பெம்பர் கூறினார் என்று நினைக்கிறேன். அவன் ஆகாயத்தில் இருந்தான். ஆனால் அவனுடைய தீர்க்கதரிசனம் முடிந்தவுடன் அவன் மறுபடியும் பூமியில் விழுந்து கிடந்தான். ஏனென்றால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். நீங்கள் பாருங்கள், இப்பொழுது அவனுடைய பெரிய செட்டைகள் அவனுக்கு அவசியப்படவில்லை. ஆகவே, அவைகளை அங்கே மடக்கி வைத்திருந்தான். ஆனாலும், மற்றவர்களைக் காட்டிலும் அவன் உயர பறந்திருந்தான். 121நான் ஒன்றை சொல்லட்டும். தேவன் அவனை உபயோகப்படுத்தினார். இயேசு அதை அறிந்திருந்தார். ஏனென்றால் அவர் மாம்சத்தில் வந்த தேவனாயிருந்தார். பாருங்கள்? ஆகவே, அவர்-அவர் அங்கே கூறினார், அவர் கூறினார்... அவன் சிறையில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று அறிந்துக்கொள்ள அவனுக்கு ஒரு புத்தகம் கொடுக்கப்படவில்லை. ''இப்பொழுது ஒரு நிமிஷம் பொறுத்திருங்கள். நான் ஒரு கட்டுரை எழுதப்போகிறேன். நீங்கள் அதைக் கொண்டுபோய் அவன் சிறையில் இருக்கும்போது என்னிமித்தமாக எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ள யோவானிடம் கூறி இதை அவனிடம் கொடுங்கள்'' என்று அவர் கூறினாரா? பாருங்கள்? இல்லை, அவர் ஒருபோதும் அவ்விதம் கூறவில்லை. ''அவன் வெளியே வருவதற்கு முன் வேத பாண்டியத்தில் தன்னுடைய டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று யோவானிடம் போய்ச் சொல்லுங்கள்'' என்று இவ்விதமாக அவர் கூறவில்லை. பாருங்கள்? வேண்டுமானால் அவனும் மற்றவர்களுடன் சேர்ந்துக் கொண்டு ஒரு புறக்கணிக்கிறவனாக இருந்திருக்கக்கூடும். யோவான் ஒரு உத்தமனாக இருந்து ஒரு கேள்வியைக் கேட்டான். 122''கூட்டம் முடியும் வரை காத்திருந்து, என்ன நடந்ததோ அதை யோவானுக்குக் காண்பியுங்கள். அப்பொழுது அவன் அறிந்துக்கொள்வான். என்ன நடக்கின்றது என்று நீங்கள் அவனுக்குக் கூறினால், அப்பொழுது அவன் அறிந்துக்கொள்வான்'' என்று அவர் கூறினார். பாருங்கள்? பாருங்கள்? 'அவனிடம் போய்.. அவனிடம் கூறுங்கள். அவனிடம் இது... அவன் சிறையில் இருக்கிறான், அவன் இங்கிருக்க முடியவில்லை, நீங்கள் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தீர்கள், என்ன நடந்ததோ அதைக் கண்டிருக்கிறீர்கள். நீங்கள் போய்ச் சொல்லுங்கள்,'' என்றார். அப்பொழுது அந்த சீஷர்கள் ''நல்லது, ஆண்டவரே'' என்று கூறினார்கள். அவர்கள் மலையைக் கடந்து சென்றார்கள். பாறையின் மீது இயேசு உட்கார்ந்துக்கொண்டு அவர்கள் கடந்து செல்லும் வரைக்கும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் - அவர்கள் மலை மீது ஏறி செல்லும் வரைக்கும். அவர் திரும்பி, சபையாரைப் பார்த்து, “யோவான் காலத்தில் யாரைப் பார்க்கப் போனீர்கள்? பாருங்கள்? எதைப் பார்க்கப் போனீர்கள்? தன்னுடைய 'காலர் பட்டையை அணிந்து' மெல்லிய வஸ்திரத்தை அணிந்திருக்கும் நன்றாகப் படித்த, மெருகேற்றப்பட்ட மனிதனையா பார்க்கச் சென்றீர்கள்? அவ்விதமான மனிதனையா நீங்கள் காணச்சென்றீர்கள்?'' ”இல்லை, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர்கள் குழந்தையை முத்தமிட்டு, அரசனின் அரண்மனையில் வசிக்கிறார்கள். யோவான் அவ்வண்ணம் இருக்கவில்லை.'' “அப்படியானால் நீங்கள் ஏன் சென்றீர்கள்? தன்னுடைய ஊழியத்தை ஒரு ஸ்தாபனத்தோடு இணைத்துக்கொண்டு, எல்லாரோடும் கைகளைக் குலுக்கிக் கொண்டிருக்கும் மனிதனையா பார்க்கச் சென்றீர்கள்? ஒருத்துவக்காரர் வேண்டாம் என்று சொல்லும்போது திரித்துவக்காரரிடம் ஐக்கியம் கொள்ளுவதற்காக அவர்களிடம் செல்வதும்; திரித்துவக்காரர்கள் வேண்டாம் என்று சொல்லும்போது 'தேவனுடைய சபை' என்று அழைக்கப்படும் ஸ்தாபனத்திற்கோ அல்லது வேறெங்கேயோ செல்லுகிறார்கள். காற்றினால் அசையும் நாணலை போலிருக்கும் மனிதனையா பார்க்கச் சென்றீர்கள்?'' என்று கேட்டார். ”ஓ, இல்லை!-யோவான் அவ்விதமாக இல்லை.'' “அப்படியென்றால் எதைப் பார்க்கச் சென்றீர்கள்? - ஒரு தீர்க்கதரிசியை'' என்று அவர் கூறினார் ”அதுதான் சரி என்று கூறுகிறேன், ஆனாலும் நீங்கள் அறிந்திராத ஒன்றைச் சொல்லப் போகிறேன், அவன் ஒரு தீர்க்கதரிசியிலும் மேலானவனாக இருந்தான். அவன் மேலானவன்...'' என்று அவர் கூறினார். ''நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வேதாகமத்தில் மல்கியா 3ல் இதோ எனக்கு முன்பாக நான் என் செய்தியாளனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று சொல்லப்பட்டிருப்பவன் இவனே'' என்றார். பாருங்கள்? 123அவர்கள் அதைப் புரிந்துக்கொள்ளவில்லை. சீஷர்களும் அதைப் புரிந்துக்கொள்ளவில்லை, பாருங்கள். அது சரி, ஓ! எளிமை- தாழ்மையுடன் இருங்கள். தேவன், மகத்துவமானதொன்றை வாக்குரைக்கும் போது-அது அவருடைய பார்வையில் மகத்துவமானதாகக் காணப்படுகிறது. இப்பொழுது, நீங்கள் எப்பொழுதும் இதை மனதில் வைத்திருக்க விரும்பினால், நான் விரும்புகிறேன். இதை மனதில் வையுங்கள்! இது நடக்கும்போது, அப்பொழுது நீங்கள் இதை மாற்றிக்கொள்ளலாம். வசந்த காலத்தில் பூக்கும் சிறிய மலர்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது ஒரு சிறிய புல்லை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, இப்பொழுது இதைப் பிடித்துக்கொண்டு “ஏதோ எளிமையானதொன்று இதைச் செய்திருக்கிறது; சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பி இருக்கும் அந்த மூளை இந்தச் சிறிய புல்லை செய்யமுடியுமா என்பதைக் காண விரும்புகிறேன்'' என்று சொல்லுங்கள். அதை நீங்கள் எப்பொழுதும் பெற்றிருப்பீர்கள். நீங்கள் அதன் மீது உறுதியாய் சார்ந்திருக்கலாம்; நீங்கள் அதை எப்பொழுதும் பெற்றிருக்கலாம், பாருங்கள்? புல்லின் இலை தன்னில் ஜீவன் உள்ளதாய் இருக்கிறது. அது மிகவும் எளிமையானதாகவும், தாழ்மையானதாகவும் இருக்கிறது... ஒரு மனிதன் பெரிய மனிதனாக இருப்பது சரிதான்; ஆனால் அவன் தன்னை எளிமையுள்ளவனாக்கிக் கொள்வதற்கு அவ்வளவு பெரியவனாக இருப்பானென்றால், அவன் தேவனைக் காண்பான். ஆனால் அவன் எளியவனாகவில்லையென்றால் அவன் அவரைக் காணவே முடியாது. நீங்கள் எளிமையுள்ளவர்களாக வேண்டும். இப்பொழுது... 124வெளிப்படுத்தல் 5,9 வசனங்களில் ஆட்டுக்குட்டியானவர் ... கையிலிருந்து புஸ்தகத்தை வாங்கும்போது பாடிக் கொண்டிருப்பவர்களாகக் காணப்படுவர் எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களா? இல்லை, வெளிப்படுத்தல் 6:5,9 வசனங்கள் இல்லை. நீங்கள் கவனிப்பீர்களானால், இவர்கள் பரிசுத்தவான்களல்ல. அவர்கள்.... அவர் இன்னமும் தமது உரிமையைச் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. பாருங்கள்? இவர்கள் பரிசுத்தவான்கள் அல்ல. கவனித்தீர்களா, அவர்கள். மூப்பர்களும் ஜீவன்களும், அவர்கள் பாடுகின்றார்கள். 125அதை நாம் படிப்போம். அப்பொழுது அந்த நபர் .... அதன் பின்பு நான் முயற்சி செய்வேன்... இன்னுமாக அரை டஜன் கேள்விகள் உள்ளன. அதை சில நிமிடங்களில் முடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். வெளிப்படுத்தல் 5:9. அதைச் சற்று படிக்கலாம்..... இந்த மனிதர் உத்தமமாக இதைக் கேட்டிருக்கிறார். அதை அவர் அறிய ஆவலுள்ளவராய் இருக்கிறார். கவனியுங்கள். “அந்த புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, (எடுத்த பொழுது) அந்த நான்கு ஜீவன்களும் இருபத்து நான்கு மூப்பர்கள் தங்கள் சுர மண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து : தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் (எடுக்கவும் - take) அதின் முத்திரைகளை உடைக்கவும் (பாருங்கள்) பாத்திரராயிருக்கிறீர்;..... என்று புதிய பாட்டைப் பாடினார்கள். (பாருங்கள், பாருங்கள்) தேவரீர் எங்களை மீட்டுக்கொண்டு, எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்“ 126அது பரலோகத்திலுள்ள குழு— மீட்கப்பட்டவர்கள் அல்ல சரி. இப்பொழுது... சகோதரன் பிரான்ஹாமே. எல்லா... சற்று பொறுங்கள்- (சகோதரன் பிரான்ஹாம் சிறிது நேரம் நிறுத்துகிறார்-ஆசி) நான் நினைக்கிறேன்... என்னை மன்னியுங்கள். சகோதரன் பிரான்ஹாமே, தேவபக்தியுள்ள அனைவரும் (ஆம்)தேவபக்தியுள்ள அனைவரும் எடுத்துக்கொள்ளப்படுதலில் சென்றுவிட்டால், எலியாவும் மோசேயும் எங்கிருந்து வருவார்கள்? 127ஏதோ தவறுள்ளது. ஏதோ தவறுள்ளது. அவ்வளவுதான் அதற்குள்ளது. ஏதோ ஒன்று நிகழந்துவிட்டது. பாருங்கள்? எங்கேயோ தவறு நேர்ந்திருக்கிறது. எல்லோரும் நல்லுணர்வுடன் இருக்கின்றீர்களா? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர் - ஆசி) வியாதி வேறொன்றும் இல்லையே? (சபையிலுள்ள ஒருவர் வெளிப்படுத்தல் 5:9ஐ மறுபடியும் படிக்கும்படி வேண்டுகிறார்) வெளிப்படுத்தல்... எந்த பாகம், சகோதரனே? ('5“) 5. ('5') ஓ, அந்தக் கேள்வி! ஓ, விடையளிக்கப்பட்ட அந்த கேள்வி. இப்பொழுது அதைப் பார்க்கலாம். ''நீர்...'' அந்த சரியான இடம். அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, (எடுத்த பொழுது-taken) அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய்விழுந்து: தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் (எடுக்கவும்-take) அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீ அடிக்கப்பட்டு... இங்குள்ளது! இங்குள்ளது! நான் தவறாகக் கூறிவிட்டேன். பாருங்கள் சகல கோத்திரங்களிலும்..... எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு ... என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.'' 128அது சரி. அதைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஓ, பரிசுத்த ஆவியின் பிரசன்னம் மாத்திரம் இங்கில்லாதிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? அவர் அனுமதிக்கவில்லை.... பாருங்கள், அந்த வாக்கியத்தின் முதல் பாகத்தை மாத்திரமே நான் படித்தேன். பாருங்கள், இங்கு ஒன்று எழுதப்பட்டிருந்தது. கடிகாரத்தைப் பார்த்துவிட்டு... அதை துரித மாக முடிக்க எண்ணினேன், பரிசுத்த ஆவியானவர் என்னை அங்கு நிறுத்துவதைக் கண்டீர்களா? மகிமை! பாருங்கள். அதன் மற்ற பாகத்தை நான் படிக்கவில்லை. பாருங்கள். நான் இங்கு வைத்திருக்கிறேன். பாருங்கள். ''அவர்கள் புதிய பாட்டைப் பாடினார்கள்'' என்று படித்து விட்டு நிறுத்திவிட்டேன். பாருங்கள். ஆனால் இங்கு பாருங்கள், “ஏனெனில்..... சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை மீட்டுக்கொண்டு”. நிச்சயமாக. அவர்தாம் அது... என்னே, ஓ! என்னே! ஓ, என்னே! ஓ, என்னே! பாருங்கள். வேறொரு கேள்வியும் இங்கு உள்ளது. 129வெளிப்படுத்தல் 6:11ல் வெள்ளை அங்கி கொடுக்கப்பட்டவர்களுடன் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தங்கள் அங்கிகளை தோய்த்து வெளுத்தவர்களை ஒப்பிட முடியுமா? இப்பொழுது இதைப் பார்க்கலாம். வெளிப்படுத்தல் 6... ஜனங்களே, நான் துரிதமாகச் செல்லமுடியாது. அவ்வளவுதான்.... பாருங்கள், ஏனெனில் நான் தவறாகப் பதில் கூற நேரிடும். இப்பொழுது அப்படி நான் செய்ய அவர் விரும்பவில்லை. அது உண்மை . எனவே எனக்கு உதவி செய்யும். அது உண்மையென்று தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் அறிவார். பாருங்கள் நான் ஏதோ... ஒன்று... நான் கடிகாரத்தைப் பார்த்தேன். 11-30 ஆகியிருந்தது. ''நான் துரிதமாகச் செல்லாவிட்டால், வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்ய முடியாது'' என்று எண்ணினேன். அதை நான் பெற்றுக்கொள்ள முயல்கிறேன். ஏனென்றால் நான்... என் சிந்தை... என்னால் முடியவில்லை. நீங்கள் யோசித்துப் பாருங்கள், இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்பொழுது நான் ஒரு மனிதன் பாருங்கள், அங்கு நான் ஏழு நாட்கள் இருந்திருக்கிறேன். இன்று மத்தியமும் எனக்கு வேறேயுள்ளது. நான் தேவனிடத்தில் அறிந்துகொள்ளவேண்டும். 130நான் அந்த தவறைச் செய்யக் கூடாது என்று அவர் தீர்மானம் செய்திருந்தப்படியால், அந்த வாக்கியத்தில் எஞ்சியுள்ள பாகத்தை நான் மறுபடியும் படிக்கக் கட்டளையிட்டார். என் மீது ஏதோ ஒன்று உருண்டு, ''திரும்பிச் செல்; திரும்பிச் செல்!'' என்று கூறினது. நான், “எதற்குத் திரும்பிச் செல்ல வேண்டும்? இப்பொழுது நிறுத்தி விட்டு, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க வேண்டுமா? இது என்ன? நான் என்ன செய்து விட்டேன்?'' என்று நினைத்துக் கொண்டன். நான் அந்த வசனத்தை எடுக்கவேண்டும் என்று நினைத்த அதே சமயத்தில் யாரோ ஒருவர், ''அந்த வசனத்தை மறுபடியும் படியுங்கள்“ என்றார். அதை நான் படித்தபோது, அந்த கேள்வியின் கடைசி பாகத்தின் விடை காணப்பட்டது. பாருங்கள், ”வெளிப்படுத்தல் 6'' பாருங்கள், அதை நான் முதலில் படித்தபோது, அது அவ்விதம் தோன்றவில்லை ''அவர்கள் புதிய பாட்டைப் பாடினார்கள்'' ஆனால் அதற்குக் கீழுள்ளது என்ன? -அதற்கு அடுத்து வருவது, “எங்களை மீட்டுக் கொண்டீர்''. நிச்சயமாக அது மணவாட்டி - எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள். ”உங்களால்“. இங்கு... நிச்சயமாக ஆட்டுக்குட்டியானவர் புஸ்தகத்தை கையில் வைத்திருந்தார். அவர் அப்பொழுது மத்தியஸ்த கிருபையின் சிங்காசனத்தை விட்டு வந்து விட்டார். பாருங்கள்?. பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கவனித்து வருகிறார் என்பதைப் பார்த்தீர்களா? அதையேதான் நான் அன்றிரவும் கூறினேன். 131அவர் என்னுடன் அறையில் பேசி முடித்தவுடன், நான் இங்கு வந்து உங்களிடம், ''ஆட்டுக்குட்டியானவர் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு வந்தபோது'' ஓ, என்னே! என்று எல்லாவற்றையும் பிரசங்கித்தேன். அதையே ஒரு பொருளாகக் கொண்டு பேசலாம் என்று நம்புகிறேன். பாருங்கள், “ஆட்டுக்குட்டியானவர் தமது சிங்காசனத்தை விட்டு புறப்பட்டு வந்து விட்டார்...'' அந்த ஒளி, கிறிஸ்து, அவர் அங்கு பிரசன்னமானபோது, நான் எழுந்து நின்றேன். அவர் பிரசன்னமான போது என்னிடம் அதைக் கூறினார். மத்தியஸ்தராயிருந்த ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டவுடன், இங்கு கீழே வருகிறார், சபைக்கு மீட்பின் நாள் முடிவடைகின்றது. 132திறக்கப்படும் அடுத்து மீட்பு யூதர்களுக்கு, 1,44,000 பேர்களுக்கு. அது சரியா? ஏனெனில் அவர் மரத்தை வெட்டப் போவதாக வாக்களித்துள்ளார். உங்களுக்கு தெரியும். இப்பொழுது இங்கு அவர் ஆட்டுக்குட்டியானவர்- புறப்பட்டு வருகிறார். பின்பு மீட்பின் நாள் முடிவடைகின்றது. மீட்கப்பட வேண்டியவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்ட புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ளனர். அவர் இங்கு புஸ்தகத்தைத் திறக்கிறார். சரி! ஓ, நன்றி கர்த்தாவே, பாருங்கள்? ஒன்றைத் துரிதமாக முடிக்க முயன்ற உம் நடுக்கமுள்ள ஊழியக்காரனை மன்னிப்பீராக! இப்பொழுது, வெளிப்படுத்தல் 6:11ல் அங்கிகள் கொடுப்பட்டவர்களுடன் ஒப்பிடமுடியுமா? அதைப் பார்க்கலாம் (6:11) சரி, எதைக் குறிப்பிடுகிறார்? அவர் வெள்ளை அங்கிகள்... ஆம், பீடத்தின் கீழுள்ள உயிர்த்தியாகம் செய்தவர்கள்? காலத்திற்கிடையேயுள்ள யூதர்கள், “அவர்களுக்கு வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டன.'' வெளிப்படுத்தல் 7:11ல் கூறப்பட்டுள்ள, தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தவர்களுடன்..... 133இல்லை, அவர்கள் வித்தியாசமானவர்கள், நிச்சயமாக, ஏனெனில் அவர்களுக்கு ''வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டதாக அங்கு பார்த்தோம். அவர்களுக்கு கிருபையாக வெள்ளை அங்கிகள் அளிக்கப்படுகின்றன. இவர்களோ தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தனர். இவர்கள்தாம் 'சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜாதிகளிலுமிருந்து வந்து, தேவனுக்கு முன்பாக உள்ள திரளான கூட்டம்'. அது சரி. ஆனால் இவர் களோ இரத்த சாட்சிகளாக மரித்த யூதர்கள், நீங்கள் பாருங்கள். இப்பொழுது, இது சரியாக உள்ளது. இப்பொழுது, 134சகோதரன் பிரான்ஹாமே, தேவபக்தியுள்ள அனைவரும் எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்று விட்டால், எலியாவும் மோசேயும் எங்கிருந்து வருவார்கள்? அவர்கள் யூதர்களாயிருப்பார்களா? அல்லது எங்களுக்கு அளிக்கப்பட்ட எலியா அவர்களுடன்கூட இருப்பாரா? இல்லை, புறஜாதிகளை அழைப்பதற்கென இந்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட புறஜாதி மனிதன் எடுக்கப்படுவார். ஏனெனில் முழு சபையும்- எல்லாருமே எடுத்துக்கொள்ளப்படுகின்றனர். 11-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் அப்பொழுது கீழே கொண்டு வரப்படுகின்றனர். புறஜாதியாருக்கு கிருபையின் காலம் முடிவடைந்து, அது யூதர்களுக்கு அனுப்பப்படுகின்றது. இல்லை, இவ்விருவரும் ஒரே மனிதன் அல்ல என்று நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். இது என்னுடைய அறிவுக்கு எட்டினவரை, என்று நினைவு கூருங்கள். இது என்ன சொல்லுகிறதென்று பார்ப்போம். கேள்வி “கோதுமையும் திராட்சரசமும்” ஓ, அதுவா...'' கோதுமை. இல்லை, “அது என்ன..'' என்று நான் யூகிக்கிறேன். ''என்ன'' என்பது அங்கே இல்லை. அது இதைத்தான் கூறுகின்றது. 135வெளிப்படுத்தல் 6:6ல் உள்ள கோதுமையும் திராட்சரசமும்... அந்த வேதவாக்கியத்தைப் படிக்கும்போது, அது என்னவென்பதை அறிந்து கொள்ளலாம். ''அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமை யென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமை யென்றும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும் நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.“ அவர்கள் “கோதுமையையும் திராட்சரசத்தையும் குறிப்பிடுகின்றனர் போலும்! அது ஒன்றோடொன்றுள்ள தொடர்பு அது. கொரிந்தியர் 11:24ல் கூறப்பட்டுள்ள இராப்போஜனம் மேசையில் நாம் அருந்தும் திராட்சரசத்துக்கு அடையாளமாயுள்ளதா? இல்லை. ஒன்று ஆவிக்குரிய அடையாளம், மற்றொன்று தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாட்டைக் குறிக்கின்றது. 136நாம் கர்த்தருடைய சரீரத்தை நிதானித்து அறியாததே அநேகர் வியாதியுள்ளவர்களாக இருப்பதற்கு காரணமாயிருக்கலாம் அல்லவா? (உண்மை) ஆறாம் முத்திரை திறக்கப்பட்டதால் அது இப்பொழுது வெளிப்பட்டுள்ளதே... இப்பொழுது இதைப் பார்க்கலாம், இதைப் புரிந்துகொள்ள முடியுமா என்று நான் பார்க்கட்டும். நீங்களல்ல, நான் தான். நீங்கள் சரியாகத்தான் அதை எழுதியிருக்கிறீர்கள்; நான் தான். நாம் இதுவரை கர்த்தருடைய சரீரத்தை சரிவர நிதானித்து அறியாததே அநேகர் வியாதியுள்ளவர்களாக இருப்பதற்கு காரணமாயிருக்கலாம் அல்லவா? (அதன் முடிவிலே ஒரு கேள்விக்குறி உள்ளது.) சரி, “கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், அநேகர் வியாதியுள்ளவர்களும் பலவீனருமாயிருக்கிறார்கள்'' என்று வேதவாக்கியம் கூறுகின்றது. அது முற்றிலும் சரி. ஏனெனில், கர்த்தருடைய சரீரம் என்பது மணவாட்டியாகும், பாருங்கள்? அநேகர் வழிதவறிச் சென்றுவிடுகின்றனர். அதனுடன் அவர்கள் செல்வதில்லை. அது உண்மை. பாருங்கள், எவ்விதம் நடந்துகொள்ள வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையும் வாழ்ந்துவிட்டு, இராப்போஜனத்தில் பங்குகொள்கின்றனர்-அது சரியல்ல, பாருங்கள்? பொய் சொல்பவரும், களவு செய்பவரும், மது அருந்துபவரும் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளும்போது... அது மிகவும் பயங்கரம். நீங்கள் அப்படிச் செய்யக்கூடாது, பாருங்கள்? 137...ஆறாம் முத்திரை திறக்கப்பட்டதால் அது இப்பொழுது வெளிப்பட்டுள்ளதே. ''ஆறாம் முத்திரை திறக்கப்படுதல்.'' இதை நாம் பார்க்கலாம். இல்லை, இப்பொழுது ஆறாம் முத்திரை திறக்கப்பட்டபோது அது யூதர்களுக்கென்று நாம் பார்த்தோம். பாருங்கள்? சபை ஏற்கனவே சென்று விட்டது. அது உபத்திரவ காலம். எனவே அது ஒன்றாயிருக்காது. இல்லை, இல்லை. இவையிரண்டும் ஒன்றில்லை. ஒன்று ஆவிக்குரிய திராட்சரசம்-அதுதான் தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுதல். தேவனுடைய வார்த்தை வெளிப்படுவதனால் விசுவாசி ஊக்கமடைகிறான். மற்றொன்று இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் அடையாளமாயுள்ளது. அது கர்த்தருடைய இராப்போஜன மேசையில் அருந்தப்படுகின்றது. எனது புரிந்துகொள்ளுதலின்படி, இதுவே சரியான விடையாகும். 138முன்குறிக்கப்படாத எவராவது கர்த்தரை ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படிச் செய்தால், அவர்கள் விழுந்து போவார்களா? அவர்கள் முன்குறிக்கப்படாதிருந்தால் முடியாது; இல்லை பாருங்கள், அவர்களால் முடியாது. 139கத்தோலிக்க மார்க்கம் யூதர்களை ஏமாற்றி அவர்களுடைய செல்வத்தை எடுத்துக்கொள்ளும் என்று காண்பிக்கும் வேதவாக்கியம் எங்குள்ளது? இப்பொழுது “மிருகம் செல்வத்திற்காக ஏமாற்றும் என்று எங்கு கூறப்பட்டுள்ளது?'' அது அவ்விதம் உரைக்கவில்லை. ஆனால் நாங்கள் அவ்வாறு ஊகிக்கின்றோம். அன்றிரவு, உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா.. ஒலி நாடாவைக் கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் அதைத்தான் செய்வார்கள் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. நான் கூறினேன். பாருங்கள், கத்தோலிக்கர்கள் உலகத்திலேயே அதிகச் செல்வம் படைத்த குழு- அவர்களைப்போல் யாருமில்லை. அவர்களிடம் இல்லாதவை, யூதர்களிடம் உள்ளன. இன்று நாட்டின் பொருளாதாரமே அங்குதான் இருக்கின்றது. 'லைஃப் லைன்' என்னும் செய்தித்தாளின்படி, நாம் இப்பொழுது வரிப் பணத்தைக் கொண்டு ஜீவனம் செய்துகொண்டு வருகிறோம். (வாஷிங்டன் டி.சியிலிருந்து வரும் வரிப்பணத்தைக் கொண்டு) அது இன்னும் நாற்பது வருடங்களில் திரும்பச் செலுத்தப்படவேண்டும். அதைத்தான் இப்பொழுது நாம் செலவு செய்துக்கொண்டு வருகிறோம். அவ்வளவு பின்னால் நாம் இருக்கிறோம்... இன்னும் நாற்பது வருடங்களில் செலுத் தப்படவேண்டியவைகள். நாடு பணமற்று விட்டது. 140இப்பொழுது, காஸ்ட்ரோ (Castro) செய்த புத்திசாலித்தனம் என்னவெனில், அவன் பணநோட்டுகளை அச்சடித்து, அதைக்கொடுத்து, பாண்டு (Bond) பத்திரங்களைத் திரும்பி வாங்கிக்கொண்டு அதை எரித்துப் போட்டு, இவ்விதம் நோட்டுகளை மாற்றிக்கொண்டான். அது ஒன்றே அவனால் செய்ய முடிந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் செய்ய வேண்டியதும் ஒன்றே ஒன்றுதான். இது வில்லியம் பிரான்ஹாம் பேசுவது என்று ஞாபகங் கொள்ளுங்கள். இது என்னுடைய கருத்து. இயற்கையாக ஆலோசிப் போமானால், அது ஒருக்கால் லட்சக்கணக்கான மைல்கள் விலகியிருக்கலாம்-அந்தப் பணத்தில்.. என்று நம்புகிறேன்... பொருளாசை எல்லாத்தீமைக்கும் வேராயிருக்கிறது. அதுதான் காரியங்களைத் தொடங்கிவிடும் என்று நம்புகிறேன். இப்பொழுது கத்தோலிக்க சபை, ஆராதனை (Mass) போன்றவைகளுக்காக பணம் வாங்குகின்றது. உலகத்தின் செல்வத்தை அதனிடம் வைத்துள்ளது. ''அவள் ஐசுவரியமுள்ளவள்“ என்று வேதம் கூறுவது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? ஒரு தேசத்தில் மாத்திரமல்ல, வானத்தின் கீழுள்ள எல்லா தேசங்களிலும் அவள் ஐசுவரியமுள்ளவளாயிருக்கிறாள். அவள் பரவியிருக்கிறாள். அவளிடம் செல்வமுள்ளது. அவளிடம் இல்லாதது, யூதர்களின் ஆதிக்கம் கொண்ட 'வால் தெருவில் (Wall Street) உள்ளது. 141இப்பொழுது, யாக்கோபு திரும்பி வந்தபோது அவனிடம் பணமிருந்தது என்று சென்ற இரவு நாம் பார்த்தோம். அவன் இஸ்ரவேல் ஆனான்-அவனிடம் உண்மையாகவே பணம் இருந்தது. அனால் அவன் ஏசாவிடம் அதன் மூலம் எதையும் பெறமுடியவில்லை. ஏசாவிடம் பணம் இருந்தது பாருங்கள், முன்னடையாளமும் அதன் நிறைவேறுதலும் பிழையின்றிப் பொருந்துகின்றது. இப்பொழுது இங்கே கவனியுங்கள். அவர்கள் பணத்தையெல்லாம் ஒன்றாகச் சேர்க்க விரும்புவார்கள் என்றும், ரோம ஆதிக்கம் உடன்படிக்கையை முறித்துப் போட்டு, யூதர்களின் பணத்தை அபகரிக்கும் என்றும் கூறினேன். ஒருக்கால் அப்படி நிகழாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் உடன்படிக்கையை முறித்துப் போடுவார்கள் என்று மாத்திரம் எனக்குத் தெரியும். என்ன காரணத்தினால் என்று எனக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு வெளிப்படுத்தப் படவில்லை. ஆனால், கவனியுங்கள். இன்றைக்கும். நாம் இன்றைக்கு செய்ய வேண்டிய ஒரே காரியம் ... நாம் வரிப்பணத்தை எடுத்துக் கொண்டு.. அது நாற்பது வருடத்தில் அது திரும்பச் செலுத்தப்படவேண்டுமென்று... பாருங்கள், நம்முடைய தங்கம்... அதை நாம் செலவழித்து விட்டோம். நாம் திவாலாகி விட்டோம். நம்மிடம் பணமில்லை. நம் முடைய முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டே நாம் வாழ்ந்து வருகிறோம். 142சபையும் அதையே இன்று செய்து வருகின்றது- மணவாட்டியல்ல. சபையும் சிங்கத்தின் காலத்தின் ஊழியத்தில் பெற்ற ''நாங்கள் சபை, நாங்கள் தாய் சபை, நாங்கள் தொடங்கினோம்.''... அது உண்மை, பாருங்கள்? அது முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டு வாழத்தலைப் படுகின்றது. மெதோடிஸ்டுகளும் அவ்வாறே முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பாப்டிஸ்டுகளும் முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பெந்தெகொஸ்தரும் தங்கள் “தேவனுக்கு மகிமை'' என்பதனால் வாழத்தலைப்படுகின்றனர். அநேக ஆண்டுகளுக்கு முன்பு, பரிசுத்தவான்கள் ஆவியில் நடனமாடுவார்கள். ''கர்த்தர் இதைச் செய்தார், அதைச் செய்தார்' என்றெல்லாம் சாட்சியாகக் கூறுவார்கள். அவை முன்காலத்தில் நிகழந்தவை. ”இப்பொழுது நாம் பெரியவர்களாகிவிட்டோம். சகோதரனே'' ஓ என்னே! பாருங்கள்? - எல்லாம் முன்காலத்தில் பெற்றிருந்த நன்மதிப்பு. 143இந்த தேசமும், அதன் முற்பிதாக்கள் என்னவாயிருந்தனர் என்னும் முன்காலத்து நன்மதிப்பைக்கொண்டே வாழ்ந்து வருகின்றது. அதன் காரணமாக அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று நினைக்கின்றனர். இஸ்ரவேலர் முன்காலத்தில் என்னவாயிருந்தனர். என்பதற்கு தேவன் மதிப்பு கொடுக்கவில்லை. அக்காலத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதையே அவர் பார்த்தார். கவனியுங்கள், இதுதான் நடக்கும் என்று நினைக்கிறேன். ஒருக்கால் அது அப்படியில்லாமலிருக் கலாம். இந்தப் பிரச்சனையை, நினைக்கிறேன் நாம் பண நோட்டுகளை மாற்றுவதற்குப் பதிலாக... அது 'பிலிப மாரிஸ்'ஸுக்கு என்ன செய்யும்? விஸ்கி கம்பெனிகளுக்கு அது என்ன செய்யும்? எஃகு தொழிலுக்கு அது என்ன செய்யும்? வணிகத்துறை அனைத்திற்கும் அது என்ன செய்யும்? அது அவர்களை உடைத்துப் போடும். அவர்கள் பணமற்றவர்களாகி விடுவார்கள். “அப்பொழுது நாம் அந்தப் பணத்தை கடன் வாங்கினால்”... அவன் எவ்வளவு சாமர்த்திய முள்ளவன், பாருங்கள்? அப்பொழுது தேசமானது சபைக்கு விற்கப்படும். சபையும், தேசமும் மறுபடியுமாக இணைக்கப்படுகின்றது. அங்கேதான் அவள் (கத்தோலிக்க சபை - தமிழாக்கியோன்) வருகிறாள். பாருங்கள்? அதுவே தான். கவனியுங்கள். சரி. இப்பொழுது, இதில். 144ஒருவன் நமது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தாபனத்தில் இருந்து கொண்டே, அவனுடைய மன சாட்சி கூறுபவைகளை அல்லது இக்கடைசி கால சத்தியத்தை எடுத்துரைத்தால், அவன் “வேசியாகக்” கருதப்படுவானா? ஒருவன்... ஸ்தாபனத்தில் இருந்து கொண்டே ... இப்பொழுது நாம் பார்ப்போம், சரி, ஸ்தாபனங்கள், பாருங்கள்... ஸ்தாபனங்களுக்கு பேச்சுரிமை அரசாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ளது. பாருங்கள்? அதற்கும் ஒருவனுடைய இருதயத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. பாருங்கள்? ஒருவன் உண்மையான விசுவாசியாக, தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறந்தவனாக இருந்தால், என்றாவது ஒரு நாள் அவன் பேசக் கூடாதப்படி தடை பண்ணப்படுவான். பாருங்கள்? அது அவ்வளவு வெளிப்படையாக இருப்பதால், அவனால் அதைக் கண்டு கொள்ளாமலிருக்க முடியாது. 145இப்பொழுது நண்பர்களே, நீங்கள் இதை நினைவில் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். எனக்குத் தெரிந்தவரைக்கும், தேவன் எக்காலத்திலும்... ஒன்றைச் செய்ததில்லை... பாருங்கள். கவனியுங்கள், இயேசுவே அதற்கெல்லாம் பிரதானமாயிருந்து வந்துள்ளார். ஏனெனில் அவர் தேவன். அவர் மாம்சரூபம் கொண்ட இம்மானுவேல். இப்பொழுது, இந்த நபர் இயேசுவைப் பாருங்கள். அவர் இவ்வுலகிற்கு வந்தபோது- நான் நினைக்கிறேன்-இவ்வுலகிலிருந்த பத்தில் ஒரு பாகம் பேர்கூட அவர் இவ்வுலகிலுள்ளதை அறிந்துக் கொள்ளவில்லையென்பது உங்களுக்குத் தெரியுமா? மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், மற்றவையெல்லாம் சம்பவிக்கும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட முன்னோடி இவ்வுலகில் தோன்றினபோது, இஸ்ரவேல் ஜனத்தொகையில் நான் நினைக்கிறேன், நூறில் ஒரு பாகம்கூட அதை அறிந்துக் கொள்ளவில்லை யென்பது உங்களுக்குத் தெரியுமா? அது விசித்திரமாயில்லையா? 146ஏன், யூதர்களும் இதர ஜனங்களும் உலகம் முழுவதும் அப்பொழுது இருந்தனர். இவ்வுலகின் இரட்சகர் அவர் என்று சாட்சி கொடுக்க இயேசு தோன்றினார் என்பது நினைவிருக்கட்டும். அது சரியா? ஏன் ஜனங்களுக்குப் பின் ஜனங்கள், ஜாதிகளுக்கு பின் ஜாதிகள் அநேகர் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. ஆயினும் இவ்வுலகில் அது நடந்து கொண்டேயிருந்தது. பாருங்கள்? அவர் ஏன் மற்றவர்கள் அதை அறிந்து கொள்ளச் செய்யவில்லை? அவர் வந்தார்; நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவர் மாத்திரமே அவரை ஏற்றுக் கொண்டனர். மற்றவர்களுக்கு இதைக் குறித்து அறிவிப்பதால் எவ்வித உபயோகமுமில்லை. ஏனெனில் அவர்களை அவர் மீட்டிருக்க முடியாது; அவர்கள் மீட்கப்படத்தக்கவர்கள் அல்ல. ஏன் அந்த ஆசாரியர்கள் அங்கு நின்று கொண்டிருந்தபோது... அவர் ஏன் அந்த இடத்திற்கு வரவேண்டும்? ஏனெனில் முன்குறிக்கப்பட்டவர்கள் அங்கு சுற்றிலும் இருந்தனர். எனவே ஒரு குழுவுக்கு அவர் பிரசங்கம் செய்ய நேர்ந்தது. அவர் யாரென்பதை அறிந்திருக்க வேண்டிய மகத்தான பண்டிதர்கள், “இந்த மனிதன் பெயல்செபூல். இவன் எங்கள் மேல் ஆளுகை செய்வதையும், மற்றவைகளையும் விடமாட்டோம்'' என்றெல்லாம் கூறினர். ஆனால் ஒரு சிறிய வேசி- அவளுக்குள் ஜீவன் இருந்தது, அவள் நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவளாயிருந்தாள். அவளுடைய பெயர் அழியமுடியாததாய் இங்கே தேவனுடைய வார்த்தையில் இருந்தது. தேவனுடைய வார்த்தை அவளிடம் நடந்து சென்றபோது, அவளுக்குள் இருந்த வித்தின் மேல் முதன்முறையாக வெளிச்சம் பட்டது. அவள் உடனே அறிந்துக் கொண்டாள். (சகோதரன் பிரான்ஹாம் தன் விரலை ஒருமுறை சொடுக்கினார் - ஆசி) 147கவனியுங்கள், அந்த மீன்பிடிப்பவன் அங்கு வந்தான். இயேசு அங்கு அநேக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து அநேகருடைய இருதயங்களிலுள்ள இரகசியங்களையறிந்து கூறி, தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஆகவே, என்னே, அங்கே பரியேசர்கள் நின்று கொண்டிருந்தனர். “இந்த மனிதன் பெயல்செபூல்'' என்றனர். அவர்கள் சபையோருக்கு அவர்கள் பதில்கூற வேண்டியவர்களாயிருந்தனர். சபையார் அங்கு நின்று கொண்டு, ''டாக்டர் ஜோன்ஸ் அவர்களே, அங்கு சென்று இந்த மனிதன் கூறுவதைக் கேட்பீர்களா? அவர் என்ன பேசுகிறார் என்பதை அறிந்தவராக இருக்கிறார். அவர் ஒரு சாதாரண மனிதனைப்போல் பேசவில்லை'' என்றனர். “அவர் பேசுவதை நான் கேட்பேன்” அவர் அங்கு நடந்து சென்றார். பாருங்கள், ஆம். தேவன் அப்படிப்பட்டவருக்குள் வரமுடியாது. இயேசு அங்கு நின்று கொண்டு, அவர் கூறினார். அவர்கள், 'பாருங்கள், பாருங்கள் அங்கு ஒரு மனிதன் வருகிறான்... அதோ அவருடைய சீஷர்களின் ஒருவன்... அங்கு ஒரு மனிதன் வருகிறான். அவன் பெயர்.... அந்திரேயா.. அங்கிருக்கும் செம்படவர்களை உங்களுக்குத் தெரியுமல்லவா? பாருங்கள்? அது அவர்கள்தான். ஆம், அது அவனுடைய சகோதரனாகிய சீமோன். அவர்கள் அந்த வயோதிப யோனாவின் குமாரர்கள். கவனியுங்கள். அவன் வேறுயாரையே அவரிடத்தில் கொண்டு வருகிறான். அது யார்? ஆம். அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்! அடுத்த படியாக ஒருவன் அவர் அருகாமையில் வருகிறான்“ என்றார்கள். அவர், ”உன் பெயர் சீமோன்; நீ யோனாவின் குமாரன்“ என்று கூறினார். 148ஆனால் பரிசேயர் போன்றவர்களோ, ''இந்த மனிதன் பெயல்செபூல். பாருங்கள்? அவன் மீது ஒருவகையான ஆவி தங்கியுள்ளது. அவன் விசித்திரமானவன். பாருங்கள்? அவன் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டாம். அதைவிட்டு அகன்றுச் செல்லுங்கள். அவன் நடத்தும் வேறு எந்த கூட்டத்துக்கும் நான் இனிமேல் வரமாட்டேன். இது முடிந்தவுடன் நாம் இங்கிருந்து சென்று விடுவோம். நாம் மறுபடியும் இங்கே வரவே மாட்டோம்'' என்றெல்லாம் கூறினர். பாருங்கள்? ஏன்? அவ்விதமாகவே அவர்கள் அவரைக் கருதினர். பாருங்கள், அவர் யாரிடம் வந்தாரோ அவர்கள்தான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். பாருங்கள்? ஆனால் எல்லாரும் உதைத்துத் தள்ளிய வேசி அங்கிருந்தாள். நான் வேசித்தனத்தை ஆதரிப்பதாக எண்ணவேண்டாம். இல்லவே இல்லை. முன்குறிக்கப்பட்ட வித்தை நான் உங்களுக்கு எடுத்துக் காண்பிக்கிறேன். 149இந்த மீன் பிடிப்பவனைப் பாருங்கள். அவன் படிப்பறியாதவன் என்று வேதம் உரைக்கின்றது. அது சரியா? அது மாத்திரமல்ல. அவன் பேதைமையுள்ளவன்! அது சரியா, தவறா? நாம் அறிந்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அநேக காரியங்களைக் குறித்து நாம் மாத்திரம் பேதமையுள்ளவராயிருந்தால்! பாருங்கள்? சரி பாருங்கள்? அவன் பேதமையுள்ளவனும் படிப்பறியாதவனுமாயிருந்தான்! அவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சமூகத்திற்கு நடந்து சென்றான். அவன் யாரென்று இயேசு பகுத்தறிந்து கூறினார். அந்த நேரத்திலேயே அது முடிவு பெற்றது. இப்பொழுது அதைக் குறித்து தர்க்கம் செய்யும் மற்றவனைக் கவனியுங்கள். ''பாருங்கள், அவன் விசுவாசித்தான். அவன் யாரென்று கவனியுங்கள். அவன் யார் தெரியுமா? நல்லது, அந்த மனிதன் ஒரு போதும்... அவன் ஒரு செம்படவன். அவனுக்கு மொழியின் முதல் அட்சரங்களாகிய ABC கூட தெரியாது. அவனிடம் நான் மீன் வாங்கியிருக்கிறேன். ரசீதில் கையொப்பமிடக்கூட அவனுக்கு தெரியாது. அப் படிப்பட்டவர்கள்தான் இத்தகைய காரியங்களுக்கு செவிகொடுப்பார்கள்.'' கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென். பாருங்கள்? ''அவனுக்கு... அவனுடைய தகப்பனாரைப் பாருங்கள். அவனும் பேதமையுள்ளவன். அவன் மகனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேயில்லை'' ஆனால் அப் படிப்பட்ட ஒருவனை தேவனே தம் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி, அவர் விரும்பும் முறையில் அவனைப் படிக்க வைக்கிறார். 150பள்ளிக்கூடத்திற்குப் போகாதிருப்பதை நான் ஆதரிக்கவில்ல. நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள் என்ற நம்புகிறேன். அந்த பள்ளிக் கூடங்களில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதைக் குறித்து அதை உதாரணமாக மாத்திரம் கூறுகிறேன். பாருங்கள், அத்தகைய காரியங்கள்-அது அவர்கள் தலைகளுக்குமேல் செல்வதன் காரணமும் அதுவேதான். உங்களுக்குத் தெரியுமா? நாட்டில் இருந்த யூதர்களில் மூன்றில் ஒருபாகம்கூட அவர் வந்திருப்பதை குறித்து அறிந்திருக்கவில்லை. அந்த மூன்றில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகம் மாத்திரமே அவருடைய பிரசங்கங்களைக் கேட்டனர். அந்த ஐந்தில் ஒரு பாகத்தில் நூறில் ஒருபாகம் மாத்திரமே அதை ஏற்றுகொண்டனர். அவருக்கு எத்தனைப்பேர் இருந்தார்க ளென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அனைவரிலும் பன்னிரண்டு பேர் மாத்திரமே அவருக்கு சிலுவையினண்டையில் இருந்தனர். மற்ற வர்கள் எங்கே? பாருங்கள்? அந்த எழுபது பேர் சென்று விட்டார்கள். 151இப்பொழுது அவர் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தி தமது போதகத்தைக் குறித்து ஒன்றும் சொல்லாமலிருந்த சமயங்களில்... அவர் வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தினவராய் சுற்றித் திரிந்தார். ஓ, என்னே! அது அவர் மேல் தங்கியிருந்த தேவனுடைய ஆவியாகும். அதை நீங்கள் நம்புகிறீர்களா? (சபையார் “ஆமென்'' என்று கூறுகின்றனர் -ஆசி) அவர் வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தினபோது, ”அற்புதம்'' என்று எல்லோரும் பாராட்டினார்கள். “ரபீ, அது மிகவும் மகத்தான காரியம். சகோதரரே, நீங்கள் அவரை உங்கள் சபைக்கு அழைக்கவேண்டும். வல்லமையைக் குறித்து நீங்கள் பேசினால், அந்த மனிதன் உண்மையாகவே வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தும் வல்லமை கொண்டிருந்தார்” என்றெல்லாம் அவரைப் பாராட்டினார்கள். சரி, போலியாட்கள் எழும்பத்தான் செய்வார்கள். இதோ அவர்கள் வருகிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு குழுவும் உங்கள் சொந்த மனிதரைக் கொண்டிருக் கவேண்டும். இதோ அவர் வருகிறார். முதலாவது நடந்தது என்னவென்றால், ஒருநாள் அவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். ''ரபீ, நாங்கள் உம்முடன் வர மனதாயிருக்கிறோம்.' 152“சரி, உட்காருங்கள். நாம் போகலாம்.'' அவர் எழுபது பேர்களை அனுப்பினார். ஒருநாள், ஒரு மகத்தான அற்புதத்தை அவர் செய்த பின்பு, அவர் உட்கார்ந்து அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை விவரிக்கத் தொடங்கினார். ''ஏழாம் தூதனின் சத்தத்தின்போது...'' சரி, அவர் அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை-சத்தியத்தை எடுத்துரைக்கத் தொடங்கினார். அவர்கள், ''ஆ ஆ ஆ சற்று பொறுங்கள் இதைக் குறித்து எனக்குத் தெரியாது. இது எங்கள் போதங்களுக்கு முரணாய் அமைந்துள்ளது'' என்றனர். அவர்கள் மேலும், “சரி, நாம் தேவாலயத்தை விட்டு விட்டு (Synagogue) வந்தோம். சகோதரரே, ஒருக்கால் நாம் தவறு செய்திருக்கக் கூடும். நாம் திரும்பச் சென்று விடுவது நல்லது. ஏனெனில் இந்த மனிதன் புதிர் போட்டு பேசுகிறார். அவர் ஒரு விசித்திரமான மனிதன். அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை'' என்றனர். பாருங்கள்? அது என்ன? -ஆரம்பத்திலேயே அந்த வித்து முன் குறிக்கப்படவில்லை. அது உண்மை . முதலில் அவர்கள் செய்தது என்னவென்றால், அவர்கள் போதகர் குழு ஒன்றை அமைத்து, அந்த போதகர்களிடம் பேசினார்கள். அவர்கள், “ஆ ஆ ஆ, உம்ம்ம்ம் , நாம் திரும்பி போய்விடுவது நல்லது. நாம் திரும்பிச்சென்று நமது ஸ்தாபனங்களை அடைந்து, நமது பத்திரங்களை மீண்டும் எடுத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட ஒரு மனிதனை யார் புரிந்துகொள்ளக்கூடும்? இங்கு ஒருவிதமாகவும் அங்கு ஒருவிதமாகவும் அவர் கூறுகிறார்'' என்றார்கள். 153அவர்கள் (மற்றவர்கள்) அதை அவ்விதமாகப் புரிந்து கொள்ளவில்லை. சிலரிடம் அவர் உவமைகளாகப் பேசினார். மற்றவர்களிடம் அல்ல . எனவே அவர்கள் சென்று விட்டார்கள். அப்பொழுது அவர் திரும்பி, அங்கு நின்றுகொண்டிருந்த பன்னிருவைரையும் நோக்கி, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?'' என்று கேட்டார். இப்பொழுது கவனியுங்கள், பேதுரு, “உங்களுக்குத் தெரியுமா? அந்த இடத்தில் நான் சென்றிருந்தேன். நான் வேறு எங்கு செல்ல முடியும்? உலகில் வேறெந்த இடத்திற்கு நான் செல்ல முடியும்? உலகத்தின் குப்பைகள் நிரம்பிய அந்த குப்பை களத்திற்கு நான் மறுபடியும் செல்ல முடியாது. பாருங்கள்? வேறெங்கு நான் செல்வேன்? என்னால் முடியாது” என்றான். அப்பொழுது இயேசு, “அப்படியானால் சரி, என்னுடன் வா'' என்றார். பார்த்தீர்களா? இருபத்தைந்து லட்சம் மக்களிடையே பன்னிரண்டு பேர் மாத்திரமே. கோடிக்கணக்கான மக்களுள்ள உலகத்திற்கு இரட்சகர், ஆனால் இன்னும் தாழ்மையுள்ளவர். பாருங்கள். தாழ்மை யுள்ளவர்களாயிருங்கள்; தாழ்மையில் நிலைத்திருங்கள், கவனியுங்கள், இப்பொழுது பரிசேயர் அனைவரும் இருந்தபோதிலும், அந்த வேசி அங்கு வந்து ''நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். மேசியா வருவாரென்று அறிவேன். அவர் வரும்போது இவைகளைச் செய்வார்“ என்றாள். இயேசு, ''நானே அவர்'' என்றார். அவள், ''ஆம், அது உண்மை '' என்று கூறிவிட்டு சென்று விட்டாள். அவளை ஒருமுறையாவது நிறுத்திப்பாருங்கள்; உங்களால் முடியாது. 154சகோதரன் பிரான்ஹாமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல்கள். மத்தேயு 22:11ல் உள்ள மனிதன் யாரென்பதை விளக்கமாய்க் கூறுங்கள் - அதாவது கலியாண வஸ்திரம் தரிக்காத மனிதன்..... கல்யாண வஸ்திரமில்லாமல் இந்த மனிதன் பரலோகத்திற்குச் செல்ல முடியாது என்று நானறிவேன். அவன் விருந்தாளியென்று எனக்குத் தெரியும்: மணவாட்டியல்ல. ஆம் அது சரி, அவன் என்ன நடக்கின்றதென்பதைக் காண மெல்ல உள்ளே நழுவிச் சென்றான். பாருங்கள்? கவனியுங்கள், அதைக் குறித்து ஒரு முழு பிரசங்கமே செய்யலாம். வியாதியஸ்தர்களுக்கு ஜெபம் செய்து முடிக்க எனக்கு பத்து நிமிடங்கள் மாத்திரமேயுள்ளது. நான் இன்னும் கேள்விகளில் பாதிகூட முடிக்கவில்லை. கவனியுங்கள். இந்த கேள்விகளுக்குப் பின்பு மற்றெல்லாவற்றையும் துரிதமாக முடிக்கப் போகின்றேன். பாருங்கள்? 155இதுதான் நடந்தது, நீங்கள் கிழக்கத்திய நாடுகளின் பழக்க வழக்கங்களை அறிந்திருப்பீர்களானால், பாருங்கள்? ஒரு மணமகன் தன் விவாகத்திற்காக அநேக அழைப்புகளை அனுப்புகிறான். அவன் அனுப்பியுள்ள ஒவ்வொரு அழைப்பிற்கும், அவன் ஒரு ஆளை ஒரு அங்கியுடன் கதவண்டையில் நிற்கக் செய்கிறான் அழைப்புக்கிணங்கி வருபவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் ஏழையாயிருந்தாலும், பணக்காரராயிருந்தாலும், யாராயிருந்தாலும் அவர்கள் அனைவருமே அந்த கலியாண வஸ்திரத்தை தரித்துக் கொள்ளவேண்டும். அந்த ஆட்கள் கதவண்டையில் நின்றுகொண்டு, கலியாணத்துக்கு வருபவர்களுக்கு அங்கியை உடுத்துவித்தனர். அவனுடைய வெளிதோற்றத்தை அது மறைத்து. அவன் கோடீசுவரனாக இருந்தாலும் சரி, ஒன்றுமேயில்லாத மிகவும் ஏழ்மையானவனாக இருந்தாலும் சரி, விவசாயியாக இருந்தாலும் சரி, குழி வெட்டுபவனாயிருதாலும் சரி, இராஜகுடும்பத்து தனவந்தனாயிருந்தாலும் சரி (Plutocrat) அவர்களெல்லாரும் அந்த அங்கியை அணிந்தவராக இருந்தனர். வாசலில் நுழையும் முன்பு, அது அவனுக்கு அணிவிக்கப்படுகிறது. 156இப்பொழுது யோவான் 10-ம் அதிகாரத்தைப் பாருங்கள், அந்த அதிகாரம்தான் என்று நினைக்கிறேன். “நானே வாசல்” என்று அவர் அங்கு கூறியுள்ளார். பாருங்கள்? (யோவான் 10:9) “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால்...'' கலியாணத்திற்கு வருபவன் வாசலண்டை நிற்கிறான். அங்குள்ள மனிதன் அவனுக்கு அங்கியைபரிசுத்த ஆவியை - அணிவிக்கிறான். அவன் நுழையும்போது நீதியின் வஸ்திரத்தை அவனுக்குத் தருகிறான். இப்பொழுது நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் மனிதன் ஏதோ ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்தவன். அவன் பக்கவழியாக நுழைந்துஜன்னலின் வழியாகவோ அல்லது நுழையக்கூடிய ஒரு துவாரத்தின் வழியாகவோ நுழைந்து - மேசையை அடைந்து அங்கு உட்கார்ந்துவிட்டான். மணவாளன் இங்கு வந்து சுற்றும் முற்றும் பார்த்தபோது... வித்தியாசமான வாத்துக்கள் முன்புண்டாயிருந்தன. இப்பொழுது இவன் வித்தியாசமான வாத்தாக இருக்கிறான். பாருங்கள்? “பரிசுத்த ஆவியின் அபிஷேகம், இன்னும் மற்றவை, இல்லாமல் இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்? நீ எப்படி உள்ளே வந்தாய்?'' என்று கேட்கிறான். எப்படியோ அவன் பக்கவழியாக நுழைந்து வந்தான். சரியான அழைப்பில்லாமல் அவன் வந்துவிட்டான். பாருங்கள்? அவன் கல்விமுறை போன்ற வழியில் வந்து உள்ளே நுழைந்துவிட்டான். “அவனைக் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள்'' என்று அவர் கட்டளையிட்டார். பாருங்கள்? அவன் உபத்திரவகாலத்திற்குள் சென்று விடுகிறான். பாருங்கள்? அவன் வாசலின் வழியாக உட்பிரவேசிக்கவில்லை. ஆகவே, சரி. கேள்வி: 157மல்கியா 4ல் கூறப்பட்ட எலியாவும். வெளிப்படுத்தல் 11:3ல் உரைக்கப்பட்ட எலியாவும் ஒருவரா? மற்ற இரண்டு சாட்சிகளும் வெவ்வேறு நபர்களா? ஆம். மல்கியா 4-ன் எலியா மல்கியா 3-ன் எலியாவல்ல. அதை நாம் நேற்றிரவு பார்த்தோம். ''மற்ற இரண்டு சாட்சிகளும் வெவ்வேறு நபர்களா?'' ஆம் ஐயா, இரண்டு பேர்களும், எனக்குள்ள வெளிப்பாட்டின்படி அவர்கள் மோசேயும் எலியாவும்; இதில் அதிக நேரம் நிலைத் திருக்க விரும்பவில்லை. 158இராஜாக்கள் 19 - (சகோதரன் பிரான்ஹாம், நான் நம்புகிறேன்)பாகாலுக்கு முன்பாக முழங்காற் படியாதவரின் எண்ணிக்கை... ஆம் அது சரி. நன்றி, எழுநூறு பேருக்கு பதிலாக... உமக்கு நன்றி. அது சரியாக உள்ளது. ஏழாயிரம் பேருக்கு பதிலாக எழுநூறு... “சகோதரன் பிரான்ஹாம்...'' எழுநூறுக்குப் பதிலாக ஏழாயிரம் இப்பொழுது அதை கவனித்தீர்களா? 159பாருங்கள் ஒரு மனிதன் எவ்விதம் பிரசங்கம் செய்ய வரும்போது... நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். எலியா வனாந்திரத்திலிருந்து வந்தபோது, அவனிடம் ஒரு செய்தி உண்டாயிருந்தது. அவன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு நேரடியாக ராஜாவினிடம் சென்று, “என் வாக்கின்படியே அன்றி வானத்திலிருந்து பனியும் கூட பெய்யாதிருக்கும்'' என்றான். அந்த வார்த்தையே அவனுக்கு உண்டாயிருந்தது. அதைக் கூறிவிட்டு மற்ற யாரிடமும் வேறொன்றையும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டான். பாருங்கள். வேறொரு செய்தி அவனுக்குண்டானபோது, அவன் புறப்பட்டு வந்து, அந்தச் செய்தியை உரைத்துவிட்டு திரும்பவும் வனாந்திரத்துக்கு சென்று விட்டான். பாருங்கள்? இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், நான் இந்த கூடாரத்திற்கு மூலைக்கல்லை நாட்டினபோது அவர், ''ஒரு சுவிசேஷகனுடைய ஊழியத்தைச் செய்'' என்று கூறினார். அந்த ஊழியம் என்னை விட்டு எடுக்கப்பட்டு, வேறொன்று நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றது. நான் இங்கு வந்து... பாருங்கள், சுவிசேஷகனின் ஊழியத்தை செய்து, மற்ற ஏதோ ஒன்றைச் செய்து, நீங்கள் எதுவரைக்கும் வந்திருக்கிறீர்கள் என்று கண்டு கொண்டிருக்கிறேன்! பாருங்கள்? நீங்கள்... ஓ, இதை புரிந்துகொள்ள சபை போதிய அளவுக்கு ஆவிக்குரியதாயிருக்குமென்று எதிர்பார்க்கிறேன். 160சகோதரன் பிரான்ஹாமே, எலியா மூன்று முறை வர வேண்டுமென்று அறிகிறேன். அவன் ஏற்கனவே இரு முறை வந்து விட்டானென்றும், அவன் மறுபடியும் வருவானென்றும் நீர் கூறுகின்றீர். அந்த எலியாவின் ஆவியைத் தன்மீது கொண்டுள்ளவன், இரண்டு பேர்களாகிய மோசே, எலியா என்பவர்களில் ஒருவனாக இருப்பானா? இல்லை, இல்லை, அவன் புறஜாதி சபைக்கு அனுப்படும் புறஜாதியாயிருப்பான், பாருங்கள். தேவன் தமக்கு சொந்தமானவர்களிடமே எப்பொழுதும் அனுப்புகிறார் பாருங்கள் “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.'' அவர் எப்பொழுதும் அந்நேரத்தின் செய்தியையே அனுப்புகிறார் தேவன் யூதர்களுடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எந்த புறஜாதி தீர்க்கதரிசியும் அப்பொழுது தோன்றவில்லை. அவ்வாறே தேவன் புறஜாதிகளுடன் தொடர்பு கொள்ளும்போது, யூத தீர்க்கதரிசிகள் வருவதில்லை. தேவன் மறுபடியுமாக யூதர்களிடம் திரும்பும்போது, புறஜாதி தீர்க்கதரிசிகள் இருக்கமாட்டார்கள். பாருங்கள்? நான் கூறுவது புரிகின்றதா? சரி. எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழ்ந்த பின்பு..... ஆம். ஒன்றிலிருந்த மற்றொன்றிற்கு மாறுவதற்கு முன்பாக ஒரு இடை சமயம் உண்டாயிருக்கும் - ஒரு செய்தியிலிருந்து வேறொரு செய்திக்கு போவதற்கு முன்பு நான் உங்ளுக்கு ஏற்கனவே விவரித்துக் கூறினவிதமாக! பவுல் புறஜாதிகளிடம் சென்றது போன்று. சரி 161எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழ்ந்த பின்பு, எடுத்துக்கொள்ளப்படுதலில் பங்கு கொள்ளாத சபை ஏதாவது முடிவில் இரட்சிக்கப்படுமா? இல்லை, ஊஹும், ஏனெனில் இரத்தம் போய்விட்டது. பாருங்கள். அப்பொழுது பரிந்து பேசுதல் இராது - புறஜாதியாரின் காலம் முடிவடைந்து விட்டது, எடுத்துக்கொள்ளப்படுதல் நிகழ்ந்த பின்பு, எந்த ஒரு சபையும் இரட்சிப்படைய முடியாது. ஊஹும் சபை... 'அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.'' பாருங்கள்? சபை எடுக்கப்பட்ட பின்னர் அப்படியொன்றும் நிகழாது. 162சகோதரன் பிரான்ஹாமே, முதலாம் முத்திரையின் பிரசங்கத்தில் தானியேலின் எழுபது வாரங்களைக் குறித்து நீங்கள் குறிப்பிடுவதை நான் கவனித்தேன். தானியேலைக் குறித்த ஒலிநாடாவில், சுவிசேஷம் யூதர்களிடம் திரும்பும்போது, எழுபது வாரங்கள் தொடங்கும் என்பதாக அறிகிறேன். யூதர்களுக்கு ஒரு வாரம்- ஏழு வருடங்கள் விடப்பட்டுள்ளதா? அல்லது வாரத்தின் பாதி மாத்திரமே - மூன்றரை ஆண்டுகள் - விடப்பட்டுள்ளதா? 163சகோதரன் பிரான்ஹாமே, வியாதியஸ்தர்களுக்காக இவ்வாரம் நீங்கள் ஜெபம் செய்யாததால், நீங்கள்..... அது ஒரு வேண்டுகோள். 164சகோதரன் பிரான்ஹாமே, ஆராதனைக்குப் பிறகு என்னைச் சற்று காண்பீர்களா? அது ஒரு வேண்டுகோள். 165சாத்தான் ஆயிர வருஷம் கட்டப்பட்டு, வெளிப்படுத்தல் 20:8ல் கூறப்பட்டுள்ள யுத்தத்திற்காக அவிழ்த்து விடப்படுவதைக் குறித்து தயவுசெய்து விவரிக்கவும். இதற்கும் நான்காம் முத்திரையில் கூறப்பட்டுள்ள அர்மெகதோன் யுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்? புதிய பூமியிலுள்ள மனிதர்களிலிருந்து கோகும் மாகோகும் சேர்க்கப்படுவார்களா? நல்லது, இது நீண்ட ஒன்றாகும். நான் அதை ஆணித்தரமாகக் கூறவேண்டும். ஒருக்கால் என்னால் சரிவர இதை விவரிக்கக்கூடாமல் இருக்கலாம். என்னால் இயன்றவரை விவரிக்கிறேன். சாத்தான் ஆயிர வருஷம் கட்டப்பட்டு, வெளிப்படுத்தல் 20:8ல் கூறப்பட்டுள்ள யுத்தத்திற்கு அவிழ்த்து விடப்படுவதைக் குறித்து தயவு செய்து விவரிக்கவும். 166அது அர்மெகதோன் யுத்தம் அல்ல. அந்த யுத்தம் இந்தப் பக்கத்தில் நடக்கிறது (அதாவது ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு என்று குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்) - உபத்திரவ காலம் முடிவடைந்தவுடன். கோகு மாகோகு யுத்தத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை. ஒன்று ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு, மற்றொன்று ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பின்பு. நான்காம் முத்திரையில் கூறப்பட்டுள்ளபடி, புதிய பூமியில் வாழும் மக்களினின்று கோகும் மாகோகும் சேர்க்கப்படுவார்களா? சாத்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பொல்லாதவர் அனைவரையும் ஒன்று கூட்டி இந்த இடத்திற்கு அழைத்து வர புறப்பட்டுச் செல்கிறான், தேவன் அப்பொழுது வானத்திலிருந்து அக்கினியையும் கல் மழையையும் வருஷிக்கச் செய்கின்றார்: அவர்கள் எரிந்து போயினர் ஆக மொத்தம் இரண்டு யுத்தங்கள். கேள்வி: 167ரோமன் கத்தோலிக்க சபையினரால் கொல்லப்பட்ட ஆறு கோடியே எண்பது இலட்சம் பேர், சரித்திரத்தில் எந்த சமயத்தில் கொல்லப் பட்டனர்? அது எவ்வளவு காலம் நீடித்தது? ஸ்மக்கர் என்பவர் எழுதியுள்ள 'மகிமையான சீர்திருத்தம்'' என்னும் புத்தகத்தை வாசியுங்கள். சில கல்விமான்கள் அதை வைத்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன். அது சபையின் சரித்திரமாகும். அது எந்தப் பக்கத்திலுள்ளது என எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அது ஆப்பிரிக்காவிலுள்ள ஹிப்போ நாட்டவரான பரி. அகஸ்டின் என்பவரால் தொடங்கப்பட்டு சபைக்கு அளிக்கப்பட்டது. அது கி.பி. 354ல் தொடங்கி கி.பி 1850 வரை, அயர்லாந்தில் நேர்ந்த படுகொலை வரை நீடித்தது. அது அதனுடைய காலம் கி.பி.33 அல்லது கி.பி.30... 354. இப்பொழுது நான் அதைச் சரியாகக் கூறட்டும். கி.பி.3-5-4லிருந்து கி.பி.1-8-5-0, 1850 வரை. ரோமாபுரியுடன் போப்பாண்டவருடன் இணங்காத காரணத்திற்காக ஆறு கோடியே எண்பது இலட்சம் பிராடெஸ்டுண்டுகள் கொல்லப்பட்டனர் என்று ரோமரால் 'இரத்தச் சாட்சிகளின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இது சரித்திரமாகும். அது தவறென்று நீங்கள் கூறமுற்பட்டால், நீங்கள் ஜார்ஜ் வாஷிங்டன் அல்லது லிங்கன் என்பவர்கள் இல்லவே இல்லை என்றும்கூட கூறலாம். ஏனெனில் அதைக் காண நாம் அப்பொழுது பிறக்கவில்லை. அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தனர் என்று நம்புகிறேன். அவர்கள் இருந்தார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. 168சகோதரன் பிரான்ஹாமே, 1 இராஜாக்கள் 19:18ம் வசனத்தில் “ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம் பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்” என்று எழுதப்பட்டுள்ளதே! அந்த எழுநூற்றைக் குறித்து தயவுசெய்து விவரிக்கவும். அது ஏழாயிரம்தான், பாருங்கள். அவர்கள் “பாகாலை முத்தம்'' செய்வதில்லை. இங்குள்ள உங்களில் எத்தனை பேர் முன்பு கத்தோலிக்கராயிருந்தீர்கள்? நிச்சயமாக. பாருங்கள்? நீங்கள் சிலைகளை முத்தம் செய்திருப்பீர்கள்? பாருங்கள்? 169பாபிலோன், நேபுகாத்நேச்சார் காலத்தில், புறஜாதி ராஜ்யம் உண்டாயிருந்தபோது, ஒரு மனிதனை வழிபடும் வழக்கம் இருந்து வந்தது. நேபுகாத்நேச்சார் ஒரு மனிதனின் சொரூபத்தை உண்டாக்கினான். உங்களுக்கு ஆவிக்குரிய சிந்தை இருக்குமானால்... இந்த வெளிப்பாட்டை கவனமாய்க் கேளுங்கள். அவன் தனக்குக் கிடைத்த வெளிப்பாட்டின்படி தானியேலின் சொரூபத்தை உண்டு பண்ணினான். பக்தியுள்ள ஒரு மனிதனை வழிபடுதல். பார்த்தீர்களா? ஏனெனில் தானியேலுக்கு அவன் பெல்தெஷாத்சார் என்று பெயர் சூட்டினான் அல்லவா? அதுவே அவனுடைய தெய்வத்தின் நாமமாயிருந்தது. அந்த தெய்வத்துக்கு அவன் சொரூபத்தை உண்டு பண்ணினான்-அதுவே தானியேலின் சொரூபமாகும். தானியேல் தன் சொந்த சொரூபத்துக்கு முன்பாக வணங்க மறுத்தான். பாருங்கள்? பாருங்கள்? அதே வழக்கம் மறுபடியும் நம்மிடையே உள்ளது. இப்பொழுது கவனியுங்கள். நேபுகாத்நேச்சார் என்னும் அரசனின் மூலமாய் பாபிலோனின் நாட்களின் புறஜாதி ராஜ்யம் தோன்றினது. இந்த அரசன் பரிசுத்தமுள்ள மனிதன் ஒருவனின் சிலையை உண்டு பண்ணி, ஜனங்களெல்லாரும் அதை வணங்கவேண்டுமென்று நிர்ப்பந்தம் செய்து, சபையையும் அரசாங்கத்தையும் ஒருங்கே இணைத்தான். புறஜாதி ராஜ்யம் சொரூபத்தின் பாதங்களில் முடிவடைகிறது. கையெழுத்து சுவரில் தோன்றினது. அப்பொழுது அரசியல் ஆதிக்கம் சபையையும் அரசாங்கத்தையும் ஒன்றுபடுத்தி சிலைகளை முத்தம் செய்ய நிர்ப்பந்தம் செய்தது - பரிசுத்த மனிதனின் சிலை, உண்மையாக. 170சகோதரன் பிரான்ஹாமே, எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும்போது, சரியானவைகளுக்கும் தவறானவைகளுக்கும் வித்தியாசம் அறியாத இச்சிறு பிள்ளைகள் அதில் செல்வார்களா? அவர்களுடைய பெயர்கள் புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தால், அதுசரி. பாருங்கள்? சரி. 171சகோதரன் பிரான்ஹாமே, எலியாவின் பிரசங்கத்தின் மூலம் எழுநூறு பேர் இரட்சிக்கப்பட்டனர் என்று சென்ற இரவு கூறினீர்கள். நீங்கள் அர்த்தம் கொண்டது ஏழாயிரம் பேர் அல்லவா? ஆம், அது சரி. அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். அது சரி. நான் அவ்விதம் கூறினேன். சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் வியாக்கியானம்... நீங்கள் திறந்த பிறகு... சகோதரன் பிரான்ஹாம் காலம்... மன்னிக்கவும், “காலமானது...'' இப்பொழுது இது உங்களுக்கல்ல. இது எனக்கு, பாருங்கள். 172சகோதரன் பிரான்ஹாமே நீங்கள் ஏழாவது முத்திரையைத் திறந்த பிறகு, கிருபையின் காலம் முடிவு பெறுமா? இல்லையென்று நம்புகிறேன். இல்லை, இல்லை. நண்பர்களே, அவ்விதக் கருத்தை உங்கள் சிந்தையில் கொள்ளவேண்டாம். பாருங்கள்? நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். உருளைக் கிழங்கு தோண்டுங்கள். சபைக்குச் செல்லுங்கள். இவ்விதம் தொடர்ந்து சென்றுக் கொண்டிருங்கள். அது இன்று காலை சம்பவிக்குமானால் நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிருப்பவர்களாக காணப்பட வேண்டும். ஆரம்பிக்க வேண்டாம்... அவ்விதம் நீங்கள் வியாக்கியானம் செய்தால், அது எதற்கென்று குறிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை அவமாக்குபவர்களாவீர்கள். அதைப்பற்றிச் சில விசித்திரமான உங்கள் சொந்த கருத்துக்களை உண்டாக்கிக் கொள்ளவேண்டாம். நீங்கள் அமர்ந்திருந்து அத்தகைய காரியங்களைக் கேட்கும்போது, ''நன்றி, கர்த்தாவே, நான் இன்னும் சற்று அருகாமையில் உம்முடன் நடக்கப் போகிறேன்“ என்று கூறுங்கள். பாருங்கள்? நீங்கள் செய்யும் வேலையிலிருந்து நின்று விட்டு, ''நான் எல்லாவற்றையும் விற்றுவிடப் போகின்றேன்” என்று கூற வேண்டாம். நாங்கள் இங்கிருந்து செல்வதற்குச் சற்று முன்பாக, ஒருநாள் வடக்கு கரோலினாவிலிருந்து ஒரு மனிதன் என்னிடம் ஓடோடி வந்து, “தேவனுக்கு மகிமை! அந்த மகத்தான இன்னார் எங்கிருக்கிறார் என்று தெரியுமா?'' என்று வினவினார். நான் ”எனக்குத் தெரியாது,'' என்று விடையளித்தேன். 173“ஓ, ஆம் ஐயா. அவர் ஆடியோ மிஷன் (Audio mission) நிர்வாகத்தின் தலைவர்'' என்றார் அவர். நான், “எது?'' என்று கேட்டேன். அவர், ”ஆடியோ மிஷன்“ என்றார். நான் ”எனக்குப் புரியவில்லை'' என்றேன். அவரோ, “ஓ, இந்த மனிதர் அதற்குத் தலைவர்'' என்றார். நான் “அவருடைய பெயர் என்னவென்று சொன்னீர்கள்?'' என்று கேட்டேன். அவர், ''ப்ரெளன் (Brown) அல்லது பிரான்ஹாம் (Branham) என்று நம்புகிறேன்'' என்றார். “என்னுடைய பெயர்தான் பிரான்ஹாம்'' என்று பதிலளித்தேன். ''நீங்கள் ஆடியோ மிஷனின் தலைவரா'' என்று அவர் கேட்டார். நான், 'இல்லை, ஐயா'' என்றேன். அவர், 'இப்பொழுது ஆயிரம் வருட அரசாட்சி எங்குள்ளது?'' என்று வினவினார். நான், 'எனக்குத் தெரியாது' என்று விடையளித்தேன். அவர், “அது இப்பொழுது இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதை அறியாமலிருக்கிறீர்கள்' என்றார். நான், ''இல்லை, ஐயா எனக்குத் தெரியாது'' என்று கூறினேன். அவர், “தேவனுக்கு மகிமை, சில நண்பர்கள் என்னிடம் வந்து அதைக் குறித்துக் கேட்டனர். நான் வேலையை விட்டுவிட்டேன்.'' அவர் இன்னும் வேலை உடையை அணிந்திருந்தார். ''சகோதரனே, எனக்கு ஆயிரம்வருட அரசாட்சி தேவை'' என்றார். நான், ''நீங்கள் சற்று குழப்படைந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படித்தானே, சகோதரனே?'' என்று கேட்டேன். அந்தச் சமயத்தில் ஒரு வாடகை கார் வந்தது. அதனுள் அமர்ந்திருந்த பெண்மணி. ''நிறுத்து, நிறுத்து நிறுத்து“ என்று ஓட்டுநரிடம் கூறினாள், ஒரு சிறு பெண்மணி காரை விட்டு வெளியே வந்து என்னிடம், ”நீங்கள் என் கணவருக்காக இப்பொழுது ஜெபிக்க வேண்டும்'' என்றாள். நான், “சரி அம்மா, அவருக்கென்ன?'' என்றேன். அவள், ''நல்லது உங்களைப் பேட்டி கண்டு ஜெபம் செய்து கொள்ள வேண்டுமானால், ஒரு மாத காலம் செல்லும் என்று கேள்விப் பட்டேனே?'' என்றாள். நான், “என்ன?” என்று கேட்டேன். அவள், “ஆம், ஐயா நான் பதட்ட நிலையிலிருக்கிறேன். நீங்கள் கண்டிப்பாக என் கணவருக்காக ஜெபம் செய்யவேண்டும்” என்றாள். நான், 'நிச்சயமாக. அவர் எங்கிருக்கிறார்? அவரைக் கொண்டு வாருங்கள்“ என்றேன். இந்த மனிதன் அங்கு நின்றுகொண்டு நடந்தவைகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் என்னிடம், “நீங்கள் வியாதியஸ்தருக்காகவும் ஜெபிப்பதுண்டா ?'' என்று கேட்டார். நான், 'ஆம், ஐயா'' என்று பதிலளித்தேன். “உங்கள் பெயர் என்னவென்று கூறினீர்கள், பிரான்ஹாம் அல்லவா? உங்களுக்கு ஆயிரம் வருட அரசாட்சியைக் குறித்து ஒன்றும் தெரியாதா?'' என்று அவர் கேட்டார். நான், ''சரி நான் ... இல்லை, எனக்குத் தெரியவில்லை. வேதத்திலிருந்து அதை என்னால் சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை'' என்றேன். அவரோ, ''அது இங்கே இருக்கின்றது. ஜனங்கள் எல்லாவிடங்களிலுமிருந்து வந்திருக்கின்றனர்“ என்றார். நான், “எந்த இடத்தில் அது இருக்கின்றது?” என்று கேட்டேன். அவர், ''இங்குதான் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லில் அந்த பாலத்தின் கீழ்'' என்று பதிலுரைத்தார். “ஐயா, நீங்கள் என்னை திகைக்க வைத்துவிட்டீர்கள். எனக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியாது. நாம் உள்ளே போய் சற்று அமருவோம். வேண்டுமானால் நாம் இதைக் குறித்து பேசலாம்” என்றேன். நண்பர்களே, நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் ஒருக் காலும் ஒரு ஊழியத்திற்காக ஆசைப்படவேண்டாம். பாருங்கள்? நான் கூறுவது உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் இருக்கும் இடத்திலேயே மிகவும் மகிழச்சியுள்ளவர்களாயிருப்பீர்கள். பாருங்கள்? நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். 174மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்டபிறகு, உபத்திரவத்தின் வழியாக போக வேண்டியுள்ள சபையானது எப்போது நியாத்தீர்ப்பு பெறுகிறது? (அது நியாயத்தீர்ப்புக்கு வருவதில்லை). அது ஆயிர வருஷ அரசாட்சிக்கு முன்பா அல்லது அதற்குப் பிறகா? ''சபைக்கு.'' ஓ, என்னை மன்னியுங்கள் யார் இதை எழுதினீர்களோ, அவர்கள் என்னை மன்னிக்கவும். ''சபையானது எப்போது...'' மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, உபத்திரவத்தின் வழியாக போக வேண்டியுள்ள சபையானது எப்போது நியாயத்தீர்ப்பு பெறுகிறது? அது ஆயிர வருஷ அரசாட்சிக்குப் பிறகா அல்லது அதற்கு முன்பா? பிறகு. மணவாட்டியோடு செல்லாதவர்கள், ''மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.'' நாம் பார்ப்போம். 175கம்யூனிஸம் (பொது உடைமைக் கொள்கையானது) நேபுகாத்நேச்சார் இராஜாவைப் போல, தேவனால் தம்முடைய நோக்கம் நிறைவேறத்தக்கதாக எழுப்பப்பட்டதென்று நீங்கள் அநேக முறை சொல்லியிருக்கிறீர்கள். கடைசியில் உண்டாகப்போகும் உலக நிலையில் கம்யூனிஸம் எந்த ஸ்தானத்தில் பொருந்தும்? அது எவ்விதம் முடிவடைகிறது? வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வட திசை இராஜ்ஜியங்களாகிய கோகும் மாகோகும் இஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தம் பண்ணப் போகும் என்று அநேக கல்விமான்கள் நம்புகிறார்கள். (அது என்ன வென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ஆம், ஆம்). கம்யூனிஸம் கடைசியில் கத்தோலிக்க ஸ்தாபனத்தை அல்லது வாடிகனை (ரோமாபுரியில் போப் வசிக்கும் அரண்மனையை, ஆட்சி முறையை - தமிழாக்கியோன்) வெடியினால் அழிக்கும் என சில ஒலிநாடாக்களில் நீங்கள் கூறியிருக்கிறீர்களென நம்புகிறேன். இது சரியா? ஆம். வெளிப்படுத்தின விசேஷம் 16, 18:8லும் 12-ம் அதிகாரத்திலும் நீங்கள் இதைக் காணலாம். இதை எழுதினவர் இங்கிருப்பாரானால், இங்கு அதைக் குறித்து உள்ள காகிதக் துண்டை எடுத்துக் கொள்ள விரும்புவாரானால்- நீங்கள் அதைக் காணலாம். ஆம் பாருங்கள்? ''ஆம்... ஐயையோ! மகா நகரமே... ஒரே நாழிகையிலே இவள் பாழாய்ப் போனாளே.'' பூமியின் வர்த்தகர்களும் மற்றவர்களும் அவளுக்கு சரக்குளை கொண்டு வந்திருந்தனர். அது அப்படியிருக்கும். அது சரி. கம்யூனிஸத்தைக் குறித்து மறந்துவிடுங்கள். பாருங்கள்? அது தேவனைப் பற்றிய எண்ணமில்லாத காட்டுமிரண்டித்தனமான ஒரு கூட்டமேயன்றி, உலகத்தில் வேறொன்றுமல்ல. அது ஒரு அமைப்பாகும்... அது எவ்வளவு சுலபம் என்பதைக் காட்ட, நான் உங்களுக்கு சிலதைக் காட்டட்டும். ஏன், முழு ரஷ்யாவிலுமே நூற்றில் ஒரு பங்கு மக்களே இந்த கம்யூனிஸத்தை (பொது உடைமைக் கொள்கையை) ஆதரிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு செய்தியாளன் தேவைப்படுகிறது. பாருங்கள்? ஒரே ஒரு சதவிகிதம்-அப்படியானால் இன்னமும் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் மக்கள் கிறிஸ்தவர்கள் பக்கம். ஒரே ஒரு சதவிகிதம்; ஒரு சதவிகிதம் ஜனங்கள் எவ்விதம் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் மக்களைக் கட்டுப்படுத்தக் கூடும்? இதுவே உங்களுக்குக் காரியத்தை விளங்க வைக்க வேண்டும். தேவன் அதை அனுமதிக்க வில்லையென்றால், அவர்கள் அநேக வருடங்களுக்கு முன்பாகவே அக்கொள்கையை வெளியே தூக்கி எறிந்திருப்பார்கள். பாருங்கள்? நிச்சயமாக. 176சகோதரன் பிரான்ஹாமே, கடைசி மூன்றரை வருடங்களில் ரோமாபுரியானது யூதர்களின் அரசாங்கத்தை எடுத்துக்கொள்ளும் என்று கூறினீர்கள். அது... உபத்திரவ காலத்தின் முதல் மூன்றரை வருடங்களா அல்லது கடைசி மூன்றரை வருடங்களா? இது சரியா? அது கடைசி மூன்றரை வருடங்களே, அது சரிதான், முதல் மூன்றவரை வருடங்களல்ல, ஏனென்றால் அது ஏற்கனவே கடந்து விட்டது. (இதற்குப் பிறகு இன்னொரு கேள்வியையும் பெற்றுள்ளேன்). 177எனது அருமை சகோதரனே, 1 இராஜாக்கள் 17 அதிகாரத்தில் எலியா தீர்க்கதரிசி செய்ததாகச் சொல்லப்பட்டிருப்பது போல மல்கியா 4:5ல் குறிப்பிடப்பட்டிருக்கும் எலியா தீர்க்கதரிசியும் வனாந்திரத்திற்குச் செல்வாரா? நல்லது, அவர் வனாந்திரத்திற்குப் போவார் என்று திட்டவட்டமாக கூறமாட்டேன். ஆனால் அவர் இவ்விதமாய் இருப்பார். பாருங்கள். அவர்... எலியாவும் எலிசாவுமாக இருந்தார். நீங்கள் கவனித்தீர்களா? அதைப் போன்ற மனிதர்கள் பெரும்பாலும் ஒதுங்கியே இருக்கிறார்கள் அவர்கள் மனிதர்களிடமிருந்து தள்ளியே ஜீவிக்கிறார்கள். அவர்களோ விநோதமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஜனங்களோடு அதிகம் கலவாதிருக்கிறார்கள். எலிசாவும், எலியாவும், யோவான் ஸ்நானனும் எப்படியிருந்தார்களென்றும் அவர்களிலிருந்த ஆவியின் தன்மையையும் கவனித்தீர்களா? அந்த மனிதன் வனாந்தரத்தை விரும்புகிறவனாக இருப்பான் என நம்புகிறேன். அவன் ஒருவேளை வனாந்தரத்தில் தங்குகிறவனாயிருக்கக்கூடும். அவன் ஒரு துறவியாக வனாந்திரத்திலேயே வாழ்பவனாக இருப்பானோ என்பதைக் குறித்து எனக்குத் தெரியாது. சில சமயங்களில் அவர்கள் அவ்விதம் வாழ்ந்தனர். எலிசா அவ்விதம் வாழவில்லை. ஆனால் எலியாவோ அவ்விதம் வாழ்ந்தான். பிறகு யோவானும்கூட வனாந்திரத்திலே வாழ்ந்தான். 178இந்த மற்ற தீர்க்கதரிசிகள் யூதேயாவிலிருந்து வரும்போது அவர்கள் எங்கே தங்குவார்கள் என்பது தெரியவில்லை. அதைச் சொல்வது கடினமான காரியம். அவர்கள் எங்காவது குன்றுகளில் தற்காலிகமாக தங்கக்கூடும். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைக்கின்ற அந்த நாட்களில் என்ன செய்வார்களென்று தெரியவில்லை. நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன் என்றால், இதுதான் இருக்குமா... ''அவர்கள் வனாந்தரத்திலே வசிப்பவர்களாக இருப்பார்களா?'' என்று கேட்கப் பார்க்கிறார்கள். நல்லது, எங்காவது போதுமான காடுகளுள்ள வனாந்தரத்தை வசிப்பதற்கென்று தேடுவார்களென்றால், அவர்கள் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவிற்குத்தான் போகவேண்டும். பார்த்தீர்களா? ஆகவே அது யாராவது... வனாந்தரங்களெல்லாம் அழிக்கப் பட்டுவிட்டன. பாருங்கள்? அதிகமான காடு விடப்படவில்லை. ஆகவே ஒரே காரியம், அவர்கள் வனாந்தரத்தை விரும்புகிறவர்களாகவும் ஒருவேளை அதிகமாக வனாந்தரத்தில் தங்குகிறவர்களாகவும் இருக்கக்கூடும். மேலும் அவர்கள்... அவர்களுடைய இயற்கைக் குணத்தைக் கவனிப்பீர்களானால், அவர்கள் விட்டுக் கொடுக்காதவர்களாக இருப்பார்கள். அது வரும்போது நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள். பாருங்கள்? நீங்கள் விழித்திருப்பீர்களானால் நீங்கள் அதைக் காண்பீர்கள். 179இப்பொழுது, இங்கே ஒரு கேள்வியிருக்கிறது. அதை எப்படி அணுகுவதென்று தெரியவில்லை. இன்னும் ஒரு கேள்வி என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்பிறகு ஒலி நாடாவை (ஒலிப்பதிவு செய்வதை) நிறுத்தச் சொல்லப் போகிறேன். தேவன் ஒரே ஆள் தத்துவம் உள்ளவராயிருந்தால், மறுரூபமலையில் அவர் ஏன், எப்படி தம்மிடமே பேச முடியும்? நல்லது, நான் இப்போதுதான் அதை விவரித்தேன். பாருங்கள்? நான் உங்களிடம் இதைக் கேட்க விரும்புகிறேன். நான்... இயேசுவானவர் பிதாவிடம் ஜெபித்தபோது, பார்த்தீர்களா... (சபையிலுள்ள ஒரு சகோதரனுடன் சகோதரன் பிரான்ஹாம் பேச ஆரம்பிக்கிறார் - ஆசி) நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இல்லையா, சகோதரனே? நீங்கள் ஒரு நிமிடம் எழுந்து நிற்கமாட்டீர்களா? நீங்கள் பரிசுத்த ஆவியின் ஆபிஷேகத்தை பெற்றிருப்பதாக உரிமை கொண்டாடுகிறீர்களா? (அந்த சகோதரன் 'ஆம் ஐயா'' என்று கூறுகிறார் - ஆசி) நானும் அப்படித்தான். அப்படியானால் அது என்ன? இந்த இரகசியங்களை வெளியாக்க என்னில் தானே வல்லமையை உடையவனாக இருப்பதாக நான் உரிமை கொண்டாடவில்லை. பிணியாளியை சுகமாக்கும் வல்லமை என்னிலே இல்லை. அது தேவன். (சகோதரன் பிரான்ஹாம் சபையிலுள்ள அந்த சகோதரனிடம் தொடர்ந்து பேசுகிறார் -ஆசி) நீங்கள் ஒரு ஊழியக்காரர் என்று நம்புகிறேன். நான் தவறாகக் கூறாவிட்டால், நீங்கள் ஆர்கன்ஸாஸிலிருந்து வருகிறீர்கள். நல்லது இப்பொழுது, சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமென்னும் வாஞ்சை உங்களிலுள்ளது. சாதாரணமாக, நீங்கள் ஒரு பண்ணையிலும் அதைச் சுற்றியுள்ள இடத்திலும் வளர்க்கப்பட்டீர்கள். உங்களுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டுமென்று ஏதோ ஒன்று உங்க ளுக்குள் வந்தது. அது நீங்கள் ஆவியானவர் என்று அழைக்கப்படும் இன்னொருவர், அது சரியா? (ஆம், ஐயா) சரி. 180(சகோதரன் பிரான்ஹாம் சபையிலுள்ள அந்த சகோதரனிடம் தொடர்ந்து பேசுகிறார் - ஆசி). இப்போது உங்களைக் கேட்க விரும்புகிறேன். அந்த பரிசுத்த ஆவியானவர் உங்ளுக்குள்ளே வாசம் பண்ணுகிறார். அது சரிதானா? (அந்த சகோதரன், “அது சரி'' என்கிறார்) நீங்கள் அவருடன் பேசுகிறீர்களா? (”ஆம், ஐயா') சம்பாஷிக்கிறீர்களா? அவரிடம் ஜெபிக்கிறீர்களா? நல்லது அவ்வளவுதான் நான் விரும்பியது..... உங்களுக்கு மிக்க நன்றி, பாருங்கள்? இப்போது அதைப் புரிந்துகொண்டீர்களா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி) உங்களை ஒன்று கேட்பேன்: ''பரலோகத்திலிருந்து இறங்கினவரும், பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனெயல்லாமல்'' என்று யோவான் 3-ம் அதிகாரத்தில் இயேசு எவ்வாறு கூறினார்.... (பாருங்கள்?) பரலோகத்தில் இருக்கிறார். இப்பொழுது பூமிக்கு வருவார்' பாருங்கள்? இப்பொழுது பரலோகத்தில் இருக்கிறவரான மனுஷகுமாரன்' என்று அவர் கூறியபோது இங்கே அந்த நபருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். இப்போது, நீங்கள் அதற்கு எனக்கு பதில் சொல்லுங்கள். இயேசுவும், பிதாவும் ஒரே நபர்தான். பரிசுத்த ஆவியானவர் என்னிலும் இருக்கும் விதமாகவே இயேசுவும் பிதாவானவரும் ஒரே ஆளாயிருந்தார். நான் பிரசங்கிப்பதை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது நானல்ல, ஒரு வார்த்தையைப் பேசி... உங்களுக்குத் தெரியும். ஒரு மிருகத்தை வரவழைக்கக் கூடியது நானல்ல; அங்கே உட்கார்ந்துக் கொண்டு அதைப் பார்த்து அம்மிருகத்தைக் கொன்று அதைப் புசிப்பது; அது சிருஷ்டிக்கும் வல்லமை; அது மனிதர்களிலே கிடையாது. 181மருத்துவர்களால் தன் முதுகின் மீது கிடத்தப்பட்டு இன்றிரவு இருதயக் கோளாறுடன் இருக்கும் ஒரு சிறு பையனை எடுத்துக்கொண்டு, 'வில்லியம் பிரான்ஹாம் உரைப்பதாவது' என்று என்னால் கூற இயலாது. இல்லை! 'கர்த்தர் உரைக்கிறதாவது', அது முடித்துவிட்டது. அவனை மறுநாளில் மருத்துவர்களிடம் அழைத்துக்கொண்டுச் செல்லும்போது வியாதி முற்றிலுமாய்ப் போய்விட்டிருக்கிறது. இரத்தத்தில் புற்றுநோயுடன் ஒரு சிறு பிள்ளை, கண்களெல்லாம் வீங்கிப் பெருத்துவிட்டிருந்தது. உடலெல்லாம் மஞ்சளாகி விட்டிருந்தது. வயிறும் கூட....அந்தப் பிள்ளையை இங்கு கொண்டு வருவதற்கும்கூட அதை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று இரத்தம் கொடுப்பது முதலிய காரியங்களைச் செய்யவேண்டியிருந்தது! ஐந்து நிமிடம் கழித்து, சாப்பிடத் தனக்கு ஒரு ஹாம்பார் (ஒருவகைத் திண்பண்டம்-தமிழாக்கியோன்) வேண்டுமென அது அழுதது. அடுத்த நாள் அப்பிள்ளையை மருத்துவரிடம் கொண்டு சென்றபோது அதன் அடையாளம்கூட காணப் படவில்லை. அது வில்லியம் பிரான்ஹாம் உரைப்பதாவது' என்பதா? அது 'கர்த்தர் உரைப்பதாவது' என்பதாகும்! ஆனாலும் அவர் என்னிடத்திலும் வித்தியாசப்பட்ட ஒரு தனி நபராயிருக்கிறார். ஆயினும் அவர் தெரிவிக்கப்படும் ஒரேவழி என் மூலமாகும் ஓ. பாருங்கள்? அவ்வண்ணமாகவே இயேசுவும் பிதாவும்; 'கிரியைகளை நடப்பிக்கிறது நானல்ல, என்னில் வாசம் பண்ணும் பிதாவே இவைகளைச் செய்கிறார்“ என்று இயேசு கூறினார். இப்போது, ''பரலோகத்திலிருந்திறங்கினவரும், பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.'' பாருங்கள்? அது என்ன? அவர் சர்வவியாபியாயிருந்தார். ஏனென்றால் அவர் தேவனாயிருந்தார். 182இப்போது, இந்த மற்றொரு கேள்வி, நான்... (சகோதரன் பிரான்ஹாம் தன் விரலை ஒருமுறை சொடுக்குகிறார் -ஆசி) நான் இந்த வார்த்தைகளைக் கூறிட விரும்புகிறேன். நீங்கள் பேசிக்கொண்டிருந்ததைப்பற்றி விளக்கிக் கூறுங்கள்... (ஒலி நாடாவில் காலியிடம். சபையில் ஒரு சகோதரன் அந்நிய பாஷையில் பேசுகிறார்.) நன்றி பிதாவாகிய தேவனே- தேவரீர் ஆவியானவராக இங்கிருப்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பிதாவே, ஒரு சமயம் சத்துருவானவன் வந்து கொண்டிருந்தபோது ஆவியானவர் ஒரு மனி தன் மீது வந்திறங்கி அவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்துக் கூறினார் என்று எங்களுக்கு உரைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள் எவ்விதம் சென்று எதிரியை முறியடிப்பதென்றும், எதிரியை எங்கே கண்டுபிடிப்பதென்றும் அறிந்து கொண்டபடியினால் அது காரியங்களை ஒழுங்குபடுத்திற்று. 183பிதாவே, தேவரீர் எப்போதும் போலவே தேவனாகவே இருந்து வருவதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். தேவரீர் இன்னும் அதேவிதமாகவேயிருக்கிறீர். நாங்கள் மாறிப் போகிறோம், யுகங்கள் மாறுகின்றன. காலங்களும் மாறுகின்றன. ஜனங்களும் மாறுகிறார்கள். ஆனால் தேவரீர் ஒரு போதும் மாறுவதிலை. உம்முடைய முறைமைகள் மாறாதவைகளாயிருக்கின்றன. உம்முடைய கிருபையும் மாறாததாயிருக்கின்றது: உம்முடைய கிரியைகளும் மாறாதவைகளாயிருக்கின்றன. ஏனெனில் அவை அற்புதமானவைகளும், மனிதன் புரிந்துகொள்ளக் கூடாதபடி அவனுடைய எத்தகையை அறிவுக்கும் அப்பாற்பட்டவைகளுமாயிருக்கின்றன. ஆகவே, கர்த்தாவே, உம்முடைய இரகசியங்கள் உம்முடைய ஊழியக்காரர்களின் இருதயங்களில் மறைக்கப்பட்டிருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். அதற்காக, கர்த்தாவே, நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறோம். உமக்குரிய ஒவ்வொரு மீனையும் பிடிக்கும் நிச்சயத்துடன் ஒவ்வொருவரையும் கொண்டு வரத்தக்கதாக அன்புடன் பிரயாசப்படவும் நாங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பிரகாசிக்கும் விளக்குகளாகச் செல்லட்டும். தம்முடைய மணவாட்டியை ஆட்டுக்குட்டியானவர் எப்போதும் தம் பக்கத்திலிருக்கத்தக்கதாக, கொண்டு செல்வார். அந்த நேரத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலம். ஆமென். 184எத்தனைபேர் வியாதியுள்ளவர்களாய் இங்கு உள்ளே இருக்கிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள் பார்ப்போம்? நல்லது, ஏறக் குறைய... உங்கள் கரங்களை மறுபடியும் உயர்த்துங்கள்.- ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரெண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது... (உயர்த்தப்பட்டுள்ள கரங்களை, சகோதரன் பிரான்ஹாமும் இன்னொரு வரும் தொடர்ந்து அமைதியாக எண்ணுகிறார்கள் - ஆசி) ஏறக்குறைய நாற்பத்து ஏழு பேர். சரி. இப்போது மணி 11-30 ஆகிறது. வியாதியஸ்தர்களுக்காக நாம் இப்போது ஜெபிக்கலாம். இரவு... நாம் அப்படிச் செய்வதை நீங்கள் விரும்புகிறீர்களா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் -ஆசி) 185நாம் அவ்விதம் ஜெபிக்க இதுவே நல்ல தருணம் என்ற நம்புகிறேன். ஏனென்று உங்களுக்கு கூறுவேன், பரிசுத்த ஆவியானவர் இங்கே உள்ளே நின்றுகொண்டு, அபிஷேகித்துக் கொண்டிருக்கிறார். இப்போது, நாம் அந்த ஆவியானவருக்குள், ஊடுருவிச் சென்றிருக்கும் வரை, ஏதோ ஒன்று இருப்பதைப் பார்க்கிறீர்கள், அந்த ஏதோ ஒன்றை நீங்கள் அறிவீர்கள். ஏதோ ஒன்று இங்கேயிருக்கிறது. நீங்கள் எப்பொழுதாவது விசுவாசிக்க கூடுமானால் இப்பொழுதுதான் விசுவாசிக்க வேண்டும். பாருங்கள்? நீங்கள் எப்பொழுதாவது விசுவாசிக்கப் போகிறீர்களென்றால், அது இப்பொழுதுதான். இப்பொழுது, நீங்கள் உண்மையிலேயே அமைதியாக வர விரும்புகிறோம். அந்த உட்பாதையில் அங்கேயிருப்பவர்கள், தங்கள் கரங்களை உயர்த்தியவர்கள், இந்தப் பாதைக்குள் வந்து, இந்த வழியாகச் செல்லட்டும், அப்போது நாங்கள் அவர்களை பாதை பாதையாக எடுத்துக் கொள்வோம்-நாற்பத்தைந்து அல்லது நாற்பத்து ஏழு பேர் மட்டுமே. அது அதிக நேரம் பிடிக்காது. என்னுடன் கீழே இறங்கி வரக்கூடுமா என்று சகோதரன் நெவில் அவர்களை கேட்டுக்கொள்ளப் போகிறேன். நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். முதலாவது, நடைபாதைக்குள் வருகிறவர்கள், ஒவ்வொருவரும் நாங்கள் உங்கள் மீது கரங்களை வைத்து உங்களுக்காக இங்கே ஜெபிக்கத்தக்கதாக இப்போது ஒரு நிமிடம் எழுந்திருங்கள். இப்பொழுது, அது சரி. அந்த ஜெப வரிசையில் வரப்போகிற ஒவ்வொருவரும் - ஜெப வரிசையில் வரப்போகிறவர்கள். இப்பொழுது, பாருங்கள், நாம் அதை நிச்சயமாய்ப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக நேரத்தை நஷ்டமாக்காமல் பாதுகாத்த வண்ணம், நாங்கள் இப்பொழுது உங்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். 186கவனியுங்கள். நண்பர்களே, இப்பொழுது நான் இதை உங்களுக்கு விவரித்துக் கூறட்டும். இயேசுகிறிஸ்து இதைக் கூறினார் “இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களைப் பின்தொடரும்........” இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் அவர்களுக்காக ஜெபித்தால் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அவர்கள் வியாதியஸ்தர்கள் மீது கைகளை வைத்தால், அவர்கள் சுகமடைவார்கள்' தன்னில் தானே விசுவாசிக்கக் கூடாதவளாய், நிச்சயமாய் இரத்தத்தில் புற்று நோய் உடையவளாய் இருந்த ஒரு சிறு பெண்ணை தேவன் எடுத்து அவளுக்கு பரிபூரண சுகம் கொடுக்கக் கூடுமென்றால்...... அடுத்ததாக அவர் ஒரு சிறு பையனை எடுத்து, அவனுக்கிருந்த கீல்வாத ஜுரத்தை அவனுடைய இரத்தத்திலோ அல்லது வேறு எதிலுமே மருத்துவர்கள் கண்டுபிடிக்கவும் முடியாதபடி அவர் அவனை சுகப்படுத்தக் கூடுமானால்-அவர் உங்களுக்கு என்ன செய்யக்கூடும்? இப்போதும் அந்தச் சிறிய பிள்ளைகள், ஜெபம் என்னவாய் இருக்கும் என்றும் அறியமாட்டார்கள். நான் அவர்கள் மீது கரங்களை மட்டும் வைத்தேன். அது காரியத்தை முடித்துவிட்டது. நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது, நீங்கள் ஜெபிப்பதற்காக நிற்கும்போது. 187பரலோகப் பிதாவே, தேவரீருடைய மகத்துவமான சமூகம் மகத்தான பரிசுத்த ஆவியானவராக இங்கிருக்கும்போது, யாருடைய படத்தை நாங்கள் வைத்திருக்கிறோமோ, யாரைக் குறித்து வேதத்தில் நாங்கள் வாசிக்கிறோமோ அவர் இப்போது இங்கே பிரசன்னமாயிருக்கிறார். அவர் தம்மை மானிட மாம்சத்தின் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அநேக ஆண்டுகளாக அவரை ஒரு முறைகூட தவறாதவராக நாங்கள் கண்டிருக்கிறோம். மானிட இருதயத்தின் எண்ணங்களையும் வெளிப்படுத்த வல்லவராக, அவர்கள் செய்த பாவத்தை வெளிப்படுத்த என்ன நடந்ததென்பதை அப்படியே சரியாக அவர்களுக்குக் கூறி, என்ன நடக்கும் என்பதையும் ஒருமுறைகூட தவறாதபடி கூறியதைக் கண்டிருக்கிறோம். அப்படியானால் ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் என்பவர்களின் தேவன் இன்னும் தேவனாக இயேசு கிறிஸ்துவாகிய நபரில் இருக்கிறார். இப்பொழுதும், அவருடைய ஆவியானவர் கல்வாரியில் சிந்தப்பட்ட இரத்தத்தின்கீழ் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, உலகமானது எரிந்து போகுமுன்னே, மக்கள் மத்தியிலே இறங்கி வந்து தம்மை மானிட மாம்சத்தின் மூலமாக வெளிப்படுத்துகிறார். அந்த மகத்துவமான பரிசுத்த ஆவியானவர் மானிட மாம்சத்தில் பிரதிநிதித்துவம் பெறுவது. இரத்தத்தினால் உண்டாகும் பரிகாரத்தையும், பரிசுத்த ஆவியையும் ஏற்றுக் கொண்ட அருமையான மக்கள் மானிட மாம்சத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுக்கொண்ட தேவனை தங்களுக்குள் பெற்றுக் கொள்கிறார்கள். 188ஆகவே, அது மானிட மாம்சமல்ல, அது அந்த கிரியை நடப்பிக்க மட்டுமே. ஞானஸ்நானம் முதலிய காரியங்களில் நடப்பது போல, “...இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களைப் பின்தொடரும்...” என்ற கட்டளையுடன் வியாதியஸ்தர் மீது கைகளை வைப்பதன் மூலம், அவர்கள் விசுவாசித்தால், அவர்கள் சுகமடையத்தக்கதாக பரிசுத்த ஆவியானவர் பார்த்துக்கொள்வார். இப்பொழுது பிதாவே, இந்தக் காரியங்கள் உண்மையானவை என்பதை நாங்கள் அறிவோம். நின்று கொண்டிருக்கும் இந்த ஜனங்கள்- இந்த பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கும் ஊழியக்காரர்களின் கரங்களின் கீழாக நடந்து போகவும் கர்த்தாவே ஊழியக்காரர்கள் வியாதியஸ்தர் மீது கரங்களை வைக்கவும் ஆயத்தமாயிருக்கின்றனர். பிதாவே, இந்த மக்கள் மட்டும் விசுவாசித்தால், தேவரீர் வாக்குத்தத்தம் பண்ணின ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறுவதுபோல இதுவும் நிறைவேறும் என் அறிந்திருக்கிறோம். பிதாவே... விசுவாசமில்லாமல் இது நடக்க முடியாது. ஏனெனில் விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். எங்களால் அதைச் செய்யவே முடியாது. இப்பொழுதும், விசுவாசத்தோடு நம்பி, எங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் இந்த வாக்குத்தத்தத்தோடு, வேதத்திலுள்ள முத்திரைகள் திறக்கப்பட்டிருப்பது தேவன் தம்முடைய வார்த்தையைக் காப்பாற்றுகிறார் என்பதைக் காட்டுகிறது. கர்த்தாவே அவர்களுடையதைப் போன்று அழிவுக்குரிய ஒரு சரீரத்தில் இருக்கும் எனக்கு வியாதியாயிருக்கும் அந்த அருமையான மக்களைப் பற்றிய உணர்வெல்லாம், கர்த்தாவே எங்களுக்குள் வசிக்கும் அதே பரிசுத்த ஆவியானவர் தாம் அவர்களுக்குள்ளும் வசிக்கிறார் என்பதாகும். நாங்கள் ஒருவருக்காக ஒருவர் மனம் வருந்துகிறோம். புதிய இரத்தத்திலுள்ள புதிய உடன்படிக்கையை அறிந்தவர்களாய்.... பழையதே சுகத்தைத் தருமானால், புதியதாகிய இது எவ்வளவு அதிகமாக மேன்மையானதாக இருக்கும்? பிதாவே, இந்த ஜனங்கள் தவறிப் போய்விடாமல் உம்முடைய ஊழியக்காரர்களின் கரங்களின்கீழ் கடந்து போகும்போது தங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளட்டும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாய், ஆமென். 189இப்போது, நாம்... இந்தப் பக்கத்திலிருப்பவர்கள் வரும்போது இந்தப் பக்கத்திலிருப்பவர்கள் அமர்ந்திருப்பார்கள், பிறகு இவர்கள் திரும்பிப் போவார்கள், மற்றப் பக்கத்திலிருப்பவர்கள்... இப்போது இங்கு நிற்கப் போகிறவர்களாகிய சகோதரர்களில் சிலர்... இங்கிருப்பவர்கள் ஊழியக்காரர்கள் என்று நம்புகிறேன். டாக்டர், சகோதரர் நெட் எங்கேயிருக்கிறார்? நீங்கள் அந்த ஜெப வரிசையில் போகவிருந்தீர்களா? (சகோதரர் நெட் அவர்கள் “ஆம், நான் வெறொவருக்காக வரிசையில் நின்றுகொண்டிருக்கிறேன்'' என்று கூறு கிறார் - ஆசி). சகோதரர் நெட் உங்களுக்காக ஜெபிக்கப்பட்டவுடனே, ஜெபிக்கிறவர்களின் வரிசையில் வந்து சேருங்கள். இப்பொழுது, இந்தப் பக்கத்தில் இங்கேயிருப்பார்கள், ஒருகணம் அமர்ந்திருங்கள். இந்தப் பக்கத்திலிருப்பவர்களை வரவழைக்கிறேன். பிறகு நாங்கள் வந்து நடுப்பாதையிலுள்ளவர்களுக்காக ஜெபித்து அவர்களை இந்தப் பக்கம் அனுப்புவோம். பிறகு இந்த உட்பாதையிலுள்ளவர்களுக்காக ஜெபித்து அவர்களை இந்தப் பக்கமாக அனுப்புவோம். நாம் ஒவ்வொருவருக்காவும் ஜெபிப்போம். நான் சகோதரர் டெட்டி அவர்களை கேட்டுக் கொள்ளப்போகிறேன். அவர் எங்கே? (சகோதரன் டெட்டி அர்னால்ட், ''சரியாக இங்கே,'' என்று கூறுகின்றார் -ஆசி) சரி. 'அந்த மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகாமையில் இருக்கிறார்' என்ற பாட்டை இசைக்கருவியில் நீங்கள் வாசிக்க விரும்புகிறேன். பியானோ வாசிப்பவரும், அவர்கள் எங்கிருந்தாலும், உங்களுக்கு விருப்பமானால், அவருடன் சேர்ந்து வாசியுங்கள், 190கேளுங்கள், அந்தப் பாடல் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது அந்தச் சிறு பையன் மேடைக்கு கொண்டு வரப்பட்ட வேளையை நினைவில் கொள்ளுங்கள். அச்சிறு ஏமிஷ் பெண்பிள்ளை ''மகத்தான வைத்தியர் அருகில் இருக்கிறார்“ என்ற இப்பாடலை இசைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நீண்ட கறுத்த முடியிருந்தது...... அல்லது வெண்மையான முடி. (மென்னோனைட் அல்லது ஏமிஷ் வகுப்பைச் சேர்ந்த பெண் பிள்ளை, ஒருத்தி) தலையைப் பின்னாக வைத்து படுத்திருந்தாள். கைகளை வைத்த மாத்திரத்தில் பரிசுத்த ஆவியானவர் அச்சிறு பையனைத் தொட்டார். அவன் கால்கள் முடமாயிருந்தன. அவன் என் கரங்களிலிருந்து துள்ளிக் குதித்து மேடையில் நெடுக ஓடினான். அவன் தாய் தன் இருக்கையிலிருந்தெழுந்து மயங்கி விழுந்தார்கள்- துவக்கத்தில் அவர்கள் மென்னோனைட் வகுப்பைச் சேர்ந்த ஒரு சகோதரி, என்று நம்புகிறேன். தேவனுடைய ஆவியானவர், அச்சிறு பெண்ணைத் தொட்டார். மென்னோனைட் வகுப்பைச் சேர்ந்த அல்லது ஏமிஷ் வகுப்பைச் சேர்ந்த, ஏதோ ஒரு வகுப்பைச் சேர்ந்தவளாயிருந்த அவளுடைய தகப்பனாரும் மற்றவர்களும் மென்னோனைட் வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலவோ அல்லது மற்ற ஏதோ வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலவோ உடையுடுத்தியிருந்தனர். அவள் பியானோ வாசிப்பதை விட்டு தன் கரங்களை ஆகாயத்தில் விரித்தவளாக குதித்தெழுந்தாள்; அவளுடைய அழகிய முடியானது அவள் முகத்தின்மீது குறுக்காக விழுந்தது. அவள் ஒரு தூதனைப்போல காட்சியளித்தாள். ஆவியில் பாட ஆரம்பித்தாள். அவள் அப்படி எழுந்து கரங்களை உயர்த்தி ஆவியில் பாடினபோது, பியானோவானது தொடர்ந்து. “மகத்தான மருத்துவர் இப்போது அருகில் இருக்கிறார். இரங்குகிற இயேசு'' என்ற அந்தப் பாடலை இசைத்துக் கொண்டேயிருந்தது. 191ஒவ்வொருவரும் அங்கே நின்றுக் கொண்டு, ஆயிரக்கணக்கான பேர்கள், பியனோ கட்டைகள் தானாக மேலும் கீழும் போவதைக் கண்டனர். ''அந்த மகத்தான மருத்துவர் இப்போது அருகில் இருக்கிறார், இரங்குகிற இயேசு...'' என்ற அந்தப் பாடல் இசைக்கப்பட்டது. ஜனங்கள் சக்கரமுள்ள நாற்காலிகளிலிருந்தும், கட்டில்களிலிருந்தும், நோயாளிகளை தூக்கிச் செல்லும் சாதனங்களிருந்தும் எழும்பி நடந்து சென்றார்கள். அதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று காலையிலே இங்கேயே இருக்கிறார், அந்த அறையில் இருந்தது போலவே. இப்போது நம்ப மட்டும் செய்யுங்கள். அந்தப் பாடலை இசையுங்கள், உங்களால் கூடுமானால் “அந்த மகத்தான மருத்துவர்”, இப்பொழுது, ஒவ்வொருவரும் ஜெபிப்போமாக. அவர்கள் அறையின் ஊடே நடந்து செல்லட்டும், இந்தப் பக்கமாக சென்று, உங்களுடைய இருக்கைக்கோ, நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்களோ, அங்கே போகலாம், பின்பக்கம் காலியாகிவிட்டதா? சரி இப்பொழுது உங்களுடைய இருக்கைகளுக்குச் செல்லுங்கள், பிறகு நாம் எழுந்து நிற்போம். 192இப்பொழுது கேளுங்கள், இவர்களுக்காக ஜெபிக்கும்போது நீங்களும் அவர்களுக்காக ஜெபியுங்கள். அப்போது உங்களுக்காக ஜெபிக்கப்படும்போது அவர்கள் உங்களுக்காக ஜெபிப்பார்கள். இப்பொழுது, இங்குள்ள ஊழியக்காரர்களே, எழுந்திருங்கள். அவர்கள் வரும்போது அவர்கள் மீது கரங்களை வைக்க விரும்புகிறேன். இப்பொழுது, ஒவ்வொருவரும் தலைகளை வணங்கி, உங்கள் தலைகளைத் தாழ்த்தியிருங்கள், ஜெபித்துக் கொண்டிருங்கள். நீங்கள் கடந்து செல்லும்போது, அப்பொழுது... உங்கள்மீது கரங்கள் வைக்கப் பட்டிருக்கும்போது, தம்முடைய புஸ்தகத்திலுள்ள இரகசியங்களை வெளிப் படுத்துகிறவரும், மானிட இருதயத்தின் அந்தரங்கங்களையும் வெளிப்படுத்துகிற தேவனின் வாக்குத்தத்தம் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் விசுவாசிப்பீர்களானால் அதை உறுதிப்படுத்துகிற தேவனாக அவர் இருக்கிறார். பாருங்கள்? நாம் எப்பொழுதுமே இப்பொழுது ஜெபத்தில் தரித்திருப்போம். இப்பொழுது, ஊழியக்கார சகோதரரே, நீங்கள் விரும்பினால் எழுந்து நில்லுங்கள். சரி. நாம் தலைவணங்குவோமாக. 193இப்பொழுது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, இந்த ஜனங்கள் வரும்பொழுது, சர்வவல்லமையுள்ள தேவனுடைய வல்லமையானது அவர்கள் கடந்து செல்லும்போது அவர்களுடைய விசுவாசத்தை உடனே உயிர்ப்பிக்கட்டும், இயேசுவின் நாமத்தில். இப்பொழுது, நல்லது, ஜெப வரிசையானது இந்த வழியில் ஆரம்பிக்கட்டும். ஊழியக்காரரே, அவர்கள் கடந்து செல்லும்போது, ஒவ்வொருவரும் அவர்கள்மீது தங்கள் கரங்களை வைக்கச் சொல்லுங்கள். இசைப்பவர் தொடர்ந்து அந்த மகத்தான வைத்தியர் என்ற பாடலை இசைத்துக்கொண்டிருக்கையில், (சகோதரன் பிரான்ஹாமும் ஊழியக்காரரும், ஜெபவரிசையில் கடந்து வருகிற ஒவ்வொருவருக்காவும், ஜெபிக்க தங்கள் கரங்களை வைக்க ஆரம்பிக்கின்றனர்- ஆசி). கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே, என் கரங்களை என் சகோதரன் மீது வைக்கிறேன். தேவனே, என் சகோதரியாகிய ரோஸல்லாவிற்கு அதை அருளும், இயேசுவின் நாமத்தினாலே. இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. (சகோதரன் பிரான்ஹாம் ஒருவரிடம், ''நீங்கள் அங்கே தங்கி, வரிசை முடியும்வரை கவனியுங்கள்'' என்று கூறுகின்றார் - ஆசி) கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே...?... அவர் தாழ்மையுள்ளவர் என்பதை ஞாபகங்கொள்ளுங்கள், தாழ்மையாய் வாருங்கள். (சகோதரன் பிரான்ஹாமின் வார்த்தைகளின் ஒரு பகுதி மட்டுமே கேட்கப்படுவதால், அவர் பேசியது முழுமையாக அச்சிட முடியாமல் உள்ளது. இங்கே ஜெப வரிசையானது ஆறு நிமிடம், இருபத்தைந்து விநாடிகள் தொடர்கிறது - ஆசி). (ஒலிநாடாவில் காலியிடம். சகோதரன் பில்லி பால் பிரான்ஹாம் ஒலி பெருக்கியிடம் வந்து, “ஜனங்களே, நீங்கள் தயவுசெய்து பின்னால் போகமுடியுமா? இந்தப் பாதையில் உள்ளவர்களே, நீங்கள் பாதையை விட்டுப் பின்புறம் செல்வீர்களா? தயவுசெய்து, பின்புறம் சென்று கொண்டேயிருங்கள். உமக்கு நன்றி. நடுப்பாதையில் உள்ளவர்களே, நீங்களும் சுற்றி வருவீர்களா?'' - ஆசி). 194(சகோதரன் பிரான்ஹாமின் வார்த்தைகளின் ஒரு பகுதி மட்டுமே கேட்கப்படுவதால், அவர் பேசியது முழுவதும் அச்சிட முடியாமல் உள்ளது. இங்கே ஜெபவரிசையானது இரண்டு நிமிடம், இருபது விநாடிகள் தொடர்கின்றது- ஆசி). சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரன் மிஷெல், உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். என் சகோதரனே, சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். என் சகோதரியே, உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே...?... உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே...?... உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே...?... உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே......... உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே...?... இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சுகத்தைப் பெற்றுக்கொள். சுகத்தைப் பெற்றுக்கொள்....?... சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சுகத்தைப் பெற்றுக்கொள்....?... சகோதரியே...?... சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அந்த சுகத்தைப் பெற்றுக் கொள். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அந்த சுகத்தைப் பெற்றுக் கொள். ஆமென். சுகத்தைப் பெற்றுக்கொள். சுகத்தைப் பெற்றுக்கொள். உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். 195(சகோதரன் பில்லி பால் பிரான்ஹாம் ஒலிபெருக்கியினிடம் வந்து, “இன்னும் யாராவது ஜெப வரிசையில் வர விரும்புகிறீர்களா? தயவு செய்து நீங்கள் வரிசைக்கு வருவீர்களா? ஜெப வரிசையில் வர யாராவது விரும்பினால், நீங்கள் தயவுசெய்து வருவீர்களா?'' என்று கூறு கிறார்-ஆசி). என் சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரி உட்ஸ் (Woods) இயேசு கிறிஸ்துவின் கரத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப்பெற்றுக்கொள். உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள்....?... சுகத்தைப் பெற்றுக்கொள்...?... சகோதரி ராபர்சன் இயேசு கிறிஸ்துவின் கரத்தினாலே சுகத்தைப் பெற்றுக்கொள். என் சகோதரனே, இயேசு கிறிஸ்துவின் கரத்தினாலே சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே...?... இயேசு கிறிஸ்துவின் கரத்தினாலே சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இவரை குணமாக்குவீராக. சகோதரியே...?... சுகத்தைப் பெற்றுக்கொள். மகனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரன், வீர்ட்ஸ் (Weerts) சகோதரனே இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரியே, இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரன்...?... உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். சகோதரனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பெற்றுக் கொள்...?... இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே..?... இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே....?... நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். என் சகோதரனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உன்னு டைய சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே...? சகோதரியே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே...? 196(சகோதரன் பில்லிபால் பிரான்ஹாம் ஒலிபெருக்கியினிடம் வந்து, ''ஜெபிக்கப்பட விரும்பினவர்கள் இவர்கள் மட்டுமா?'' என்று கேட்கிறார்- ஆசி). (சகோதரன் லீ வெயில், சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகிறார்ஆசி) சகோதரன் லீ வெயில், நீர் நேசிக்கின்றவருக்கான இந்த வேண்டுகோளை கர்த்தராகிய இயேசுவின் கரம்தாமே உமக்கு அருளுவதாக. இயேசுவின் நாமத்தில். சகோதரன், பில்லிபால் பிரான்ஹாம், சகோதரன் பிரான்ஹாமிடம் பேசுகின்றார் -ஆசி). பில்லி பால், நீ எத்தனையோ ஜெப அட்டைகளைக் கொடுத்திருக்கின்றாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இப்பொழுது உன்னுடைய சுகத்தைப் பெற்றுக்கொள். மகத்தான வைத்தியர் இப்பொழுது அருகில் இருக்கிறார் மனதுருக்கமுள்ள இயேசு சோர்வுற்ற இருதயத்திற்கு அன்பாதரவாய் அவர் பேசுகிறார் ஓ, இயேசுவின் சத்தத்தைக் கேளுங்கள் நாம் எல்லோருமாக: சேராபின் பாட்டிலே மிக இனிமையான நாமம் அழியும் மனித நாவில் மிக இனிமையான நாமம் என்றும் பாடப்படாத மிக இனிமையான மகிழ்ச்சிப்பாடல் தேவனே, இந்த அன்பான தம்பதிகள், உலகத்தில் கொண்டு வந்துள்ள ஒன்றான...?. கர்த்தாவே அவர்கள் வேண்டுகோளை அவர்கள் பெற்றுக்கொள்வார்களாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. ....?... இயேசு கிறிஸ்துவினுடைய, இப்பொழுது, எங்களுடைய சகோதரியின் எண்ணத்திலுள்ள அந்த நபரைக் குறித்த அந்த விண்ணப்பத்துடன், தேவனுடைய வல்லமை செல்வதாக. அவள் விடுவிக்கப்படுவாளாக. கர்த்தாவே, அதை அருளும். ஆமென். தேவனாகிய கர்த்தாவே, இயேசுவின் நாமத்திலே இந்த மனிதனின் விண்ணப்பத்தை அருளும். இவருக்காக நான் ஜெபிக்கின்றேன், கர்த்தாவே, என்னுடைய ஜெபத்துடன், ஆமென். 197ஓ, இது அற்புதமானதல்லவா! (சபையார் களிகூர்ந்து, “ஆமென்” என்று கூறுகின்றனர்- ஆசி) இன்று காலையிலே, இங்கே, இந்த மகத்தான அபிஷேகத்தின் கீழே வந்த ஒவ்வொருவரும் விசுவாசிப்பார்களானால்... இப்பொழுது, பெரிய மகத்தான ஏதோ ஒன்றிற்காக நோக்கிப் பார்க்க வேண்டாம். அவர் என்ன வாக்குத்தத்தம் செய்தாரோ, அந்த எளிமையான காரியத்தை மட்டும் விசுவாசிக்கவேண்டும் என்றும் நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் எல்லோரும் சேர்ந்து சொல்லுவோம். நாம் (சபையார் “நாம் என்கின்றனர்'') மகத்தான ஏதோ ஒன்றை (''மகத்தான ஏதோ ஒன்றை'') நோக்கவில்லை (”நோக்கவில்லை''). ஆனால் இயேசுவின் நாமத்தினால் (“ஆனால், இயேசுவின் நாமத்தினால்'') நாம் அவருடைய வாக்குத்தத்தைப் பெற்றுக்கொள்ளுகிறோம் (நாம் அவருடைய வாக்குத்தத்தைப் பெற்றுக்கொள்ளுகிறோம்''). அது முடிவுபெற்றுவிட்டது. அது அதை முடிவு பெறச் செய்கிறது. (சபையார் “ஆமென்” என்று கூறி, மிகுந்த சத்தமாய் களிகூறுகின்றனர்-ஆசி) ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.